- Home
- Cinema
- Swasika Vijay: முருகதாஸை பார்க்க 1 லட்சம் கேட்டாங்க; சினிமாவில் நிறைய பேர் ஏமாத்திட்டாங்க - நடிகை ஸ்வாசிகா உருக்கம்
Swasika Vijay: முருகதாஸை பார்க்க 1 லட்சம் கேட்டாங்க; சினிமாவில் நிறைய பேர் ஏமாத்திட்டாங்க - நடிகை ஸ்வாசிகா உருக்கம்
Actress Swasika Cheated for cinema opportunity : சினிமாவுக்கு வந்த ஆரம்ப காலத்தில், வாய்ப்பு தருவதாகச் சொல்லி நிறைய பேர் தன்னை ஏமாற்றியதாக நடிகை ஸ்வாசிகா விஜய் வேதனையுடன் பகிர்ந்துள்ளார். அதைப்பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Swasika Vijay fraud experience
நடிகை ஸ்வாசிகா, ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமான ஒரு முகம். சின்னத்திரையில் தனது பயணத்தைத் தொடங்கி, பின்னர் சினிமாவுக்குள் நுழைந்தவர். சிறந்த நடிகைக்கான கேரள மாநில அரசின் விருதையும் வென்றுள்ளார். சூர்யா நாயகனாக நடித்த 'கருப்பு' படத்திலும் ஸ்வாசிகா சிறப்பாக நடித்திருந்தார். அண்மையில் வெளிவந்த நூறு சாமி படத்தில் ஸ்வாசிகாவின் நடிப்பை ஒட்டுமொத்த கோலிவுட்டே கொண்டாடியது. தனது குடும்ப வாழ்க்கை பற்றி வெளிப்படையாகப் பேசுவதால், ஸ்வாசிகா அடிக்கடி சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறுவது வழக்கம்.
ஏமாற்றப்பட்ட ஸ்வாசிகா
இந்நிலையில், சினிமாவுக்கு வந்த புதிதில் தனக்கு ஏற்பட்ட மோசமான அனுபவங்கள் குறித்து ஸ்வாசிகா மனம் திறந்துள்ளார். முதல் படத்திற்குப் பிறகு சரியான வாய்ப்புகள் கிடைக்காத நிலையில், வாய்ப்பு வாங்கித் தருவதாகக் கூறி பல மேனேஜர்கள் தன்னை ஏமாற்றியதாக அவர் கூறுகிறார். ஒருமுறை, இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸை சந்திக்க வைக்கிறேன் என்று சொல்லி ஒரு லட்சம் ரூபாய் கேட்டதாகவும், அதற்காக அம்மா தன் கையில் இருந்த நகைகளை எல்லாம் கழற்றிக் கொடுத்ததாகவும் ஸ்வாசிகா வேதனையுடன் நினைவுகூர்ந்தார். சுமார் பதினைந்து வருடக் கடின உழைப்புக்குப் பிறகுதான் இப்போது இருக்கும் நிலைக்கு வந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில்தான் ஸ்வாசிகா இந்த விஷயங்களைப் பகிர்ந்துள்ளார்.
ஸ்வாசிகாவின் எமோஷனல் பேட்டி
"பதினாறு, பதினேழு வயசுல ஆரம்பிச்ச பயணம் இது. அந்த வயசுல இதையெல்லாம் புரிஞ்சுக்கிற பக்குவம் எனக்கு இல்லை. முதல் தமிழ் ஆடிஷன்லயே நான் செலக்ட் ஆகிட்டேன். அப்போ எனக்கு ஒரே ஆச்சரியம். 'அவ்வளவுதானா, ரிஜெக்ஷன்லாம் இல்லையா, எல்லாமே சூப்பரா போகுதே'ன்னு ஒரு நினைப்பு. படமும் ரிலீஸ் ஆச்சு. ஆனா, அது பெரிய அளவுல ரீச் ஆகல, எனக்கும் பெரிய அங்கீகாரம் கிடைக்கல. அப்போதான் ஏதோ சரியில்லைன்னு எனக்குத் தோணுச்சு. அந்த வயசுல அது எனக்கு பெரிய கவலையா இருந்துச்சு. ஏன்னா, படிப்பை பாதியில விட்டுட்டு, எல்லார் கிட்டயும் சண்டை போட்டுட்டுதான் சென்னைக்கு வந்தேன். எனக்காக அம்மாவும் பேசினாங்க. நான் நடிக்கிறதுல அப்போ அப்பாவுக்கு விருப்பம் இல்லை," என்று ஸ்வாசிகா கூறினார்.
நிறைய பேர் ஏமாத்திட்டாங்க
"திரும்பிப் போனா என்ன ஆகும்னு தெரியாம, தினமும் ராத்திரி உட்கார்ந்து அழுத காலம் அது. டிப்ரஷன்னு சொல்றதை விட, அந்த நிலைமை என்னன்னு கூட புரிஞ்சுக்க முடியல. கடைசியா, கண்ணுல படுற ஆடிஷன் எல்லாத்துக்கும் போக ஆரம்பிச்சோம். நிறைய மேனேஜருங்க எங்களை ஏமாத்திட்டாங்க. 'அந்த டைரக்டரைப் பார்க்கலாம், இங்க போகலாம், அங்க போகலாம்'னு சொல்லி பல இடங்களுக்குக் கூட்டிக்கிட்டுப் போனாங்க. முருகதாஸ் சாரைப் பார்க்கப் போகணும்னு சொல்லி ஒரு லட்சம் ரூபாய் கேட்டாங்க. அம்மா அங்கேயே கையில, கழுத்துல இருந்த நகையையெல்லாம் கழட்டி பணத்தை ரெடி பண்ணாங்க. ஹோட்டலுக்குப் போனா, அங்க அந்த மேனேஜர் இல்லை. கடைசியில அந்த ஹோட்டல் பில்லைக்கூட நாங்கதான் கட்ட வேண்டியதாப் போச்சு," என்றார் ஸ்வாசிகா.
ஏ.ஆர்.முருகதாஸ் பாராட்டினார்
"ஊருக்குத் திரும்பி வந்து சீரியல்கள்ல கவனம் செலுத்தினேன். சின்னச் சின்ன ரோல்ல நடிச்சேன். ஸ்டேஜ் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினேன், ஆங்கரிங் பண்ணினேன். எனக்கான வாய்ப்புக்காகக் காத்துக்கிட்டே இருந்தேன். அதுக்கு பதினைந்து வருஷம் ஆச்சு. கடைசியில அது நடந்துச்சு. இன்னைக்கு ஒரு பெரிய மேடையில ஏ.ஆர். முருகதாஸ் சார் மாதிரி ஒருத்தர் என் நடிப்பைப் பாராட்டும்போது, அந்த வட்டம் நிறைவடைஞ்ச மாதிரி ஒரு ஃபீல். அன்னைக்கு முதல் முறையா எனக்கு நானே தேங்க்ஸ் சொல்லிக்கிட்டேன், தோத்துப்போய் பின்வாங்காம தைரியமா முன்னேறி போனதுக்கு. கடவுள் புண்ணியத்துல பணம் மட்டும்தான் போச்சு, வேற எதுவும் போகல," என்று ஸ்வாசிகா நெகிழ்ச்சியுடன் முடித்தார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

