சூர்யா படத்தை பார்த்து கதறி அழுத சூப்பர் ஸ்டார்..!! என்ன பட தெரியுமா?
பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் 'சூரரை போற்று' படத்தை பார்த்து கதறி அழுத்ததாக தெரிவித்துள்ளது, பலரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது.
சுதாகொங்கரா இயக்க, சூர்யா, மோகன்பாபு, அபர்ணா பாலமுரளி உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருந்த 'சூரரைப் போற்று திரைப்படம் கடந்த ஆண்டு நவம்பர் 12ம் தேதி வெளியாகி அனைத்து தரப்பு மக்களாலும் கொண்டாடப்பட்டது.
மாறா நெடுமாறன் ராஜாங்கம், என்ற கதாப்பாத்திரமாகவே சூர்யா அவர்கள் படத்தில் வாழ்ந்திருந்தார். அந்த கதாப்பாத்திரத்தின் வாழ்க்கைப் பயணமே 'சூரரைப் போற்று' படமாக உருப்பெற்றது. ஏழை, எளிய மக்களும் விமானத்தில் பயணம் செய்ய வேண்டும் என்ற தனது லட்சியத்தை அடைய ஒரு சாதாரண மனிதன் உலகின் பெரு முதலாளிகளுடன் நடத்திய போராட்டமே சூரரைப் போற்று என கொண்டாடப்பட்டது.
ஏர் டெக்கான் நிறுவனத்தின் அதிபர் கேப்டன் ஜி.ஆர். கோபிநாத் அவர்களின் வாழ்வில் நடந்த சில சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு 'சூரரைப் போற்று' திரையாக்கம் செய்யப்பட்டிருந்தது. 78வது கோல்டன் குளோப் விருது வழங்கும் நிகழ்வில் பத்து இந்திய மொழி திரைப்படங்கள் மட்டும் திரையிடப்பட்டன. அதில் சூரரைப் போற்று திரைப்படமும் ஒன்று.
மேலும் 93வது ஆஸ்கர் அகாடமி விருதுக்கான போட்டியிலும் 'சூரரைப் போற்று' திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
IMDB தளம் தொடங்கப்பட்ட கடந்த முப்பது ஆண்டுகளில் 9.1 சதவீதம் அளவிற்கு அதிக மதிப்பெண்களைப் பெற்ற ஒரே இந்திய மொழித் திரைப்படம் 'சூரரைப் போற்று' மட்டுமே. 'சஷாங் ரிடம்ஷ்ன்', 'காட் பாதர்' என்ற உலகத் திரைப்பட வரிசையில் மூன்றாவதாக 'சூரரைப் போற்று' இடம்பெற்று இந்தியாவுக்கே பெருமை சேர்த்துள்ளது.
இத்தகைய பெருமை வாய்ந்த 'சூரரைப் போற்று' திரைப்படம், பிரம்மாண்டத் தயாரிப்பாக இந்தியிலும் வெளிவர இருக்கிறது. தமிழில் இயக்கிய சுதா கொங்கராவே இந்தியிலும் இயக்க, நடிப்பில் தேர்ந்த பிரபலமான நடிகர் நடிகையர் நடிக்க இருக்கிறார்கள். சூரரைப் போற்று இந்தி திரைப்படத்தை: சூர்யா, ஜோதிகா, ராஜசேகர் பாண்டியன் தலைமையிலான 2D என்டெர்டெய்ன்மென்ட் மற்றும் அபண்டன்ஷியா என்டர்டெய்ன்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர்.
சமீபத்தில் தான் இந்த அறிவிப்பு வெளியான நிலையில், தற்போது இந்த படத்தை பார்த்து அழுது விட்டதாக நடிகர் அமிதாப்பச்சன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது, நேற்றைய இரவு எனக்கு கனமாக இருந்தது. தென்னிந்திய சூப்பர் ஸ்டார் சூர்யாவின் 'சூரரை போற்று' திரைப்படம் கையிலே ஆகாசம் பாடலை பார்த்து உடைத்து அழுது விட்டேன் என உணர்வு பூர்வமாக தெரிவித்துள்ளார்.