திடீரென வந்த துயரச் செய்தி… பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் நடிகர் வீட்டில் நிகழ்ந்த சோகம்.!
'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியல் நடிகர் ஸ்டாலின் முத்துவின் தாயார் வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவால் காலமானார். இந்த துயரச் செய்தியை அடுத்து, சின்னத்திரை பிரபலங்களும் ரசிகர்களும் சமூக வலைதளங்கள் மூலம் அவருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

சோகத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் ஸ்டாலின் குடும்பம்
விஜய் தொலைக்காட்சியின் முன்னணித் தொடரான 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் தந்தை கதாாத்திரத்தில் நடித்து வரும் பிரபல நடிகர் ஸ்டாலின் முத்துவின் வீட்டில் ஒரு துயரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.
குடும்பத்தில் ஏற்பட்ட உயிரிழப்பு
தற்போது சின்னத்திரையில் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில், பாண்டியனாகவே வாழ்ந்து வரும் ஸ்டாலினின் தாயார் வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். இந்த திடீர் இழப்பு அவரது குடும்பத்தினரையும், சக திரைத்துறை நண்பர்களையும் ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
ரசிகர்கள் இரங்கல்
தகவல் அறிந்த ரசிகர்கள் மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் சமூக வலைதளங்கள் வாயிலாக ஸ்டாலினுக்கு தங்களது ஆறுதல்களைத் தெரிவித்து வருகின்றனர். உறுதியான மனிதராக திரையில் தோன்றும் அவருக்கு இந்த இழப்பைத் தாங்கும் சக்தியை இறைவன் வழங்கட்டும் என ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.
தொடரில் நிலவும் பரபரப்பு
ஒரு பக்கம் நிஜ வாழ்க்கையில் சோகம் இருந்தாலும், மறுபக்கம் சீரியலில் பாண்டியன் குடும்பம் பெரும் நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. வரதட்சணை கொடுமை மற்றும் துன்புறுத்தல் என மயில் குடும்பத்தினர் அடுக்கடுக்கான பொய்களைக் கூறி பாண்டியன் குடும்பத்திற்கு நெருக்கடி கொடுத்தனர். தற்போது கோமதியின் அண்ணன்கள் அளித்த உண்மையின் அடிப்படையில் பாண்டியன் குடும்பம் அந்த இக்கட்டான சூழலில் இருந்து வெளியே வந்துள்ளது. குடும்ப கௌரவத்தை உயிராகக் கருதும் பாண்டியன், பொய் சொல்லி ஏமாற்றிய மயில் குடும்பத்தை மன்னிப்பாரா அல்லது அடுத்தகட்ட அதிரடி முடிவை எடுப்பாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

