MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொடரும் சூப்பர் ஸ்டாரின் ஆன்மீக பயணம்; அயோத்தியில் தரிசனம் - ரஜினிகாந்த் சொன்ன அந்த மூன்று வார்த்தைகள்!

தொடரும் சூப்பர் ஸ்டாரின் ஆன்மீக பயணம்; அயோத்தியில் தரிசனம் - ரஜினிகாந்த் சொன்ன அந்த மூன்று வார்த்தைகள்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் ஜெயிலர் பட வெற்றியை தொடர்ந்து தனது ஆன்மீக பயணத்தை துவங்கினார். இந்நிலையில் அதில் ஒரு பகுதியாக தற்பொழுது அயோத்திக்கு சென்று அவர் அங்கு தரிசனம் செய்துள்ளார்.

2 Min read
Ansgar R
Published : Aug 22 2023, 10:46 AM IST| Updated : Aug 22 2023, 10:47 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Jailer movie poster

Jailer movie poster

நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகி உலக அளவில் பெரும் வசூல் சாதனைகளை படைத்து வருகின்றது. தமிழ் திரையுலகம் மட்டும் அல்லாமல், இந்திய திரையுலகை சேர்ந்த பல முன்னணி நடிகர்கள் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

புறம்போக்கு நிலங்களை வளைத்து போட்டு கொடைக்கானலில் சொகுசு வீடு கட்டும் பிரகாஷ் ராஜ், பாபி சிம்ஹா? மக்கள் புகார்

24
Rajinikanth in Himalayas

Rajinikanth in Himalayas

இந்நிலையில் ஜெயிலர் பட ரிலீசுக்கு முன்பாக சுமார் நான்கு ஆண்டுகள் கழித்து தனது இமாலய பயணத்தை அவர் துவக்கினார் ரஜினி. இமயமலையில் உள்ள பல பகுதிகளுக்கு சென்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் அங்கு தியானம் மேற்கொண்டது அனைவரும் அறிந்ததே. அதன் பிறகு உத்தரபிரதேச மாநிலத்திற்கு சென்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் அம்மாநில முதல்வரை சந்தித்து அவர் காலில் விழுந்து வணங்கி ஆசி பெற்றது விவாதப்பொருளாக மாறியது. அதன் பிறகு தொடர்ச்சியாக பல அரசியல் பிரபலங்களை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சந்தித்து வந்தார். 

34
Rajinikanth with UP CM Yogi

Rajinikanth with UP CM Yogi

இதனையடுத்து யோகிகள், சாமியார்கள் போன்ற துறவிகள், வயதில் சிறியவர்களாக இருந்தாலும் அவர்கள் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெறுவது எனது வழக்கம் என்று கூறி, சூப்பர் ஸ்டார் தன் மீது வைக்கப்பட்டிருந்த விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்திருந்த நிலையில் தொடர்ச்சியாக அவர் பல்வேறு அரசியல் தலைவர்களை சந்தித்து வருகின்றார்.

44
Rajinikanth in Ayodhya Temple

Rajinikanth in Ayodhya Temple

இந்த சூழலில் தனது ஆன்மீக பயணத்தின் ஒரு பகுதியாக ராமர் கோவிலுக்கு சென்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் மற்றும் அவருடைய துணைவியார் லதா ரஜினிகாந்த் ஆகிய இருவரும், அங்கு சாமி தரிசனம் செய்தனர். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களிடம் இந்த பயணத்தை குறித்து கேட்ட பொழுது "Excellent, superb, magnificent" என்ற மூன்று வார்த்தைகளில் பதில் அளித்தார்.

காக்கி சட்டைக்காரரையும் கவர்ந்த காவாலா.. மரண குத்து குத்திய Mumbai Cop - மீண்டும் ட்ரெண்டிங்கில் தமன்னா!

About the Author

AR
Ansgar R
யோகி ஆதித்யநாத்
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved