MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Bigg Boss Tamil: கேமுல 100 அடிச்சாலும் 0லிருந்து தான் ஆரம்பிக்கணும்–சுனிதாவின் திறமையை பாராட்டிய விஜய் சேதுபதி

Bigg Boss Tamil: கேமுல 100 அடிச்சாலும் 0லிருந்து தான் ஆரம்பிக்கணும்–சுனிதாவின் திறமையை பாராட்டிய விஜய் சேதுபதி

Sunitha Gogoi Bigg Boss Tamil Season 8: குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமான சுனிதா, பிக்பாஸ் தமிழ் சீசன் 8-ல் 7வது போட்டியாளராகக் கலந்து கொண்டுள்ளார். தனது டான்ஸ் திறமை, நகைச்சுவை உணர்வு மற்றும் தனித்துவமான பேச்சுத் திறன் மூலம் ரசிகர்களை கவர்ந்தார்.

2 Min read
Author : Rsiva kumar
| Updated : Oct 06 2024, 10:08 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Sunita Gogoi, Bigg Boss Tamil Season 8

Sunita Gogoi, Bigg Boss Tamil Season 8

விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் தமிழ் சீசன் 8 ரியாலிட்டி ஷோவில் குக் வித் கோமாளி மூலமாக பிரபலமான சுனிதா கொகோய் 7ஆவது போட்டியாளராக எண்ட்ரி கொடுத்தார். அசாம் மாநிலம் கவுஹாத்தியைச் சேர்ந்தவரான சுனிதா கொகோய் கடந்த 1991 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் தேதி பிறந்தார். டான்ஸ் மீது அதிக ஆர்வம் கொண்ட சுனிதா டான்ஸராகவே தனது வாழ்க்கையை தொடங்கினார்.

25
Bigg Boss Tamil Season 8, Sunita Gogoi

Bigg Boss Tamil Season 8, Sunita Gogoi

டான்ஸ் நிகழ்ச்சிக்காக மும்பை சென்ற சுனிதா அதன் பிறகு சென்னை வந்து தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார். தமிழே தெரியாமல் சென்னையில் வந்து கொஞ்சி பேசும் தமிழால் தன்னை தானே மெருகேற்றி தனக்கென்று ரசிகர்கள் பட்டாளங்களை உருவாக்கியுள்ளார். சுனிதா பேசும் தமிழுக்கு ஏராளமான ரசிகர்கள் உண்டு. அவர் பேசினாலே சிரிப்பலை தான். அதையே தனது பாசிட்டிவாக எடுத்து கொண்ட சுனிதா இந்த உளவிற்கு உயர்ந்துள்ளார்.

டான்ஸர் சுனிதா:

ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியில் டான்ஸ் திறமையை வெளிப்படுத்தி பேமஸ் ஆனார். தமிழ் சினிமாவில் தனுஷ் நடித்த 3, இரவு, ராகவா லாரன்ஸ் நடித்த காஞ்சனா 3 மற்றும் மான் வேட்டை ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவ்வளவு ஏன் விஜய் டிவியில் சக்கைப்போடு போடும் ரியாலிட்டி ஷோவான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்துகொண்டு மக்களை மகிழ்வித்து வருகிறார்.

35
Bigg Boss Tamil Season 8

Bigg Boss Tamil Season 8

பிக்பாஸ் தமிழ் சீசன் 8 – பிக்பாஸ் சுனிதா

இந்த நிலையில் தான் முதல் முறையாக விஜய் டிவியில் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 என்ற ரியாலிட்டி ஷோவில் 7ஆவது போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார். இது குறித்து அவரது வீடியோவில் கூறியிருப்பதாவது:

“ஒரு டான்ஸ் ஷோவில் நடுவராக இருந்தேன். நான் பிக்பாஸ் சுனிதாவா எண்ட்ரி ஆக போகிறேன். உங்களது ஆதரவு எனக்கு வேணும். பிக்பாஸ் எப்போவுமே ஸ்பெஷல் தான். இப்போ அதையும் தாண்டி எனக்கு பிடிச்ச ஆங்கர் இருக்காரு. என்னுடைய இதயமே அவர் தான். பேமலி இருக்காங்க. என்னுடைய தங்கை ஆதரவாக இருக்காங்க. அவர் தான் நந்திதா.

45
Sunita Gogoi, Vijay Sethupathi, Bigg Boss Tamil Season 8

Sunita Gogoi, Vijay Sethupathi, Bigg Boss Tamil Season 8

சுனிதா டயலாக்:

கேம்ல நீங்க 100 அடிச்சாலும் அடுத்த கேமுல 0 லிருந்து தான் ஆரம்பிக்கணும். அந்த மாதிரி என்னுடைய வாழ்க்கையில் எல்லா ஸ்டேஜ்லயும் சேலஞ்ச் இருந்துச்சு. அதே மாதிரி அந்த சேலஞ்ச பிக்பாஸ் வீட்டுல ஹேப்பியா சந்திக்க போறேன் என்றார். மேலும், விஜய் சேதுபதியே சுனிதாவின் கருத்துக்கு பாராட்டு தெரிவித்தார். விளையாட்டில் 100 அடிச்சாலும் அடுத்த போட்டியில் 0ல இருந்து தான் ஆரம்பிக்கணும் என்று மறுபடியும் சொல்ல கேட்டார்.

55
Sunita Gogoi Bigg Boss

Sunita Gogoi Bigg Boss

சுனிதாவின் யோசிக்கும் திறமைக்கு பாராட்டு:

அதோடு, சுனிதாவின் யோசிக்கும் திறமையை பாராட்டினார். விஜய் சேதுபதியவே வெட்கப்பட வைத்தார். அவருக்காக கவிதையும் சொன்னார். காவ் (பசு மாடு) கொடுக்கும் பால் நீங்க தான் என் ஆளு. இஞ்சி பூண்டு பேஸ்ட் நீங்க தான் பெஸ்ட் என்றார். அதோடு தங்கமே உன்னதான் தேடி வந்தேன் நானே என்ற பாடலையும் விஜய் சேதுபதிக்காக பாடினார். சுனிதாவிடம் இல்லாத டேலண்டே இல்லை என்ற விஜய் சேதுபதி, இந்த நிகழ்ச்சியின் முக்கியமான ஒருவராக சுனிதா இருப்பார் என்றார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
விஜய் சேதுபதி

Latest Videos
Recommended Stories
Recommended image1
நிஜ வாழ்க்கையிலும் 'செல்லம்' தான்! - ரேஷ்மா மற்றும் மதன் பாண்டியனின் கியூட் லவ் ஸ்டோரி!
Recommended image2
என்கூட நடிக்க மறுத்த நடிகைகள் இப்போ என் பாட்டுக்கு டான்ஸ் ஆடி ரீல்ஸ் போடுறாங்க - கென் கருணாஸ் பளீச் பேட்டி
Recommended image3
இது அதுல்ல... விஜய்யை ரவி மோகனோடு கம்பேர் பண்ணும் நெட்டிசன்கள் - காரணம் என்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved