MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே.. சீரியலில் நடிக்கும் இவர்கள் எல்லாம் சகோதர - சகோதரிகளா?

இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே.. சீரியலில் நடிக்கும் இவர்கள் எல்லாம் சகோதர - சகோதரிகளா?

திரைப்படங்களில் எப்படி சில சகோதர - சகோதரிகள், நடித்து வருகிறார்களோ அதே போல் சில அண்ணன் - தங்கை மற்றும் அக்கா - தம்பிகள் சீரியலிலும் நடித்துள்ளனர். அவர்கள் யார் யார் என்பதை இந்த பதிவில் பார்ப்போம் 

2 Min read
Author : manimegalai a
| Updated : Oct 07 2024, 04:00 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
Tinkku Soniya

Tinkku - Soniya

வெள்ளித்திரையில் குழந்தை நட்சத்திரங்களாக அறிமுகமாகி, பின்னர் சீரியல் மூலம் இல்லத்தரசிகள் மனதை கவர்ந்தவர்கள் தான் சோனியா மற்றும் டிக்கு. சோனியா தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மீனா தொடரில் நடித்து வருகிறார். ஆனால் டிக்கு சீரியலில் சம்பாதித்த பணத்தை தொழிலில் முதலீடு செய்து, தன்னுடைய பிஸ்னஸை கவனித்து வருகிறார். இவர்கள் இருவரும் அண்ணன் தங்கை என்பது பலருக்கும் தெரியாத ஒன்று.

27
Devi Kirupa And Siddharth

Devi Kirupa And Siddharth


தேவி கிருபா - சித்தார்த்:

ஆனந்தம் தொடர் மூலம் அறிமுகமானவர் நடிகை தேவி கிருபா. இதை தொடர்ந்து மாமா மாப்ள, தென்றல், கல்யாண பரிசு உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்திருந்தார். குறிப்பாக தென்றல் தொடரில் புஜ்ஜி என்கிற கதாபாத்திரம் இவரை மிகவும் பிரபலமடைய வைத்தது. இவரை தொடர்ந்து இவருடைய தம்பி சித்தார்த்தும் தெய்வமகள் என்கிற ஒரே ஒரு சீரியலில் மட்டுமே நடித்தார். இவரின் நடிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்த போதிலும் சில காரணங்களால் தொடர்ந்து இவரால், சீரியலில் நடிக்க முடியாமல் போனது.

அட்ரா சக்க! 24 மணிநேரத்தில் வெளியே போக தயார்; கெத்தாக ஆட்டத்தை ஆரம்பித்த ஜாக்குலின்!

37
Mithra Kurian And Danny Kurian

Mithra Kurian And Danny Kurian

மித்ரா குரியன் - டானி குரியன்

மலையாள நடிகையான மித்ரா குரியன், காவலன் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தவர். இதை தொடர்ந்து சாது மிரண்டா, சந்தித்ததும் சிந்தித்தும், நந்தனம் போன்ற திரைப்படங்களில் நடித்தார். சினிமா வாய்ப்பு கிடைக்காத நிலையில் சீரியலில் களமிறங்கினார். தமிழில் பிரியசகி, அழகு போன்ற சீரியல்களில் நடித்தார். இவருடைய தம்பி டானி குரியன் சில மலையாள சீரியல்களில் நடித்து பிரபலமானவர்.
 

47
Sindhu - Sanjeev

Sindhu - Sanjeev

சிந்து - சஞ்சீவ் 

சிந்து 1990-களில் பட படங்களில் முக்கிய வேடத்தில் நடித்து பிரபலமானவர். திருமணம் ஆன பின்னர் வெள்ளித்திரையில் வாய்ப்புகள் குறைந்ததால் சின்னத்திரை சீரியல்களில் நடிக்க துவங்கினார். இவரை தொடர்ந்து இவருடைய சகோதரர் சஞ்சீவ் சீரியலில் நடிக்க துவங்கிய நிலையில், பல சீரியல்களில் கதாநாயகனாகவும் முக்கிய வேடத்திலும் நடித்துள்ளார். குறிப்பாக தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மஹாலட்சுமி சீரியலில் நடித்து வருகிறார். அதே போல் 30-க்கும் மேற்பட்ட படங்களிலும் குணசித்ர வேடத்தில் நடித்துள்ளார்.

