MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • T.R in Vijayakanth Movie: டி.ஆரின் ராசியால் புரட்சி கலைஞர் ஆன விஜயகாந்த்..! ரஜினியால் விஜயகாந்த் நடித்து ஹிட்டான மாஸ் மூவி..!

T.R in Vijayakanth Movie: டி.ஆரின் ராசியால் புரட்சி கலைஞர் ஆன விஜயகாந்த்..! ரஜினியால் விஜயகாந்த் நடித்து ஹிட்டான மாஸ் மூவி..!

'கூலிக்காரன்' திரைப்படம் விஜயகாந்தின் திரைப்பயணத்தில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. , விஜயகாந்திற்கு 'புரட்சி கலைஞர்' என்ற பட்டத்தைப் பெற்றுத் தந்த இந்த படம் குறித்த சுவாரஸ்யங்களை பார்ப்போம்.

2 Min read
Author : Vedarethinam Ramalingam
Published : Apr 08 2026, 10:09 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
விஜயகாந்த் படத்தில் டிராஜேந்தர்.!
Image Credit : Google

விஜயகாந்த் படத்தில் டிராஜேந்தர்.!

எப்போதுமே டி.ராஜேந்தர் மாஸ்தான். அவரை விரும்பாதவர்கள் இருக்கவே முடியாது. தமிழ் சினிமா வரலாற்றில் சில வெற்றிகளும் சாதனைகளும் தற்செயலாக அமைபவை. ஆனால் சில வெற்றிகள் திட்டமிட்டு செதுக்கப்படுபவை. ஆனால், 'கூலிக்காரன்' திரைப்படத்தின் வெற்றி என்பது ஒரு மாபெரும் ‘மேஜிக்’. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கொடுத்த சிபாரிசும், இசைப் புயல் டி.ராஜேந்தரின் உழைப்பும், கலைப்புலி எஸ்.தாணுவின் துணிச்சலும் ஒன்றிணைந்து விஜயகாந்தை ஒரு உச்ச நட்சத்திரமாக மாற்றிய அந்த சுவாரஸ்யமான பின்னணியைப் பார்ப்போம்.

26
ரஜினி கொடுத்த 'கேப்டன்' வாய்ப்பு!
Image Credit : Asianet News

ரஜினி கொடுத்த 'கேப்டன்' வாய்ப்பு!

1980-களின் இறுதியில் ரஜினிகாந்த் உச்சத்தில் இருந்த சமயம். தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, அமிதாப் பச்சன் நடித்த இந்திப் படமான 'காலியா' திரைப்படத்தின் உரிமையை வாங்கி வைத்திருந்தார். இந்தக் கதையை ரஜினியிடம் சொல்லி நடிக்க கால்ஷீட் கேட்டார். ஆனால், கதையைக் கேட்ட ரஜினி, "தாணு சார், இந்த ஆக்ஷன் ரோலுக்கு என்னைக் காட்டிலும் விஜயகாந்த் பொருத்தமாக இருப்பார் என்றும் அவருக்கு இது பெரிய திருப்புமுனையாக அமையும் என்றும் பெருந்தன்மையுடன் பரிந்துரைத்தார். அப்படி சூப்பர் ஸ்டாரால் கைமாறிய அந்த வாய்ப்புதான், விஜயகாந்திற்கு சூப்பவர் ஹிட் கொடுத்த  'கூலிக்காரன்'.

Related Articles

Related image1
காதல் காயங்களுக்கு மருந்து தடவிய டி.ராஜேந்தர்.! டிஜிட்டல் காலத்திலும் அழியாத டி.ஆர். எமோஷனல் ஹிட்ஸ்!
Related image2
விஜயகாந்த் படத்தின் பாட்டை சுட்டு டியூன் போட்ட ரஹ்மான்?! நேரில் கூப்பிட்டு கேள்வி கேட்ட கவிஞர் வாலி.! என்ன நடந்தது தெரியுமா?
36
புரட்சி கலைஞர் பட்டம் பிறந்த கதை
Image Credit : Asianet News

புரட்சி கலைஞர் பட்டம் பிறந்த கதை

விஜயகாந்திற்கு இந்த படத்திற்காக அவர் எப்போதும் வாங்குவதை விட  மூடங்கு சம்பளம் கொடுக்கப்பட்டதாம். தாணுவுக்கு விஜயகாந்தின் மீதிருந்த நம்பிக்கையே அதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், அந்தப் படத்தின் விளம்பரங்களுக்காக ஒரு அதிரடிப் பெயரைத் தேடிய தாணு, முதன்முதலாக விஜயகாந்திற்கு 'புரட்சி கலைஞர்' என்ற பட்டத்தைச் சூட்டினார். டி.ஆரின் ராசியான இசையும், தாணுவின் பிரம்மாண்ட விளம்பரமும் இணைந்து 'கேப்டன்' என்ற பிம்பத்தை நோக்கி விஜயகாந்தை நகர்த்தியது.

46
டி.ஆரின் உழைப்பை பார்த்து மெய்சிலிர்த்த விஜயகாந்த்!
Image Credit : Facebook

டி.ஆரின் உழைப்பை பார்த்து மெய்சிலிர்த்த விஜயகாந்த்!

பொதுவாக டி.ராஜேந்தர் (டி.ஆர்.) தனது சொந்தப் படங்களுக்குத் தவிர மற்றவர் படங்களுக்கு இசையமைக்க மாட்டார். ஆனால், தாணுவின் நட்பிற்காக 'கூலிக்காரன்' படத்திற்கு இசையமைக்க ஒப்புக்கொண்டார். ஸ்டூடியோவில் டி.ஆர். காட்டிய அர்ப்பணிப்பு அனைவரையும் மிரள வைத்தது. ஒரு சிறிய இசைத் துணுக்கு சரியாக வரும் வரை அவர் தூங்கவே மாட்டார். ஒருமுறை, பாடலின் ரிதம் சரியாக அமையாததால், அவரே நேரடியாக இசைக்கலைஞர்களுடன் அமர்ந்து தாளம் போட்டு ஆவேசமாக விளக்கிக் காட்டினார். அவரது அந்த 'மியூசிக் வெறியை' நேரில் பார்த்த விஜயகாந்த், "தன் படத்திற்கே இவ்வளவு மெனக்கெட மாட்டார்கள், அடுத்தவர் படத்திற்காக இவர் சிந்தும் வேர்வை அசாத்தியமானது" என்று மெய்சிலிர்த்துப் பாராட்டினார்.

56
பட்டிதொட்டியெங்கும் டி.ஆர். மேஜிக்
Image Credit : our own

பட்டிதொட்டியெங்கும் டி.ஆர். மேஜிக்

டி.ஆரின் இசையில் வெளியான பாடல்கள் அந்த ஆண்டின் மிகப்பெரிய 'சார்பஸ்டர்' ஹிட்டாக அமைந்தன.

  • “குத்து விளக்காக” - தமிழகத்தின் பட்டிதொட்டியெங்கும் திருமண வீடுகளில் இன்றும் ஒலிக்கும் கிளாசிக் பாடல்.
  • “வெச்ச குறி தப்பாது” - விஜயகாந்தின் ஆக்ஷன் ஹீரோ அந்தஸ்தை உறுதிப்படுத்திய மாஸ் சாங்.
  • “வாழ்க்கை ஒரு” மற்றும் “தொட்டதும்” போன்ற பாடல்கள் மெல்லிசை ரசிகர்களைக் கட்டிப்போட்டன.

எஸ்பிபி, எஸ்.ஜானகி, மலேசியா வாசுதேவன் ஆகியோரின் குரல்களில் டி.ஆரின் இசை ஒரு புதுயுகத்தையே படைத்தது. ஆடியோ கேஸெட்டுகள் விற்பனையில் இந்தப் படம் அப்போது ஒரு இமாலய சாதனை படைத்தது.

66
வெற்றிக் கூட்டணி: ஒரு பார்வை
Image Credit : our own

வெற்றிக் கூட்டணி: ஒரு பார்வை

இயக்குநர் ராஜசேகரின் விறுவிறுப்பான இயக்கம், விஜயகாந்தின் ஆக்ஷன், ரூபினியின் அறிமுகம், மற்றும் ஜெய்சங்கர், நாகேஷ் போன்ற ஜாம்பவான்களின் நடிப்பு என படம் முழுமையான பொழுதுபோக்கு விருந்தாக அமைந்தது. மொத்தத்தில், 'கூலிக்காரன்' திரைப்படம் என்பது ரஜினி காட்டிய வழி, டி.ஆர். சேர்த்த இசை வலிமை, தாணுவின் தயாரிப்பு நேர்த்தி என அனைத்தும் சேர்ந்து விஜயகாந்தை 'புரட்சி கலைஞராக' சிம்மாசனத்தில் அமர வைத்த ஒரு வெற்றி காவியம்!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
தமிழ் சினிமா
தமிழ் நடிகைகள்
ரஜினிகாந்த்
திரைப்படம்
திரைப்பட விமர்சனம்
சினிமா
சினிமா காட்சியகம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
மீனாவுக்கு எதிராக சதி... துரத்தி அடிக்கப்பட்ட விஜயா; அதிர்ச்சியில் முத்து - சிறகடிக்க ஆசை அப்டேட்
Recommended image2
போடி வெளிய... அறிவுக்கரசியை விரட்டும் ஈஸ்வரி; பயந்து நடுங்கும் ஆதி குணசேகரன் - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்
Recommended image3
பில் Rs 21,731.. நூடுல்ஸ் விலை 950 ரூபாய்! ஷில்பா ஷெட்டியின் பாஸ்டன் உணவகத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!
Related Stories
Recommended image1
காதல் காயங்களுக்கு மருந்து தடவிய டி.ராஜேந்தர்.! டிஜிட்டல் காலத்திலும் அழியாத டி.ஆர். எமோஷனல் ஹிட்ஸ்!
Recommended image2
விஜயகாந்த் படத்தின் பாட்டை சுட்டு டியூன் போட்ட ரஹ்மான்?! நேரில் கூப்பிட்டு கேள்வி கேட்ட கவிஞர் வாலி.! என்ன நடந்தது தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved