தனது 14 வயதில் அம்மாவை இழந்தது குறித்து உருக்கமாக பேசிய ஸ்ரீநிதி ஷெட்டி!
Srinidhi Shetty emotional talking about her Mothers Death ; தெலுங்கின் ஹிட் 3 படத்தின் மூலம் பிரபலமாக இருக்கும் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி, தனது 14வது வயதில் தாயாரை இழந்தது குறித்துப் பேசி உருக்கமாகியுள்ளார்.

ஸ்ரீநிதி ஷெட்டி 2016-ல் மிஸ் சூப்பர்நேஷனல் பட்டம் வென்றார்
Srinidhi Shetty emotional talking about her Mothers Death ; ஸ்ரீநிதி ஷெட்டி 2016-ல் மிஸ் சூப்பர்நேஷனல் பட்டம் வென்றார். கேஜிஎஃப் படத்தின் மூலம் பிரபலமானார். கர்நாடகாவில் பிறந்து வளர்ந்தவர் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி. கேஜிஎஃப் சேப்டர் 1 படம் மூலமாக சினிமாவில் அறிமுகமானார். இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.
கேஜிஎஃப் 1 மற்றும் கேஜிஎஃப் 2 நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி
கேஜிஎஃப் 1 & 2 படங்களில் ரீனா தேசாய் கதாபாத்திரத்தில் நடித்த ஸ்ரீநிதி ஷெட்டி, முதல் படத்திலேயே பிரபலமானார். இந்தப் படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து கேஜிஎஃப் 2 படத்திலும் நடித்தார்.
விக்ரம் நடித்த கோப்ரா படத்தில் நடித்தார்
ஹிட் 3 படத்தில் ஐபிஎஸ் அதிகாரியாக நடித்துள்ளார். அதன் பிறகு தான் விக்ரம் நடித்த கோப்ரா படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து அந்த படத்தில் நடித்தார். இது தான் அவரது முதல் தமிழ் படம்.
14 வயதில் தாயாரை இழந்தது குறித்து ஸ்ரீநிதி உருக்கம்
இப்போது நானி நடித்த ஹிட் 3 படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் ரசிகர்களிடையே பாராட்டுகளை குவித்து வருகிறது. இந்தப் படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியில் தனது அம்மாவைப் பற்றி உருக்கமாக பேசியிருக்கிறார்.
ஸ்ரீநிதி தனது தந்தையைப் பற்றி அடிக்கடி பேசுவார்
ஸ்ரீநிதி தனது தந்தையைப் பற்றி அடிக்கடி பேசுவார். ஆனால் தாயாரைப் பற்றி அதிகம் பேசியதில்லை. அம்மா மீது அதிக பாசமும் அன்பும் கொண்டிருந்தார்.
10ஆம் வகுப்பு படிக்கும் போது தாயாரை இழந்த ஸ்ரீநிதி
10ஆம் வகுப்பு படிக்கும் போது தாயாரை இழந்த ஸ்ரீநிதி, அப்போது கடவுள் நம்பிக்கையை இழந்ததாகக் கூறினார். தனது அம்மா தான் தனக்கு எல்லாமுமாக இருந்தார். அவரது மறைவை தன்னால் தாக்கிக் கொள்ள முடியவில்லை என்றார்.
பெங்களூருக்குச் சென்று புதிய வாழ்க்கையைத் தொடங்கினார்
அதன் பிறகு, பெங்களூருக்குச் சென்று புதிய வாழ்க்கையைத் தொடங்கினார் ஸ்ரீநிதி. மாடலிங் துறையில் நுழைந்த ஸ்ரீநிதி கேஜிஎஃப் படம் மூலமாக சினிமாவில் அறிமுகமானார்.
மாடலிங் துறையில் நுழைந்து சினிமாவில் நடிக்கத் தொடங்கினார்
பெங்களூருவில் மாடலிங் துறையில் நுழைந்து, பின்னர் சினிமாவில் நடிக்கத் தொடங்கினார்.குறைவான காலகட்டங்களில் 4 படங்களில் நடித்துள்ளார். நானி உடன் இணைந்து ஹிட் 3 படத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் ஆக்ஷன் காட்சியில் ஸ்ரீநிதி ஷெட்டி கலக்கியிருக்கிறார்.