- Home
- Cinema
- பிக்பாஸ் சீசன் 6-ல் போட்டியாளராக களமிறங்க உள்ள புஷ்பா பட பாடகி... அட இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!
பிக்பாஸ் சீசன் 6-ல் போட்டியாளராக களமிறங்க உள்ள புஷ்பா பட பாடகி... அட இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!
கமல்ஹாசன் தொகுத்து வழங்க உள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசனில் பிரபல பாடகி ஒருவர் போட்டியாளராக கலந்துகொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

வட இந்தியாவில் பேமஸான பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 2017-ம் ஆண்டு தமிழிலும் தொடங்கப்பட்டது. தமிழில் இந்நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். முதல் சீசனிலேயே பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சம் இல்லாமல் இருந்ததால் இந்நிகழ்ச்சி மக்கள் மத்தியில் பேமஸ் ஆகிவிட்டது. இந்த சீசனில் ஆரவ் டைட்டில் வின்னர் ஆனார்.
இதையடுத்து நடத்தப்பட்ட இரண்டாவது சீசனில் ரித்விகாவும், மூன்றாவது சீசனில் முகென் ராவும், நான்காவது சீசனில் ஆரியும், ஐந்தாவது சீசனில் ராஜுவும் டைட்டிலை வென்று அசத்தினர். இதுவரை நடந்து முடிந்துள்ள 5 சீசன் பிக்பாஸ் நிகழ்ச்சிகளையும் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கினார். சமீபத்தில் நடந்த பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை மட்டும் சிம்பு தொகுத்து வழங்கினார்.
இதையும் படியுங்கள்... சுஷாந்தின் தீவிர போதை பழக்கத்திற்கு உடந்தையாக இருந்தது ரியா தான் - போலீசார் பரபரப்பு குற்றச்சாட்டு
இதனிடையே விரைவில் தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் தொடங்கப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சியையும் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்க உள்ளார். இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக கலந்துகொள்ள உள்ளவர்கள் குறித்த தகவல் அவ்வப்போது வெளியான வண்ணம் உள்ளது. அந்த வகையில் தொகுப்பாளர் ரக்ஷன் கலந்துகொள்ள உள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது.
இந்நிலையில், சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ராஜலட்சுமி பிக்பாஸ் சீசன் 6-ல் போட்டியாளராக கலந்துகொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் சமீபத்தில் வெளியான புஷ்பா படத்தில் இடம்பெற்ற சாமி சாமி பாடலை பாடியதன் மூலம் பட்டிதொட்டியெங்கும் பேமஸ் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்ச்சி வருகிற அக்டோபர் மாதம் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்... வாரிசு நடிகையுடன் நெருக்கம் காட்டும் கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல்... விரைவில் திருமணமா?- தீயாய் பரவும் தகவல்
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.