Swasika : கணவரைப் பற்றி உல்டா பேச்சு... கருப்பு பட நடிகையை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்
Swasika Vijay Faces Backlash : தன் கணவரைச் சார்ந்து வாழ்வதுதான் தனக்கு பிடிக்கும் என்றும், அவருக்காக சமைப்பது, பணத்துக்காக அவரை நம்பியிருப்பது போன்ற விஷயங்கள் தனது 'ஃபேன்டஸி' என்றும் நடிகை ஸ்வாசிகா விஜய் கூறியுள்ளார்.

Swasika Vijay Contradictory Statement
டிவி சீரியல்கள் மூலம் மீடியாவுக்குள் நுழைந்து, பிறகு சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் நடிகை ஸ்வாசிகா. மலையாளத்தில் பல முக்கிய கேரக்டர் ரோல்களில் நடித்து கைதட்டல் வாங்கிய இவர், தற்போது தமிழ் சினிமாவில் பிசியான நடிகையாக வலம் வருகிறார். சமீபத்தில் இவருக்கு திருமணம் நடந்தது. அப்போது, தினமும் காலையில் கணவரின் காலில் விழுந்து வணங்குவதாக ஸ்வாசிகா சொன்னது மலையாளத்தில் பெரும் ட்ரோல்களுக்கு வழிவகுத்தது. இந்நிலையில், இப்போது ஒரு தமிழ் பேட்டியில் கணவர் குறித்து அவர் பேசியிருப்பது மீண்டும் கவனம் ஈர்த்துள்ளது.
ஸ்வாசிகா பேசியது என்ன?
"மலையாள இன்டர்வியூக்களில் இதையெல்லாம் சொல்லி நான் நிறைய ட்ரோல்களை வாங்கியிருக்கேன். தமிழ்ல இதுவரைக்கும் அப்படி எதுவும் வரல. இங்கேயும் சொல்லி ட்ரோல் வாங்கலாம்னு இருக்கேன். நான் வீட்ல இருந்தா, என் கணவருக்கு நானே சமைச்சுக் கொடுத்து, அந்தப் பாத்திரத்தையெல்லாம் கழுவி வெச்சுட்டு, அதுக்கப்புறம் சாப்பிடறது எனக்கு ரொம்பப் பிடிக்கும். இது ஏதோ பெரிய விஷயம்னு நான் சொல்லல. ஆனா, அப்படிச் செய்யறது எனக்குப் பிடிக்கும். என்கிட்ட பேங்க் பேலன்ஸ் எல்லாம் இருக்கு. ஆனாலும், என் போன் பில் கட்டச் சொல்லி கணவர்கிட்டதான் சொல்வேன்.
என்ஜாய் பண்றேன்
எனக்குப் பணம் வேணும்னாலும் அவர்கிட்டதான் கேட்பேன். என்கிட்ட காசு இருந்தாலும், அனுப்பச் சொல்லுவேன். ஒருவேளை இதெல்லாம் என் ஃபேன்டஸியா இருக்கலாம். ஆனா எனக்கு இது பிடிச்சிருக்கு. நான் செய்யற மாதிரி எல்லாரும் வாழ்க்கையில செய்யணும்னு நான் சொல்ல மாட்டேன். அதுக்கு அவசியமும் இல்லை. ஆனா, அப்படி இருக்கிறது எனக்குப் பிடிக்கும். அதுக்கு காரணம் என்னன்னு எனக்குத் தெரியல. ஆனா பிடிச்சிருக்கு."
"இந்த Gen Z டேர்ம், அவங்களோட ரிலேஷன்ஷிப்ல இருக்கிற 'சிச்சுவேஷன்ஷிப்' என்னன்னு எனக்குத் தெரியாது. அதைப் பத்தி நான் யோசிக்கிறதும் இல்லை. என் கரியரை நான் எப்படி கவனமா கொண்டு போறேனோ, அதே மாதிரிதான் குடும்ப வாழ்க்கையையும் கொண்டு போறேன். 9 வயசுல சம்பாதிக்க ஆரம்பிச்சேன். எல்லாமே எனக்காக நானேதான் செஞ்சேன். இப்போ அது போர் அடிக்குது. எனக்கு ஏதாவது வேணும்னா கணவர்கிட்டதான் சொல்வேன். கணவரைச் சார்ந்து இருக்கிறது எனக்கு சந்தோஷமா இருக்கு. அந்த ஃபேன்டஸியை நான் என்ஜாய் பண்றேன்," என்று ஸ்வாசிகா கூறியுள்ளார்.
குவியும் கமெண்ட்ஸ்
இந்த வீடியோ வெளியான பிறகு, பலரும் கமென்ட் செய்து வந்தனர். தமிழ்நாட்டு ரசிகர்கள், "இதுல ட்ரோல் பண்ண என்ன இருக்கு? நிறைய பெண்களுக்கு இதெல்லாம் பிடிக்கும்," என்று ஆதரவாகக் கருத்து தெரிவித்தனர். ஆனால், இதைப் பார்த்த மலையாள ரசிகர்கள், "மலையாளப் பேட்டியில அவங்க இப்படிச் சொல்லவே இல்லையே. அதனாலதான் அவங்களை எல்லாரும் ட்ரோல் செஞ்சாங்க. அது தெரிஞ்சதால இப்போ கதையை மாத்தி இப்படிப் பேசுறாங்க", "அப்போ சொன்னது இது இல்லையே" என்று கமென்ட் செய்து வருகின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

