தமன்னாவின் காதலர் விஜய் வர்மாவுக்கு அரியவகை விடிலிகோ பிரச்சனை!
தமன்னா - விஜய் வர்மா ஜோடியின் திருமணம் எப்போது என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.இந்த நிலையில், விஜய் வர்மாவுக்கு அரியவகை தோல் பிரச்சனை இருப்பதாக தெரியவந்துள்ளது.
Tamannah Lover Vijay Varma
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர், தமன்னா. கோலிவுட் மற்றும் டோலிவுட் திரையுலகில் விஜய், அஜித், போன்ற பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடி போட்டுள்ளார். அதே போல் பாகுபலி படத்தில் நடிகர் பிரபாஸுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த திரைப்படம் தமன்னாவை உலக அளவில் பிரபலமாக்கியது. கடந்த ஆண்டு தமன்னா நடித்த அரண்மனை 4 திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், ஹிந்தியில் மட்டும் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற Stree 2 உட்பட 3 படங்களில் நடித்தார்.
Tamannah Movies
தற்போது கதையின் நாயகியாக Odela 2 படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதில் ஒரு பெண் சன்யாசி போல் நடிகை தமன்னா நடித்துள்ளார். இயக்குனர் அசோக் தேஜா என்பவர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் அதிகம் எதிர்பார்ப்பை கூட்டிய திரைப்படங்களில் ஒன்றாக மாறியுள்ளது. கடந்த சில வருடங்களாக, நடிகை தமன்னா தென்னிந்திய மொழிகளை விட பாலிவுட் படங்களில் நடிப்பதில் தான் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
வெளிநாட்டில் எளிமையாக 17 வது பிறந்த நாளை கொண்டாடிய அஜித் மகள் அனோஷ்கா!
Tamannah Bhatia and Vijay Varma love
இவர் கடந்த 2023-ஆம் ஆண்டு வெளியான லஸ்ட் ஸ்டோரி 2 என்கிற வெப் தொடரில் நடித்த போது, அதில் தனக்கு ஜோடியாக நடித்த, விஜய் வர்மாவை காதலிக்க துவங்கினார். இந்நிலையில் தமன்னாவின் காதலர் விஜய் வர்மா தனக்கு இருக்கும் அரிய வகை தோல் வியாதி பற்றி கூறியுள்ளார். சமீபத்தில் இவர் வலைத் தொடருக்கான விளம்பரத்தில் கலந்து கொண்ட போது... தனக்கு இருக்கும் விடிலிகோ என்ற தோல் பிரச்சனை குறித்து பேசியுள்ளார். இது தமிழில் வெண்புள்ளி என்று அழைக்கப்படுகிறது. இது தொற்று நோய் அல்ல. இதனால் தனது முகத்தில் வெள்ளைப் புள்ளிகள் தோன்றும், அவற்றை மறைக்க மேக்கப், அழகுசாதனப் பொருட்களைப் பயன்படுத்த வேண்டியிருக்கும் என்றார். இந்த விஷயத்தில் முதலில் பயந்ததாகவும் விஜய் வர்மா கூறியுள்ளார்.
Vijay Varma Affected Rare Skin disease
ஆனால் சினிமாவில் பிஸியான பிறகு, வெற்றி பெற்ற பிறகு இந்த விஷயத்தைப் பற்றி யோசிப்பதை நிப்பாட்டியதாக விஜய் வர்மா கூறினார். தமன்னா மற்றும் விஜய் வர்மா நீண்ட காலமாக காதலித்து வருகின்றனர். இந்த விஷயம் நீண்ட காலத்திற்குப் பிறகு வெளிப்பட்டது. பல பேட்டிகளில் இதை ஒப்புக்கொண்டனர். இந்த ஆண்டு விஜய் மற்றும் தமன்னா திருமணம் செய்து கொள்ளப் போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. தமன்னா முன்னணி நடிகையாக டோலிவுட்டில் ஒரு காலத்தில் கொடிகட்டிப் பறந்தார். தற்போது பாலிவுட்டில் கவனம் செலுத்தும் இந்த அழகி, தமிழ் படங்களில் நடிப்பதில்லை. விஜய் வர்மாவைப் பொறுத்தவரை, ஹைதராபாத்தில் பிறந்து வளர்ந்த அவர் பாலிவுட்டில் பிரபலமானார்.
நண்பனையே காதலித்து கரம்பிடித்த நடிகை சாக்ஷி அகர்வால்! குவியும் வாழ்த்து!
Vijay Varma Cinema Carrier
நானி நடித்த MCA படத்தில் வில்லனாக நடித்த விஜய் வர்மா, தற்போது பாலிவுட்டில் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். மிர்சாபூர் வலைத் தொடர், கல்லி பாய்ஸ், டார்லிங் போன்ற இந்தி படங்களில் தனது நடிப்பால் பாலிவுட் ரசிகர்களைக் கவர்ந்தார். இருப்பினும், படங்கள் மற்றும் வலைத் தொடர்களை விட, தமன்னா பாட்டியாவுடனான காதல் உறவின் காரணமாகவே விஜய் வர்மா தென்னிந்திய மொழி ரசிகர்கள் மத்தியிலும் அதிகம் அறியப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.