MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • "அந்த" சர்வேயில் "தலைவர்" தான் டாப்பு; 2 முறை போட்டியிட்டும் தோல்வியை தழுவிய "தளபதி" - எதில் தெரியுமா?

"அந்த" சர்வேயில் "தலைவர்" தான் டாப்பு; 2 முறை போட்டியிட்டும் தோல்வியை தழுவிய "தளபதி" - எதில் தெரியுமா?

Rajini Vs Vijay : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 2023ம் ஆண்டு முதல் இப்பொது வரை 1 படம் மட்டுமே ரிலீஸ் செய்துள்ள நிலையில், தளபதி விஜய் 2 படங்களை வெளியிட்டுள்ளார்.

3 Min read
Author : Ansgar R
Published : Oct 07 2024, 04:52 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Rajinikanth

Rajinikanth

கடந்த 2023ம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி உலக அளவில் சுமார் 640 கோடி ரூபாய் வசூல் செய்தது நெல்சன் திலீப் குமாரின் "ஜெயிலர்" திரைப்படம். தமிழ் சினிமாவை பொறுத்தவரை "ஜெயிலர்" திரைப்படம் ரிலீஸ் ஆகி, ஒரு வருட காலம் முடிந்துவிட்ட நிலையிலும் கூட, இன்னும் அந்த திரைப்படம் தான் உலக அளவில் அதிக வசூல் செய்த திரைப்படமாக திகழ்ந்து வருகிறது. ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியின் கதாபாத்திரத்தை ஏற்று நடித்து அந்த திரைப்படத்தில் அசத்தியிருப்பார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். 

அதுமட்டுமல்லாமல் அந்த திரைப்படத்தில் மலையாள திரையுலக நடிகர் மோகன்லால், கன்னட திரையுலக நடிகர் சிவராஜ் குமார், பாலிவுட் நடிகர் ஜாக்கி உள்ளிட்டோர் கேமியோ கதாபாத்திரங்களில் நடித்து அசத்தியிருந்தனர். விரைவில் அந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகமும் உருவாக அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. தற்பொழுது கூலி திரைப்படத்தில் நடித்து வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அப்பாடப் பணிகளை முடித்தவுடன் சில கால ஓய்வுக்குப் பிறகு, ஜெயிலர் பட்டத்தின் 2ம் பாகத்தில் தான் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

விமான சாகசம் பார்க்க போய் பலியானவர்களுக்கு ஆறுதல் சொன்ன கையோடு அரசுக்கு விஜய் வைத்த குட்டு!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Leo Movie

Leo Movie

இதற்கிடையில் அதே 2023ம் ஆண்டு பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி விஜய் இரண்டாவது முறையாக இணைந்த திரைப்படம் தான் "லியோ". மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான அந்த திரைப்படமும் உலக அளவில் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்தது. இந்த திரைப்படத்திலும் கேமியோ கதாபாத்திரத்தில் பல சிறந்த நடிகர்கள் நடித்திருந்தனர். அதிலும் குறிப்பாக இந்த படத்தின் கிளைமாக்ஸ் கட்சியில், உலக நாயகன் கமல்ஹாசன், தொலைபேசியில் தளபதி விஜய் தொடர்பு கொண்டு பேசுவது போன்று அமைக்கப்பட்ட காட்சிகள் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்றது. 

லோகேஷ் கனகராஜின் "சினிமாடிக் யுனிவர்சுக்குள்" இந்த திரைப்படம் அமைக்கப்பட்டு இருந்தது. நிச்சயம் லியோ படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் என்று பலரும் எண்ணிய நிலையில் தான், சினிமா துறையை விட்டு விலகுவதாக தளபதி விஜய் அறிவித்திருக்கிறார். ஆகவே இனி லியோ படத்தின் இரண்டாம் பாகம் உருவாக வாய்ப்புகள் இல்லை என்பது, தளபதி விஜயை திரைத்துறையில் பெரிய அளவில் ரசிக்கும் ரசிகர்களுக்கு மிகப்பெரிய கவலையை கொடுத்துள்ளது என்றே கூறலாம்.

34
GOAT Movie

GOAT Movie

இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் தல அஜித் கடந்த 2023 ஆம் ஆண்டு ஜெய்லர் மற்றும் துணிவு ஆகிய திரைப்படங்களை வெளியிட்ட பிறகு இன்னும் தங்களுடைய அடுத்த திரைப்படத்தை வெளியிடாமல் இருக்கும் நிலையில், தளபதி விஜய் 2023ம் ஆண்டில் லியோ படத்தை வெளியிட்ட பிறகு இந்த 2024ம் ஆண்டிலும் தனது கணக்கை தொடங்கியிருக்கிறார். கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி உலக அளவில் தளபதி விஜயின் 68 வது திரைப்படமாக வெங்கட் பிரபு இயக்கத்தில் "தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்" திரைப்படம் வெளியானது. 

உண்மையில் திரையரங்குகளில் இந்த திரைப்படத்தை பார்த்த தளபதி விஜயின் ரசிகர்களுக்கு ஒரு விருந்தாகவே இந்த திரைப்படம் அமைந்தது. குறிப்பாக இந்த திரைப்படத்தின் முதல் காட்சியிலேயே மறைந்த அரசியல் தலைவரும், நடிகருமான கேப்டன் விஜயகாந்த் தோன்றியது அவருடைய ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஆச்சரியத்தையும், இன்ப அதிர்ச்சியையும் கொடுத்தது. மேலும் பிரபல நடிகர் சிவகார்த்திகேயன், கிரிக்கெட் வீரர் தோனி, பிரபல நடிகை திரிஷா உள்ளிட்டவர்கள் கேமியோ கதாபாத்திரத்தில் இந்த திரைப்படத்தில் நடித்து அசத்தியிருந்தனர். விரைவில் இந்த திரைப்படத்திலிருந்து சில டெலீட்டட் காட்சிகளையும் வெளியிட வெங்கட் பிரபு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் உலக அளவில் 500 கோடி ரூபாயை தாண்டி "தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்" திரைப்படம் மிகப்பெரிய வெற்றிகளை பெற்று வருகிறது.

44
rajini vs vijay

rajini vs vijay

இந்த சூழலில் "புக் மை ஷோ" நிறுவனத்தின் மூலம், கடந்த 2023ம் ஆண்டு நடுப்பகுதியில் இருந்து 2024ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை புக்கிங் நடைபெற்றதால் சாதனை படைத்த திரைப்படங்கள் குறித்த பட்டியல் வெளியாகி இருக்கிறது. இதில் பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் "ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்" திரைப்படம் சுமார் 80 ஆயிரம் டிக்கெட்டுகளை பெற்று பத்தாவது இடத்தில் இருக்கிறது. மேலும் தங்கலான், அயலான், அரண்மனை 4, மகாராஜா, இந்தியன் 2 மற்றும் ராயன் என்று ஒன்பதாம் இடத்தில் இருந்து நான்காம் இடம் வரை மேலே குறிப்பிட்ட படங்கள் இடம்பெற்றது. 

இந்த நிலையில் இப்பட்டியலில் தளபதி விஜயின் "தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்" திரைப்படம் 4.51 மில்லியன் டிக்கெட்டுகள் விற்பனையாகி மூன்றாம் இடத்தில் இருக்கிறது. அதேபோல கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான தளபதி விஜயின் "லியோ" திரைப்படம் சுமார் 7.30 மில்லியன் டிக்கெட்டுகள் விற்பனையாகி இரண்டாம் இடத்தை பிடித்துள்ள நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் "ஜெயிலர்" திரைப்படம் சுமார் 9.21 மில்லியன் டிக்கெட்டுகள் விற்பனையாகி முதல் இடத்திலேயே இருந்து வருகின்றது. இனி எதிர்வரும் திரைப்படங்கள் இந்த சாதனையை முறியடிக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே.. சீரியலில் நடிக்கும் இவர்கள் எல்லாம் சகோதர - சகோதரிகளா?

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

AR
Ansgar R
லோகேஷ் கனகராஜ்
ரஜினிகாந்த்
தளபதி விஜய்
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
(47.0 ov) 329 & 140/4
AUSAUS
429
Day 3
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
ரத்தமும் சதையுமான மான்ஸ்டர் சேஸிங், திகில் விருந்து: ரூ.1,500 கோடி பாக்ஸ் ஆபீஸ் வசூல் வேட்டை; பாக்ஸ் ஆபிஸை புரட்டிப் போட்ட ஹோப்!
Recommended image2
Bigg Boss : டாஸ்குகளில் மைனிங் மாஃபியாஸை கதறவிட்ட கெள பாய்ஸ்... தன்யா - ஜேசன் இடையே வெடித்த மோதல்
Recommended image3
Top 5 Rewatchable Tamil Movies : எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத டாப் 5 தமிழ் படங்கள்...!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved