சிறுநீரை பீர் போல் குடித்ததால் நடந்த அற்புதம் - சூர்யா பட நடிகர் கூறிய அதிர்ச்சி தகவல்!
சிறுநீரை பீர் போல் 15 நாட்கள் ருசித்து குடித்ததாகவும், இதனால் தன்னுடைய உடலில் அற்புதம் ஏற்பட்டதாக பிரபல நடிகர் கூறியுள்ள தகவல் தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பரேஷ் ராவல்:
'கட்டக்' படப்பிடிப்பின்போது ஏற்பட்ட கடுமையான முழங்கால் காயத்திலிருந்து மீள்வதற்கு ஒரு விசித்திரமான பழக்கத்தை பின் பற்றியதாக நடிகர் பரேஷ் ராவல் சமீபத்தில் கொடுத்த பேட்டியில் கூறியுள்ளார்.
Fracture in Leg
காலில் ஏற்பட்ட பலத்த காயம்:
இந்த படப்பிடிப்பின்போது, ராகேஷ் பாண்டேவுடனான காட்சியில் பரேஷ் ராவலுக்கு கால் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. பின்னர் டினு ஆனந்த் மற்றும் டேனி டென்சோங்பா அவரை உடனடியாக மும்பையில் உள்ள நானாவதி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அந்த நேரத்தில் தனது சினிமா வாழ்க்கை இனி முடிந்துவிடும் என்று பயந்தாராம் பரேஷ் ராவல்.
Veer Devgan
வித்தியாசனமான ஐடியா கொடுத்த ஸ்டண்ட் இயக்குனர்:
இந்த நிலையில் தான் தனக்கு வித்தியாசனமான ஐடியா கொடுத்த ஸ்டண்ட் இயக்குனர் பற்றி பரேஷ் ராவல் அண்மையில் கொடுத்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். மறைந்த ஸ்டண்ட் இயக்குனரும், அஜய் தேவ்கனின் தந்தையுமான வீரூ தேவ்கன், பரேஷ் ராவலைப் பார்க்க மருத்துவமனைக்கு வந்து, அவரது காயத்தைப் பற்றி பற்றி விசாரித்துள்ளார். அப்போது வீரூ தேவ்கன் அதிர்ச்சியூட்டும் ஐடியா ஒன்றை கூறினாராம்.
Urine Deinked:
சிறுநீரை அருந்த கூறியுள்ளார்:
அதாவது, காலையில் எழுந்தவுடன் அவரின் சிறுநீரை அருந்த வேண்டும் என்று கூறியுள்ளார். எல்லா மல்யுத்த வீரர்களும் இதைத்தான் செய்கிறார்கள். இது உங்களை விரைவாக காயத்தை குணமடையச் செய்யும். இதனை கஷாயம் போல் ஒரு மடக்கில் குடித்துவிடாமல், பீர் குடிப்பது போல ரசித்து.. ருசித்து குடிக்க வேண்டும் என்று கூறினாராம்.
அதே நேரம் இதை நீங்கள் 15 நாட்கள் தொடர்ந்து அருந்த வேண்டும். இதை அருந்தும் போது மது, புகையிலை மற்றும் ஆட்டு இறைச்சியைத் தவிர்த்து, எளிய உணவை உட்கொள்ளுங்கள் என்று வீரூ தேவ்கன் அறிவுரை வழங்கியுள்ளார்.
Fracture Cured:
ஒன்றரை மாதங்களில் குணமடைந்து விட்டதாக தெரிவித்துள்ளார்:
பரேஷ் ராவல் தைரியமாக இந்த ஆலோசனையைப் நடைமுறை படுத்த துணிந்தார். இதை 15 நாட்கள் குடித்த பின்னர், புதிதாக எக்ஸ்ரே எடுத்து பார்த்தபோது, மருத்துவர்களும் ஆச்சரியப்பட்டனர். ஏனெனில் எக்ஸ்ரேயில் எலும்பின் மீது ஒரு வெள்ளை கோடு காணப்பட்டது, இது எலும்பு இணைந்திருப்பதைக் குறிக்கிறது. பொதுவாக இதுபோன்ற காயத்திலிருந்து மீள 2 முதல் 2.5 மாதங்கள் ஆகும், ஆனால் பரேஷ் ராவல் வெறும் ஒன்றரை மாதங்களில் முழுமையாக குணமடைந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.