சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதி..! பரபரப்பு அறிக்கை..!
ரத்த அழுத்தத்தில் ஏற்பட்ட மாறுபாடு காரணமாக ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படத்தின் ஷூட்டிங் கொரோனா பிரச்சனை காரணமாக நிறுத்தப்பட்டிருந்தது. ஜனவரி மாதம் முதல் ரஜினி தீவிர அரசியலில் ஈடுபட உள்ளதால் அண்ணாத்த படத்தை முடித்துக் கொள்ள தீர்மானித்தார்.
இதற்காக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நயன்தாரா உள்ளிட்ட படக்குழுவினர் தனிவிமானம் மூலமாக சென்னை டூ ஐதராபாத் பறந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலானது. படவேலைகளை விரைவில் முடிக்க தீர்மானித்த ரஜினி தினமும் 14 மணி நேரம் நடித்து வந்தார்.
இந்நிலையில் படக்குழுவை சேர்ந்த 4 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து உடனே படப்பிடிப்பை நிறுத்திவிட்டனர்.
இதையடுத்து சூப்பர் ஸ்டாருக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் நெகட்டீவ் என ரிசல்ட் வந்தது அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
ரஜினிக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதால், சென்னையில் இருந்து சென்றுள்ள மருத்துவர்கள் குழு அவரை தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஹைதராபாத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளார்.
அவருக்கு எந்த ஒரு கொரோனா அறிகுறியும், பாதிப்பும் இல்லை என்றாலும், ரத்த அழுத்தத்தில் ஏற்பட்ட மாறுபாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவரை மருத்துவ குழுவினர் தீவிரமாக கண்காணித்து வரும் நிலையில் ரத்த அழுத்தம் சீரான பின்னர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என மருத்துவமனை தரப்பில் இருந்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் தற்போது அவர் உடல் நிலை சீராக உள்ளது என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.