- Home
- Cinema
- ஆபாச காட்சியில் நடிக்க... நடிகை தமன்னாவுக்கு அள்ளிக் கொடுக்கப்பட்ட சம்பளம் - ஆத்தாடி இத்தனை கோடியா?
ஆபாச காட்சியில் நடிக்க... நடிகை தமன்னாவுக்கு அள்ளிக் கொடுக்கப்பட்ட சம்பளம் - ஆத்தாடி இத்தனை கோடியா?
வெப் தொடரில் ஆபாச காட்சியில் நடித்து அதிர்ச்சி கொடுத்த நடிகை தமன்னா, அதற்காக பெரும் தொகையை சம்பளமாக வாங்கியுள்ளாராம்.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த தமன்னா, தற்போது கோலிவுட்டில் மார்க்கெட் போனதால் பாலிவுட் பக்கம் சென்றுவிட்டார். அங்கு அவருக்கு அடுத்தடுத்து வெப் தொடரில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதன்படி ஜீ கர்தா மற்றும் லஸ்ட் ஸ்டோரீஸ் 2 என அடுத்தடுத்து 2 வெப் தொடர்களில் நடித்தார் தமன்னா. இந்த இரண்டு வெப் தொடர்களும் கடந்த மாதம் ரிலீஸ் ஆகி சோசியல் மீடியாவில் பேசு பொருள் ஆனது.
இதற்கு காரணம் இந்த இரண்டு வெப் தொடர்களிலுமே நடிகை தமன்னா ஆபாசமான படுக்கையறை காட்சிகளில் நடித்திருந்தது தான். இதுவரை எந்த நடிகருடனுடன் லிப்லாக் முத்தக்காட்சியில் நடிக்கமாட்டேன் என்கிற பாலிசி உடன் இருந்து வந்த தமன்னா, லஸ்ட் ஸ்டோரீஸ் 2 வெப் தொடருக்காக அதையெல்லாம் தகர்த்தெறிந்து, தன்னுடைய காதலன் விஜய் வர்மாவுடன் லிப்லாக் முத்தக்காட்சியில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
இதையும் படியுங்கள்... அனுஷ்காவுக்கு திருமணமாக வாய்ப்பே இல்ல ராஜா... பகீர் காரணத்தை கூறி பரபரப்பை ஏற்படுத்திய பயில்வான்
அதுமட்டுமின்றி ஜீ கர்தா என்கிற வெப் தொடரில் மேலாடையின்றி நிர்வாணமாகவே படுக்கையறை காட்சியில் நடித்திருந்தார் தமன்னா. அவரின் இந்த ஓவர்டோஸ் கவர்ச்சி ரசிகர்களுக்கு மட்டுமல்லாது திரையுலகினருக்கே சர்ப்ரைஸ் ஆக இருந்தது. இப்படி உச்சக்கட்ட கவர்ச்சி வேடங்களில் நடிக்க நடிகை தமன்னா வாங்கிய சம்பள விவரம் வெளியாகி உள்ளது. அதன்படி இந்த வெப் தொடர்களில் நடிக்க அவர் ரூ.7 கோடி வரை சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது.
வழக்கமாக ஒரு படத்திற்கு ரூ.5 கோடி வரை சம்பளம் வாங்கும் தமன்னா, கவர்ச்சி தூக்கலாக நடிக்க ரூ.2 கோடி வாங்கி நடித்துள்ளார். நடிகை தமன்னா அடுத்ததாக தமிழில் ரஜினிகாந்த் உடன் ஜெயிலர் படத்தில் நடித்திருக்கிறார். இப்படம் வருகிற ஆகஸ்ட் 10-ந் தேதி திரைக்கு வர உள்ளது. இப்படத்தில் இடம்பெறும் காவாலா என்கிற பாடலில் நடிகை தமன்னா ஐட்டம் டான்ஸும் ஆடியுள்ளார். அப்பாடலின் லிரிக்கல் வீடியோ நேற்று வெளியிடப்பட்ட நிலையில், அது யூடியூப்பில் டிரெண்டாகி வருகிறது.
இதையும் படியுங்கள்... வடிவேலு காமெடி தான்டா நல்லாருக்கு... அவன நடிக்க சொல்லுடா! பிரபலம் மூலம் வைகைபுயலுக்கு தூது அனுப்பிய விஜயகாந்த்
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.