- Home
- Cinema
- சூர்யா 45 படப்பிடிப்பில் புதிய சிக்கல் – போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்ட படப்பிடிப்பு: என்ன நடந்தது?
சூர்யா 45 படப்பிடிப்பில் புதிய சிக்கல் – போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்ட படப்பிடிப்பு: என்ன நடந்தது?
Suriya 45 Movie Chengalapattu Shooting stopped : முறையாக அனுமதியின்றி படப்பிடிப்பு நடத்தப்பட்ட நிலையில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டதாக கூறி சூர்யா 45 படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

சூர்யா 45 படப்பிடிப்பில் புதிய சிக்கல் – போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்ட படப்பிடிப்பு: என்ன நடந்தது?
Suriya 45 Movie Chengalapattu Shooting stopped : கங்குவா படத்திற்கு பிறகு சூர்யா ஒவ்வொரு படத்தையும் பார்த்து பார்த்து நடித்து வருகிறார். கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் ரெட்ரோ படத்திலும், ஆர்ஜே பாலாஜியின் சூர்யா 45 படத்திலும் நடித்து வருகிறார். கேங்ஸ்டர் கதையை மையப்படுத்திய ரெட்ரோ படத்தில் சூர்யா உடன் இணைந்து பூஜா ஹெக்டே, ஜெயராம், கருணாகரன், நாசர், பிரகாஷ் ராஜ் ஆகியோர் பலர் நடித்து வருகின்றனர். ரூ.65 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப் படம் வரும் மே 1 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
சூர்யா 45 படப்பிடிப்பில் புதிய சிக்கல் – போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்ட படப்பிடிப்பு!
இந்தப் படத்தைத் தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாகி வரும் சூர்யா 45 படத்தில் நடித்து வருகிறார். பொள்ளாச்சியில் உள்ள மாசாணி அம்மன் கோயிலில் வைத்து படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். மேலும், சுவாஸிகா, யோகி பாபு, நட்டி சுப்பிரமணியம் ஆகியோர் பலர் நடிக்கின்றனர்.
சூர்யா 45 படப்பிடிப்பில் புதிய சிக்கல் – போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்ட படப்பிடிப்பு: என்ன நடந்தது?
டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு சாய் அபாயங்கர் இசையமைக்கிறார. இந்த நிலையில் தான் இந்தப் படத்தின் படப்பிடிப்பு திடீரென்று நிறுத்தப்பட்டுள்ளது. செங்கல்பட்டியில் சூர்யா 45 படப்பிடிப்பு நடைபெற்று வந்துள்ளது. ஆனால், முறையாக அனுமதி பெறாமல் செங்கல்பட்டில் முக்கியமான இடங்களில் படப்பிடிப்பு நடந்ததாக சொல்லப்படுகிறது.
சூர்யா 45 படப்பிடிப்பில் புதிய சிக்கல் – போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்ட படப்பிடிப்பு: என்ன நடந்தது?
இதன் காரணமாக பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து தான் காவல்துறையினர் தலையிட்டு படப்பிடிப்பை நிறுத்தியதோடு படக்குழுவை முறையாக அனுமதி பெறுமாறு அறிவுறுத்தியதாக சொல்லப்படுகிறது. இதைத் தொடர்ந்து சூர்யா 45 படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எல்லாவற்றிலும் கவனமாக இருக்கும் ஆர்ஜே பாலாஜி இந்த சின்ன விஷயத்தை எப்படி கவனிக்காமல்விட்டார் என்று நெட்டிசன்கள் விமர்சிக்க தொடங்கியிருக்கிறனர்.
சூர்யா 45 படப்பிடிப்பில் புதிய சிக்கல் – போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்ட படப்பிடிப்பு: என்ன நடந்தது?
அதுமட்டுமின்றி கிட்டத்தட்ட 44 படங்களில் நடித்திருக்கும் சூர்யாவுக்கு கூட இது தெரியாது. ஒரு ஏரியாவில் படப்பிடிப்பு நடத்தப்படுகிறது என்றால் அந்த ஏரியாவில் காவல் துறையிடம் முறையான அனுமதி பெற்ற பின்னர் தான் படப்பிடிப்பு நடத்த வேண்டும். இல்லையென்றால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும். கூட்டம் அதிகமாகும் படப்பிடிப்பு பாதிக்கப்படும். இந்த நிலை தான் இப்போது சூர்யா 45 படத்திலும் நடந்திருக்கிறது.