சிம்புவுக்கு 40 வயதில் கல்யாணம்... படு ஜோராக நடக்கும் திருமண வேலைகள் - பொண்ணு எந்த ஊர் தெரியுமா?
Simbu : தமிழ் சினிமாவில் பிசியான நடிகராக வலம் வரும் சிம்புவுக்கு வயது 40-ஐ நெருங்க உள்ளதால், அவருக்கு விரைவில் திருமணம் செய்து வைக்க பெற்றோர் முனைப்பு காட்டி வருகின்றனர்.
நடிப்பு, இயக்கம், இசையமைப்பு, பாடகர் என சினிமாவில் பன்முகத்திறமை கொண்டவராக வலம் வந்தவர் டி.ராஜேந்தர். இவரின் மகனான சிம்புவும் சிறுவயதில் இருந்தே சினிமாவில் நடித்து வருகிறார். இவரும் தனது தந்தையைப் போல் பல திறமைகளை கொண்டவாராக விளங்கி வருகிறார். சிம்புவின் சினிமா கெரியர் கடந்த 2 ஆண்டுகளில் படு வளர்ச்சி கண்டுள்ளது.
கொரோனா லாக்டவுனுக்கு முன் உடல் எடை கூடி பட வாய்ப்புகள் இன்றி தவித்து வந்த சிம்பு, அந்த லாக்டவும் சமயத்தில் தீவிரமாக உடற்பயிற்சி செய்து ஸ்லிம் ஆகிவிட்டார். இதன்பின்னர் தான் அவரது சினிமா கெரியர் சூடுபிடிக்கத் தொடங்கியது. கடந்த ஆண்டு வெங்கட் பிரபு இயக்கத்தில் அவர் நடித்த மாநாடு படம் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.
மாநாடு படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சிம்புவுக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. தற்போது அவர் நடிப்பில் வெந்து தணிந்தது காடு என்கிற திரைப்படம் உருவாகி உள்ளது. கவுதம் மேனன் இயக்கியுள்ள இப்படம் வருகிற செப்டம்பர் 15-ந் தேதி ரிலீசாக உள்ளது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இப்படத்தை ஐசரி கணேசன் தயாரித்துள்ளார்.
இதையும் படியுங்கள்... இது இல்லாவிட்டால் உடலுறவு முழுமை பெறாது...வெட்கப்படாமல் பதில் சொன்ன காஜோல்
இதுதவிர பத்துதல, கொரோனா குமார் போன்ற படங்களையும் கைவசம் வைத்துள்ளார் சிம்பு. இதில் ஒபிலி என் கிருஷ்ணா இயக்கும் பத்து தல படத்தில் கேங்ஸ்டராக நடிக்கிறார் சிம்பு. இது கன்னடத்தில் வெளியாகி வெற்றிபெற்ற முஃப்டி படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். அதேபோல் கொரோனா குமார் படத்தை கோகுல் இயக்க உள்ளார்.
இவ்வாறு பிசியான நடிகராக வலம் வரும் சிம்புவுக்கு வயது 40-ஐ நெருங்க உள்ளதால், அவருக்கு விரைவில் திருமணம் செய்து வைக்க பெற்றோர் முனைப்பு காட்டி வருகின்றனர். சிம்புவுக்கு பெண் பார்க்கும் வேலைகளில் அவரது பெற்றோரும், தங்கையும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்களாம். பெண் மயிலாடுதுறையை சேர்ந்தவராக இருக்க வேண்டும் என்பதில் அவர்கள் உறுதியாக இருக்கிறார்களாம். இதன்மூலம் நடிகர் சிம்பு விரைவில் புது மாப்பிள்ளை ஆக உள்ளது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாக கோலிவுட் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.
இதையும் படியுங்கள்... திருமண நாளன்று மனைவியுடன் ஜோடியாக போட்டோஷூட் நடத்திய சிவகார்த்திகேயன் - வைரலாகும் கியூட் கிளிக்ஸ்