பிரம்மாண்டமாக உருவாகும் சூர்யாவின் ரோலெக்ஸ் படத்தின் மாஸ் அப்டேட் வந்தாச்சு!
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்க உள்ள ரோலெக்ஸ் திரைப்படம் குறித்த மாஸ் அப்டேட் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறாது.

சூர்யா கைவசம் உள்ள படங்கள்
கங்குவா படத்தின் தோல்விக்கு பின்னர் கம்பேக் கொடுக்க வேண்டும் என்கிற வெறியோடு இருக்கும் நடிகர் சூர்யா, தற்போது அரை டஜன் படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் அவர் நடித்துள்ள ரெட்ரோ திரைப்படம் ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இப்படத்தில் ஹீரோவாக நடித்துள்ளது மட்டுமின்றி தன்னுடைய 2டி நிறுவனம் மூலம் தயாரித்தும் உள்ளார் சூர்யா. இப்படம் வருகிற மே மாதம் 1ந் தேதி உழைப்பாளர் தினத்தன்று திரைக்கு வர உள்ளது.
சூர்யாவின் அடுத்த படம்
ரெட்ரோ படத்தை தொடர்ந்து சூர்யா நடிக்கும் பெயரிடப்படாத புதிய படத்தை ஆர்.ஜே.பாலாஜி இயக்கி வருகிறார். இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார். இப்படத்தினை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் இப்படம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்திற்கு பேட்டைக்காரன் என பெயரிடப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படியுங்கள்... Kanguva : கங்குவா படுதோல்வி; நஷ்டத்தை ஈடுகட்ட சூர்யா எடுத்த அதிரடி முடிவு
மீண்டும் ரோலெக்ஸ் ஆக சூர்யா
இந்த இரு படங்கள் தவிர்த்து மலையாளத்தில் மின்னல் முரளி பட இயக்குனருடன் ஒரு படம், தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் ஒரு படம் மற்றும் தண்டேல் பட இயக்குனருடன் ஒரு படம் என சூர்யாவின் லிஸ்ட் நீண்டுகொண்டே செல்லும் நிலையில், அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ள ரோலெக்ஸ் என்கிற எல்சியூ திரைப்படம் குறித்த மாஸ் அப்டேட் ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்க உள்ள நிறுவனம் பற்றிய அப்டேட் தான் அது.
ரோலெக்ஸ் படத்தின் அப்டேட்
அதன்படி நடிகர் விஜய்யின் ஜனநாயகன் மற்றும் யாஷ் நடிக்கும் டாக்ஸிக் ஆகிய படங்களை தயாரிக்கும் கேவிஎன் நிறுவனம் தான் சூர்யாவின் ரோலெக்ஸ் திரைப்படத்தை தயாரிக்க உள்ளதாம். விக்ரம் படத்தில் சூர்யா வந்த ரோலேக்ஸ் எனும் ஐந்து நிமிட கதாபாத்திரத்திற்கே ரசிகர்கள் ஆர்ப்பரித்த நிலையில், தற்போது அந்த கேரக்டரை வைத்து ஒரு முழு நீள படத்தை லோகேஷ் கனகராஜ் எடுக்க உள்ளதால், இப்படம் செம ஹைலைட்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்... பிரம்மாண்டத்தை வைத்து இனி பூச்சாண்டி காட்ட முடியாது! தமிழ் சினிமாவின் ஷாக்கிங் ரிப்போர்ட்