Tamannaah : சேலையில் சொக்க வைக்கும் தமன்னா...சூப்பர் கூல் போட்டோஸ் இதோ
தற்போது தீபாவளி ஸ்பெஷலாக சேலையுடன் தோன்றும் இவரது புகைப்படங்கள் வைரலாகி வருகிறது....

Tamannaah
தெலுங்கு, தமிழ், ஹிந்தி என பல மொழிகளிலும் அறியப்பட்ட முன்னணி நடிகையாக இருப்பவர் தமன்னா. இதுவரை 65 படங்களுக்கு மேல் இவர் நடித்துள்ளார். அதோடு சைமா, பிலிம்பேர் உள்ளிட்ட பல விருதுகளையும் தன் சொந்தமாக்கியுள்ளார் தமன்னா. 15 வயதில் பாலிவுட் மூலம் அறிமுகமான இவர் பின்னர் தெலுங்கு படங்களில் நடிக்க தொடங்கினார்.
Tamannaah
இதையடுத்து கேடி படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார். இதைத்தொடர்ந்து வியாபாரி, கல்லூரி, நேற்று இன்று நாளை, படிக்காதவன் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார் தமன்னா. இதில் கல்லூரி படம் இவருக்கு மிகப்பெரிய ஒப்பனிங்காக அமைந்தது. இந்த படம் மூலம் பட்டி தொட்டி எல்லாம் பிரபலம் அடைந்து விட்டார் தமன்னா.
Tamannaah
பின்னர் அயன், ஆனந்த தாண்டவம், கண்டேன் காதலை, பையா, சுறா, தில்லாலங்கடி, சிறுத்தை, கோ என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்ததன் மூலம் மேலும் பிரபலம் அடைந்தார் தமன்னா. இவருக்கு அனைத்து மொழிகளிலும் ரேட்டிங் அதிகரித்துவிட்டது. முன்னணி நடிகையாகிவிட்ட தமன்னா பாகுபலியில் அவந்திகாவாக வந்து ரசிகர்களை கவர்ந்திருந்தால்.
Tamannaah
இவரது கவர்ச்சி மற்றும் வீரம் இரண்டுமே ரசிகர்களை வெகுவாகவே வியப்பில் ஆழ்த்தி இருந்தது. டாப் 10 நடிகையாகி விட்ட இவர் தனக்கான கதைக்களத்தை தேர்ந்தெடுக்கும் முயற்சியில் ஹாரர் மூவியான பெட்ரமாக்ஸ் மற்றும் ஆக்சன் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
Tamannaah
இதன் பிறகு தமன்னாவிற்கு தமிழில் பெரிதாக வாய்ப்பு எதுவுமே இல்லை இதை தொடர்ந்து தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என சென்றுவிட்டார். பாலிவுட் பக்கம் சென்றதால் முன்பை விட அதிக கவர்ச்சி காட்டி தூள் கிளப்பி வருகிறார் தமன்னா.
Tamannaah
32 வயதுகளை கடந்து விட்ட தமன்னா தனது புகைப்படத்தால் தற்போதும் பலரையும் ஆச்சரியத்திற்குள்ளாக்கி வருகிறார். அந்த வகையில் தற்போது தீபாவளி ஸ்பெஷலாக சேலையுடன் தோன்றும் இவரது புகைப்படங்கள் வைரலாகி வருகிறது
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.