3 நாட்களில் இத்தனை கோடியா? அதிக வசூல் குவித்த First Tamil Movie என்ற சாதனை படைத்த Coolie!
ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் கூலி படம் 3 நாட்களில் எத்தனை கோடி வசூல் குவித்துள்ளது என்று பார்க்கலாம்.

ரஜினிகாந்த் கூலி
வரலாற்றில் முதல் முறையாக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் காம்பினேஷனில் உருவான படம் தான் கூலி. முழுக்க முழுக்க ஆக்ஷன் த்ரில்லர் கதையில் உருவாக்கப்பட்ட இந்தப் படம் கடந்த 14 ஆம் தேதி வெளியானது. முதல் நாளில் கலவையான விமர்சனங்களை எதிர்கொண்ட கூலி படம் 2ஆவது நாள் முதல் நேர்மறையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. ரசிகர்களும் குடும்பம் குடும்பமாக கூலி படத்தை பார்த்து வருகின்றனர்.
கூலி கலெக்ஷன்
ரஜினிக்கான படமாகவே கூலி படம் உருவாக்கப்பட்டது என்று இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூறியிருந்தார். இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. ரூ.400 கோடி பட்ஜெட் வரையில் இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும், படம் வெளியாவதற்கு முன்னதாக கூலி வெளிநாடுகளில் டிக்கெட் முன் பதிவின் மூலமாகவே தயாரிப்பாளருக்கு லாபத்தை பெற்றுக் கொடுத்துள்ளது என்று செய்திகள் வெளியானது.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் கூலி முதல் நாள் வசூல்
அதுமட்டுமின்றி கூலி படம் ரூ.1000 கோடி வசூல் குவிக்கும் என்று பலரும் கருத்து தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் தான் படம் வெளியா முதல் ரூ.170 கோடி, 160 கோடி என்று செய்திகள் வெளி வந்த நிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் கூலி முதல் நாள் வசூல் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி ரஜினிகாந்த் சாதனை படைப்பவர் மட்டுமின்றி சாதனையை முறியடிப்பவர் என்று குறிப்பிட்டு உலகம் முழுவதும் ரூ.151 கோடி வரையில் வசூல் குவித்துள்ளது என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இது 'லியோ' படத்தின் முதல் நாள் வசூல் சாதனையான ரூ.148 கோடியை முறியடித்து, தமிழ் சினிமாவில் முதல் நாளில் அதிக வசூல் செய்த திரைப்படம் என்ற சாதனையை 'கூலி' படைத்துள்ளது.
கூலி' உலகளவில் ₹230 கோடி வசூலித்துள்ளதாக தகவல்கள்
வெளியான இரண்டு நாட்களில் 'கூலி' உலகளவில் ₹230 கோடி வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவில் இரண்டு நாட்களில் ரூ.118.5 கோடி வசூலித்துள்ளது. மூன்று நாட்களில் இந்தியாவில் ரூ.158.25 கோடிக்கு மேல் வசூலித்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் தான் கூலி படம் வெளியாகி 3 நாட்களில் மட்டும் உலகளவில் ரூ.300 கோடியை எட்டியதாக வர்த்தக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதன் மூலமாக மிக வேகமாக ரூ.300 கோடியை எட்டிய முதல் தமிழ் படம் என்ற சாதனையையும் கூலி படைத்துள்ளது.
அதிக வசூல் செய்த முதல் தமிழ்த் திரைப்படம்
இருந்தபோதிலும், சன் பிக்சர்ஸ் நிறுவனம் கூலி படத்தின் 3 நாட்கள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. அதுவரையில் கூலி படத்தின் வசூல் எல்லாமே தகவல் தான். 'கூலி' திரைப்படம், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் 8.75 மில்லியன் டாலருக்கும் அதிகமாக வசூலித்து, அதிக வசூல் செய்த முதல் தமிழ்த் திரைப்படம் என்ற சாதனையைப் படைத்துள்ளது. என்னதான் கலவையான விமர்சனங்களை எதிர்கொண்டாலும் கூலியின் வசூல் அதிகரித்து வருகிறது. இனி வரும் நாட்களிலும் விடுமுறை வருவதால் கூலியின் வசூல் மேலும் அதிகரிக்க கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.