ஸ்ரீதேவி முதல் இலியானா வரை... கல்யாணத்துக்கு முன்பே கர்ப்பமான நடிகைகள் இத்தனை பேரா? - முழு லிஸ்ட் இதோ
கோலிவுட் முதல் பாலிவுட் வரை திருமணத்துக்கு முன்பே கர்ப்பமான நடிகைகள் யார் யார் என்பதைப் பற்றி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
சினிமா நடிகர், நடிகைகள் பல விதங்களில் சர்ச்சைகளில் சிக்குவது வழக்கம். அந்த வகையில், திருமணத்துக்கு முன்பே கர்ப்பமாகி ரசிகர்களுக்கு மட்டுமின்றி அவர்களது குடும்பத்தினருக்கும் அதிர்ச்சி கொடுத்த நடிகைகள் ஏராளமானோர் உள்ளனர். அவர்களைப் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ஸ்ரீதேவி
நடிகை ஸ்ரீதேவி தயாரிப்பாளர் போனி கபூரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரும் திருமணத்துக்கு முன்பே நெருங்கிப் பழகி வந்தனர். அதனால் திருமணத்துக்கு முன்னரே கர்ப்பமாகிவிட்டார் நடிகை ஸ்ரீதேவி. திருமணம் நடக்கும் போது நடிகை ஸ்ரீதேவி 7 மாதம் கர்ப்பமாக இருந்தாராம். திருமணமான சில மாதங்களிலேயே அவரது மகள் ஜான்வி பிறந்துவிட்டார்.
சரிதா
நடிகர் கமல்ஹாசனின் முன்னாள் மனைவியான சரிதாவும் திருமணத்துக்கு முன்பே கர்ப்பமானவர் தான். கமல்ஹாசன் - சரிதா தம்பதி கடந்த 1988-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டது. ஆனால் இந்த ஜோடிக்கு 1986-ம் ஆண்டே குழந்தை பிறந்துவிட்டது. அந்த குழந்தை தான் ஸ்ருதிஹாசன். இவர் தற்போது முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
நீனா குப்தா
பாலிவுட் நடிகை நீனா குப்தா, இரண்டுமுறை திருமணமாகி விவாகரத்து பெற்றுவிட்டார். இந்த இரண்டு முறையும் அவருக்கு குழந்தை பிறக்காத நிலையில், அடுத்ததாக வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர் விவ் ரிச்சர்ட்ஸ் உடன் லிவ்வின் ரிலேஷன்ஷிப்பில் இருந்த நீனா குப்தாவுக்கு பெண் குழந்தை பிறந்தது.
நடாஷா ஸ்டான்கோவிக்
செர்பியா நாட்டு நடிகையான நடாஷா, பாலிவுட்டிலும் சில படங்களில் நடித்திருக்கிறார். இவரும் கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியாவும் காதலித்து வந்த நிலையில், இருவரும் திருமணம் செய்துகொள்ளாமலேயே ஒன்றாக வாழ்ந்து வந்தனர். அப்போது கர்ப்பமான நடாஷாவுக்கு குழந்தையும் பிறந்தது. இதையடுத்து தான் இந்த ஜோடி திருமணமே செய்துகொண்டது.
தியா மிர்சா
கவுதம் மேனன் இயக்கிய மின்னலே படத்தின் இந்தி ரீமேக்கில் நடித்தவர் தியா மிர்சா. இவரது முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்ததை அடுத்து, இரண்டாவதாக வைபவ் ரெக்கி என்கிற தொழிலதிபரை கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணம் செய்துகொண்டார். அந்த ஆண்டு ஜூலை மாதமே இவருக்கு குழந்தை பிறந்தது. அப்போது தான் இவர் திருமணத்துக்கு முன்னரே கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது.
இதையும் படியுங்கள்... திருப்பதி கோவிலுக்கு திடீர் விசிட் அடித்த பிரபாஸ்... தொடர் தோல்வியில் இருந்து மீள வேண்டி பிரார்த்தனை
ஆலியா பட்
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஆலியா பட் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடிகர் ரன்பீர் கபூரை காதல் திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடிக்கு திருமணமான 7 மாதத்தில் குழந்தை பிறந்தது. இதன்மூலம் தான் அவர் திருமணத்துக்கு முன்பே கர்ப்பமாக இருந்த விஷயம் தெரியவந்தது.
எமி ஜாக்சன்
நடிகை எமி ஜாக்சன் ஜார்ஜ் என்பவரை 2015-ம் ஆண்டு முதல் காதலித்து வந்தார். திருமணம் செய்துகொள்ளாமலேயே லிவ்விங் டுகெதராக வாழ்ந்து வந்த இந்த ஜோடிக்கு கடந்த 2019-ம் ஆண்டு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. இதையடுத்து நிச்சயம் நடைபெற்ற நிலையில், ஜார்ஜ் உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்துவிட்டார் எமி.
கல்கி கோச்சலின்
பிரெஞ்ச் நடிகையான கல்கி கோச்சலின், இந்தி படங்களின் மூலம் பிரபலமானார். இவர் தமிழிலும் அஜித்தின் நேர்கொண்ட பார்வை, பாவக் கதைகள் வெப் தொடர் உள்ளிட்டவற்றில் நடித்திருக்கிறார். இவர் கை ஹெர்ஸ்பெர்க் என்பவரை கல்யாணம் செய்துகொள்ளும் முன்பே கர்ப்பமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
நேஹா துபியா
தெலுங்கு மற்றும் இந்தி மொழி படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் நேஹா துபியா. இவர் கடந்த 2018-ம் ஆண்டு அங்கட் பேடி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு முன்பே கர்ப்பமான நடிகை நேஹா துபியாவுக்கு அந்த ஆண்டே குழந்தையும் பிறந்தது.
இலியானா
தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிகளில் பிசியான நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் இலியானா. இவர் கடந்த மாதம் தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார். திருமணத்துக்கு முன்பே கர்ப்பமாக இருப்பதை அறிவித்த இலியானா, இன்னும் தனது கணவர் யார் என்கிற தகவலை வெளியிடாமல் சீக்ரெட் ஆக வைத்திருக்கிறார்.
இதையும் படியுங்கள்... அஜித் வீட்டு மருமகள் ஆகப்போகிறாரா யாஷிகா? மகளின் காதல் விவகாரம் குறித்து உண்மையை போட்டுடைத்த தாய்