MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • கோலிவுட்டின் மனித கடவுள்! 10 வருஷமாக ஸ்டண்ட் மேன்களுக்கு சைலண்டாக உதவி வரும் சூர்யா - அதுவும் இத்தனை லட்சமா?

கோலிவுட்டின் மனித கடவுள்! 10 வருஷமாக ஸ்டண்ட் மேன்களுக்கு சைலண்டாக உதவி வரும் சூர்யா - அதுவும் இத்தனை லட்சமா?

ஸ்டண்ட் கலைஞர்களுக்காக நடிகர் சூர்யா கடந்த 10 ஆண்டுகளாக சத்தமே இல்லாமல் உதவி வரும் தகவலை பிரபலம் ஒருவர் சமீபத்திய பேட்டியில் கூறி உள்ளார்.

2 Min read
Author : Ganesh A
Published : Jul 19 2025, 01:39 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Suriya Help For Stuntmen
Image Credit : x

Suriya Help For Stuntmen

ஒரு சினிமா உருவாவதற்கு பின்னணியில் பல துறைகள் இருக்கின்றன. மேக்கப், ஆர்ட் டிபார்ட்மெண்ட், கேமரா டீம், ஆடைகளுக்கென ஒரு தனி டீம், ஸ்டண்ட் டீம் என பல துறைகள் பின்னணியில் பணியாற்றுகின்றனர். அதில் அதிகம் ரிஸ்க் எடுத்து வேலை பார்ப்பவர்கள் தான் ஸ்டண்ட் கலைஞர்கள். 100 கோடி, 200 கோடி சம்பளம் வாங்கும் நடிகர்கள் அந்தரத்தில் பறந்து பறந்து சண்டை போட பெரும்பாலும் டூப் போட்டு தான் நடிப்பார்கள். அத்தகைய ரிஸ்க் நிறைந்த சண்டைக்காட்சிகளில் நடிப்பது ஸ்டண்ட் மேன்கள் தான். இப்படி உயிரையே பணயம் வைத்து வேலை பார்க்கும் ஸ்டண்ட் கலைஞர்களுக்கு போதிய இன்சூரன்ஸ் வசதி செய்து தரப்படுவதில்லை என்கிற குற்றச்சாட்டு தொடர்ந்து முன்வைக்கப்படுகிறது.

24
ஸ்டண்ட் மேன் எஸ்.எம்.ராஜு மரணம்
Image Credit : X/beemji

ஸ்டண்ட் மேன் எஸ்.எம்.ராஜு மரணம்

இந்த விவகாரம் இவ்வளவு பூதாகரமாக வெடித்துள்ளதற்கு முக்கிய காரணம் எஸ்.எம்.ராஜு என்கிற ஸ்டண்ட் கலைஞரின் மரணம் தான். இவர் பா.இரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் வேட்டுவம் படத்தில் கார் சேஸிங் காட்சியில் நடித்து வந்தார். இதில் எதிர்பாராமல் விபத்தில் சிக்கிய ராஜு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரின் மறைவு ஒட்டுமொத்த இந்திய திரையுலகிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. ஏனெனில் எஸ்.எம் ராஜு தமிழ் மட்டுமின்றி இந்தி, தெலுங்கு என பல்வேறு மொழி படங்களில் ஸ்டண்ட் மேனாக பணியாற்றி இருக்கிறார். பல ரிஸ்க் ஆன ஸ்டண்ட் காட்சிகளை அசால்டாக செய்து அசத்துவாராம்.

Related Articles

Related image1
ஸ்டண்ட் மேன் ராஜு மரணம்; கப்சிப்னு இருக்கும் தமிழ் நடிகர்கள்... கர்ணன் போல் வந்து உதவிய அக்‌ஷய் குமார்
Related image2
கூமாபட்டிய விடுங்க; சூர்யா - ஜோதிகாவால் டிரெண்டான இந்த தீவு பற்றி தெரியுமா?
34
உதவிக்கரம் நீட்டிய அக்‌ஷய் குமார்
Image Credit : X

உதவிக்கரம் நீட்டிய அக்‌ஷய் குமார்

எஸ்.எம்.ராஜுவின் மறைவுக்கு பின்னர் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார், ஸ்டண்ட் யூனியனில் முறையாக பதிவு செய்த 650 ஸ்டண்ட் கலைஞர்களுக்கு ரூ.10 லட்சத்துக்கான இன்சூரன்ஸ் தொகையை தான் செலுத்த முன்வந்துள்ளார். அவரின் இந்த செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். அக்‌ஷய் குமாரின் இந்த உதவியைத் தொடர்ந்து தமிழ் நடிகர்கள் யாரும் ஏன் ஸ்டண்ட் கலைஞர்களுக்கு உதவுவதில்லை என்கிற கேள்வி சமூக வலைதளங்களில் முன்வைக்கப்பட்டது. இந்த நிலையில், கடந்த 10 ஆண்டுகளாக நடிகர் சூர்யா, ஸ்டண்ட் கலைஞர்களுக்கு சத்தமே இல்லாமல் உதவி வரும் தகவல் வெளியாகி இருக்கிறது.

44
சத்தமே இல்லாமல் உதவிய சூர்யா
Image Credit : x

சத்தமே இல்லாமல் உதவிய சூர்யா

பிரபல ஸ்டண்ட் மாஸ்டரான சில்வா தான் இந்த தகவலை பேட்டி ஒன்றில் வெளியிட்டுள்ளார். அதன்படி நடிகர் சூர்யா, கடந்த 10 ஆண்டுகளாக ஸ்டண்ட் கலைஞர்களின் மருத்துவ காப்பீட்டிற்காக வருடந்தோறும் ரூ.10 லட்சம் கொடுத்து வருவதாகவும் அவரின் இந்த முயற்சியை பார்த்த பின்னர் தான் மற்ற தயாரிப்பாளர்களும் ஸ்டண்ட் மேன்களுக்கு உதவ முன் வந்ததாக சில்வா தெரிவித்துள்ளார். இத்தனை ஆண்டுகள் வெளியுலகுக்கு தெரியாமல் சூர்யா செய்து வரும் இந்த உதவி பற்றி அறிந்ததும், இவர் தான் கோலிவுட்டின் மனித கடவுள் என சூர்யாவை பாராட்டி வருகிறார்கள். இதுமட்டுமின்றி அகரம் என்கிற அறக்கட்டளை மூலம் ஏராளமான ஏழை எளிய மாணவ, மாணவிகளை நடிகர் சூர்யா படிக்க வைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சூர்யா

Latest Videos
Recommended Stories
Recommended image1
ஆதாரத்தோடு வந்து நின்ற கார்த்திக்! ஆடிப்போன சந்திரகலா.. சாமுண்டீஸ்வரி முகத்தில் சந்தோஷம்! கார்த்திகை தீபம் மெகா ட்விஸ்ட்!
Recommended image2
வயித்துல இருக்குற குழந்தையை நினைச்சு உருகும் ரோகிணி - கார்த்திகை தீபம் உருக்கமான கட்டம்!
Recommended image3
விஜய் முன்னே ரஷ்மிகாவிடம் ரக்ஷித் ஷெட்டி குறித்து கேள்வி – வைரலான ரியாக்ஷன் வீடியோ
Related Stories
Recommended image1
ஸ்டண்ட் மேன் ராஜு மரணம்; கப்சிப்னு இருக்கும் தமிழ் நடிகர்கள்... கர்ணன் போல் வந்து உதவிய அக்‌ஷய் குமார்
Recommended image2
கூமாபட்டிய விடுங்க; சூர்யா - ஜோதிகாவால் டிரெண்டான இந்த தீவு பற்றி தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved