MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • யோகிபாபு வீட்ல விசேஷம்!! பீஸ்ட் முதல் பிக்பாஸ் வரை... பிரபலங்கள் புடைசூழ நடந்த விழா - வைரலாகும் போட்டோஸ்

யோகிபாபு வீட்ல விசேஷம்!! பீஸ்ட் முதல் பிக்பாஸ் வரை... பிரபலங்கள் புடைசூழ நடந்த விழா - வைரலாகும் போட்டோஸ்

தமிழ் சினிமாவில் தன்னுடைய டைமிங் காமெடியால் கலக்கி வரும் நடிகர் யோகிபாபுவின் (Yogibabu) வீட்டில் நடந்த விழாவில் திரையுலக பிரபலங்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். 

1 Min read
Author : Ganesh A | Asianet News
Published : Dec 28 2021, 07:26 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

தமிழ் சினிமாவை பொறுத்தவரை தற்போது முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் யோகிபாபு. ரஜினி, அஜித், விஜய் என தமிழ் சினிமாவின் டாப் ஹீரோக்கள் அனைவருடனும் காமெடியனாக ஒரு ரவுண்ட் வந்து கலக்கிவிட்டார். 

28

கைவசம் எக்கச்சக்க படங்களை வைத்துக் கொண்டு பிசியாக வலம் வரும் யோகிபாபு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தனது திருமணத்தை மிகவும் எளிமையாக நடத்தி முடித்தார். 

38

பின்னர் பிரமாண்டமாக வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார். திடீர் என கொரோனா பிரச்சனை தீவிரமாக தலை தூக்கியதால், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கபட்டது. இதனால் வரவேற்பு நிகழ்ச்சி நடத்த முடியாமல் போனது.

48

இதையடுத்து யோகி பாபுவின் மனைவி மஞ்சு பார்கவி கர்ப்பமானார். இவரது வளைகாப்பு நிகழ்வை திரைப்பிரபலங்கள் முன்னிலையில் பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டிருந்தார் யோகிபாபு.

58

ஆனால் எதிர்பாராத விதமாக, மஞ்சு பார்கவி வளைகாப்பு நடைபெற இருந்த ஒரு நாளுக்கு முன்னதாகவே பிரசவவலி ஏற்பட்டு கடந்தாண்டு டிசம்பர் மாதம் அழகிய ஆண் குழந்தை பிறந்தது. 

68

நண்பர்களுக்கு கல்யாண சாப்பாடு தான் போடமுடியவில்லை, சீமந்தத்துக்காவது விருந்து கொடுக்கலாம் என நினைத்த யோகி பாபுவால் அதுவும் முடியாமல் போனது.

78

இந்நிலையில், தற்போது தனது மகன் விசாகனின் முதலாவது பிறந்தநாளை, தான் ஆசைப்பட்டபடி பிரம்மாண்டமாக நடத்தி முடித்துள்ளார் யோகிபாபு. இதில் தமிழ் திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

88

பீஸ்ட் பட இயக்குனர் நெல்சன், பிக்பாஸ் பிரபலம் வருண், நடிகர்கள் சிவகார்த்திகேயன், உதயநிதி, இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் என ஏராளமான பிரபலங்கள் கலந்துகொண்டு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். இந்த பிறந்தநாள் விழாவில் எடுத்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சிவகார்த்திகேயன்
உதயநிதி ஸ்டாலின்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Netflix Top 10 : இந்த வாரம் OTT-ல என்ன பார்க்கலாம்? தெறிக்கவிடும் டாப் 10 படங்களின் லிஸ்ட் இதோ!
Recommended image2
வசமாக சிக்கிய சந்திரகலா! கார்த்திக் கையில் கிடைத்த அந்த வீடியோ ஆதாரம் - இனி தப்பிக்கவே முடியாது:Karthigai Deepam Serial Update!
Recommended image3
Celebrity Weddings: கோடிக்கணக்கில் செலவு... இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த ஸ்டார் ஜோடிகளின் திருமணங்கள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved