கையில் மது கோப்பையோடு... படு ஹாட் பிகினி உடையில் மாலத்தீவை கவர்ச்சியால் குதூகலப்படுத்தும் சன்னி லியோன்!
பாலிவுட், கோலிவுட், டோலிவுட் நடிகைகள் பலரும் தங்களுடைய ஓய்வு நாட்களை என்ஜாய் செய்வதற்காக, மாலத்தீவுக்கு சென்று வரும் நிலையில் தற்போது, அந்த வரிசையில் பிரபல கவர்ச்சி நடிகை சன்னி லியோன் குடும்பத்தோடு மாலத்தீவுக்கு சென்றுள்ளார்.
ஆபாச படங்களில் நடித்து வந்த சன்னி லியோன், தற்போது பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார். சொந்தமாக படம் தயாரிக்கும் அளவிற்கு முன்னேறிவிட்ட சன்னி லியோன், பாலிவுட்டின் முன்னணி நடிகர்களுடன் குத்தாட்டம் போட்டும் வருகிறார்.
தற்போது இவரது நடிப்பு திறமை பாலிவுட் திரையுலகை தாண்டி, தமிழ் திரையுலகிலும் பிரதிபலிக்கு துவங்கியுள்ளது. அந்த வகையில் அம்மணியின் கை வசம், 'ஷீரோ' என்கிற படம் உள்ளது.
சைக்கலாஜிக்கல் திரில்லர் ஜானரில் உருவாகியிருக்கும் இந்த திரைப்படத்தில், சாரா மைக் என்ற கதாபாத்திரத்தில் அமெரிக்காவில் வாழும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண்ணாக நடிகை சன்னி லியோன் நடித்துள்ளார். விடுமுறையை கழிப்பதற்காக அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு வருகை தருகிறார். இங்கு அவர் எதிர்கொள்ளும் சம்பவங்கள் தான் படத்தின் கதை.
இந்த படத்தில் கவர்ச்சியை தாண்டி, ஆக்ஷன் காட்சிகளிலும் சன்னி லியோன் பின்னி பெடல் எடுத்துள்ளார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
மேலும் , ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் என அரை டஜன் படங்களுக்கு குறைவில்லாமல் கையில் வைத்திருக்கும் சன்னி லியோன் ஓய்வு நாட்களை கழிப்பதற்காக தற்போது 'மாலத்தீவுக்கு' குடும்பத்துடன் பிறந்துள்ளார்.
அங்கு, கையில் மதுவை வைத்து கொண்டு, படு ஹாட்டான பிகினி உடையில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.