வசூலில் மாஸ் காட்டிய 'அரண்மனை 3 ' இத்தனை கோடியா? வெளியான லேட்டஸ்ட் தகவல்..!
இயக்குனர் சுந்தர் சி (sunder c) இயக்கத்தில், ஆர்யா (Arya) நடிப்பில், ஆயுத பூஜையை முன்னிட்டு நேற்று வெளியான அரண்மனை 3 (Aranmanai 3)படம் தமிழகத்தில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் தற்போது வெளியாய்க்கியுள்ளது.
aranmanai
இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி, பெரும் வெற்றி பெற்ற அரண்மனை, அரண்மனை 2 படங்களை தொடர்ந்து அரண்மனை 3 படத்தை இயக்கியுள்ளார்.
ஏற்கனவே வெளியாகியுள்ள இந்த படத்தின் பாகங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து, 3 ஆவது பாகமும் தயாராகி நேற்று வெளியானது.
இதில், நடிகர் ஆர்யா கதாநாயகனாகவும், ராஷி கண்ணா கதாநாயகியாகவும் நடித்துள்ளார், மேலும் ஆண்ட்ரியா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளர்.
இவர்களை தவிர முக்கிய வேடத்தில், யோகி பாபு, சாக்ஷி அகர்வால், விவேக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் போஸ்டர், பாடல்கள், மற்றும் ட்ரைலருக்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியது.
நேற்று வெளியான இந்த படம் குறித்து, இதுவரை கலவையான விமர்சனங்களே தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் நிலையில், முதல் நாள் வசூலில் மாஸ் காட்டியுள்ளது.
அதாவது, தமிழகத்தில் இதுவரை 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி கொடுத்துள்ள நிலையில், நேற்றைய தினம் மட்டும் சுமார் 4 கோடி இந்த படம் வசூலித்துள்ளதாம். கடந்த வாரம் வெளியான டாக்டர் திரைப்படம் முதல் நாளில் 8 கோடி தமிழகத்தில் மட்டும் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.