கனவோடு வந்து.. கண்ணீரோடு வெளியேறிய முதல் பிக்பாஸ் போட்டியாளர் இவர் தான்!

57
Suriya Kiran And Sujitha

Suriya Kiran And Sujitha

சூரிய கிரண் - சுஜிதா:

சூரிய கிரண் மற்றும் சுஜிதா இருவருமே தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பின்னர் பிரபலமானவர்கள். சூரிய கிரண் சிறிய வயதில் நடிப்பில் கவனம் செலுத்தி இருந்தாலும்.. பின்னர் இயக்குனராக மாறியவர். தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர், கடந்த 2020-ஆம் ஆண்டு உயிரிழந்தார். இவரின் தங்கை சுஜிதா சில திரைப்படங்களில் ஹீரோக்களுக்கு தங்கையாக நடித்தார். பின்னர் சீரியல்களில் நடிக்க துவங்கினர். இவர் விஜய் டிவியில் நடித்த பாண்டியன் ஸ்டோர் சீரியல் மிகவும் பிரபலம்.

67
Aishwarya Rajesh and Manikandan Rajesh

Aishwarya Rajesh and Manikandan Rajesh

ஐஸ்வர்யா ராஜேஷ் - மணிகண்டன் ராஜேஷ்:

ஐஸ்வர்யா ராஜேஷ் வெள்ளித்திரையில் முன்னணி நடிகையாக இருந்தாலும், இவர் சினிமா கேரியருக்கு பிள்ளையார் சுழி போட்டது என்னவோ சின்னத்திரை மூலம் தான். தொகுப்பாளர், டான்ஸர் என தன்னுடைய கேரியரை டெவலப் செய்து பின்னர் சினிமாவில் நடிக்க துவங்கி பல சவால்களை கடந்து சாதித்தார். ஐஸ்வர்யா ராஜேஷை போலவே இவருடைய அண்ணன், மணிகண்டனும் சின்னத்திரையில் தன்னுடைய கேரியரை சீரியல் நடிகராக  துவங்கியவர். தற்போது வெள்ளித்திரையில் நடிகராக தொடர்ந்து முயற்சி செய்து வருகிறார்.

பிக்பாஸ் ஷூட் முடிந்ததும் BMW காரை பரிசாக கொடுத்த விஜய் சேதுபதி - யாருக்கு தெரியுமா?

77
Akshitha and Avinash

Akshitha and Avinash

அவினாஷ் - அக்ஷிதா:

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் அமிர்தா கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் அக்ஷிதா. இவரை போலவே இவருடைய சகோதரர் அவினாஷும் ஒரு நடிகர் தான். அழகு சீரியலில் அறிமுகமான அவினாஷ் தற்போது.. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் வீட்டுக்கு வீடு வாசல்படி தொடரில் இரண்டாவது நாயகனாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
தமிழ் சீரியல்
விஜய் தொலைக்காட்சி

Latest Videos
Recommended Stories
Recommended image1
யோகி பாபுவின் புதிய காமெடி டிராமா! ரவி மோகன் ஸ்டுடியோஸின் 'An Ordinary Man; தயாரிப்பாளரான கெனிஷா!
Recommended image2
தங்கமயிலின் விஸ்வரூபம்! பாண்டியன் குடும்பத்தை பழிவாங்க துடித்த அம்மா பாக்கியத்திற்கு கொடுத்த மரண அடி!
Recommended image3
கார்த்திகை தீபம் மெகா ட்விஸ்ட்: திருடி பட்டம் கட்டிய ஊர் மக்கள்.. மருமகனை போட்டுத்தள்ள துணிந்த மாமியார்; நகை கிடைத்ததா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved