- Home
- Cinema
- இயக்குனராக அறிமுகமாகும் முதல் படத்திலேயே ஆஸ்கர் வரை சென்ற சூர்யா மகள் தியா! குவியும் வாழ்த்து!
இயக்குனராக அறிமுகமாகும் முதல் படத்திலேயே ஆஸ்கர் வரை சென்ற சூர்யா மகள் தியா! குவியும் வாழ்த்து!
Diya Suriya Become Director : நடிகர் சூர்யாவின் மகள் தியா, தன்னுடைய பெற்றோர் சூர்யா - ஜோதிகா தயாரிப்பில் டாக்கு டிராமா ஒன்றை இயக்க உள்ளார். இதுகுறித்த அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.

விஜய் மகனுக்கு போட்டி:
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் தன்னுடைய முதல் படத்தை இயக்கி வருவது அனைவரும் அறிந்ததே. சஞ்சைக்கு பல படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்த போதும் கூட, தனக்கு நடிப்பில் ஆர்வம் இல்லை என்பதை வெளிப்படையாக கூறிவிட்டு, தாத்தாவை போலவே திரைப்படம் இயக்க தயாரானார். சினிமா சம்மந்தமாக லண்டனில் தன்னுடைய படிப்பை முடித்த கையேடு, படத்தின் கதையை எழுதி அதை லைகா நிறுவனத்திடம் கூற, அவர்களும் இந்த படத்தை தாங்களே தயாரிப்பதாக ஒப்புக்கொண்டனர்.
இயக்குனராகும் தியா சூர்யா:
இந்த படத்தில் நடிகர் சந்தீப் கிஷன் தான் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்த திரைப்படம் தற்போது இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. இது ஒருபுறம் இருக்க, தற்போது யாரும் எதிர்பாராத விதமாக, சூர்யாவின் மகள் தியா... ஒரு டாக்கு டிராமாவை இயக்க உள்ள தகவல் அதிகார பூர்வமாக வெளியாகி உள்ளது.
லீடிங் லைட்:
இதனை 2டி என்டர்டைன்மெண்ட் சார்பில், சூர்யா ஜோதிகா தயாரிக்க, பாலிவுட் லைட்வுமன்களை மையமாக கொண்டு இந்த டாக்கு டிராமா உருவாகிறது. இதற்க்கு “லீடிங் லைட்” என பெயரிடப்பட்டுள்ளது. சூர்யா - ஜோதிகாவின் மகள் தியா சூர்யா இப்படம் மூலம் இயக்குநராக களமிறங்கி உள்ளதால் படம் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
லீடிங் லைட்
திரையுலகிற்கு பின்னால் மறைந்திருந்து ஒளி தரும் லைட்வுமன்களை பற்றியும், பாலிவுட் உலகில் பணிபுரியும் அப்பெண்களின் அனுபவங்களை விவரிக்கும் விதமாக டாக்குமெண்ட்ரி - டிராமாவாக இப்படம் உருவாகியுள்ளது.
மாமனார் வீட்டுல சந்தோஷமா இருக்கேன்; ஏன் தனிக்குடித்தனம் போகணும்? அப்பாவிடம் வம்புக்கு சென்ற மீனா!
ஆஸ்கர் வரை சென்ற தியா:
உலகம் முழுக்க பலத்த பாராட்டுக்களை குவித்து வரும் இப்படம் oscar Qualifying Run க்காக லாஸ் ஏஞ்சல்ஸ், கலிபோர்னியாவின் Regency Theatre-இல் திரையிடப்படுகிறது. செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 2 வரை தினமும் மதியம் 12:00 மணி காட்சியாக இப்படம் திரையிடப்படுகிறது. அறிமுக இயக்கத்திலேயே, ஆஸ்கர் வரை செல்லும் இத்தகைய பெருமையை பெற்றிருக்கும் இயக்குநர் தியா சூர்யாவுக்கு, பல பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
தனுஷை அழ வைத்த பெண்; இட்லி கடை பட நிகழ்ச்சியில் நடந்த அந்த சம்பவம்!