கெத்தா... ஸ்டைலா... தனி விமானத்தில் ஐதராபாத் புறப்பட்ட ரஜினிகாந்த்... வைரல் போட்டோஸ்...!
First Published Dec 13, 2020, 3:46 PM IST
ரஜினிகாந்த் தனி விமானம் மூலமாக அண்ணாத்த படப்பிடிப்பில் பங்கேற்க ஐதராபாத் கிளம்பினார்.

'தர்பார்' படத்திற்கு பிறகு சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் ''அண்ணாத்த''. இதில் குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், சூரி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தின் முதல் இரண்டு கட்ட ஷூட்டிங் ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வந்த நிலையில், உலகம் முழுவதையும் உச்சகட்ட அச்சத்தில் வைத்துள்ள கொரோனா பீதியால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.
Today's Poll
எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?