தெலுங்கு திரையுலகை சேர்ந்த நடிகை ஸ்ரீரெட்டி, கடந்த ஆண்டு  முன்னணி நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் என பலர் தனக்கு பட வாய்ப்பு கொடுப்பதாக கூறி, பயன்படுத்திகொண்டு ஏமாற்றி விட்டதாக தெலுங்கு நடிகர் சங்கம், மற்றும் பிலிம் சேம்பர் வரை சென்று புகார் கொடுத்தார்.

அங்கு இவருடைய புகாரை யாரும் கண்டு கொள்ளாததால், இவரின் பார்வை, தமிழ் திரையுலகின் பக்கம் திரும்பியது. தமிழ் திரையுலகை சேர்ந்த நடிகர்கள், இயக்குனர்கள் மீது சரமாரியாக குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.

தற்போது, இவருடைய வாழ்க்கையை மையமாக வைத்து, ரெட்டி டைரி என்கிற திரைப்படம் உருவாகி வருகிறது. விரைவில் இந்த படத்தின் டீசர் வெளியாகும் என கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தின் மூலம் பல நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் உண்மை முகங்கள் உலக மக்களுக்கு தெரிய வரும் என கூறியுள்ளார்.

சில காலம் எந்த சர்ச்சையான விஷயங்களை பற்றி பேசாமல் படங்களில் கவனம் செலுத்தி வந்த ஸ்ரீரெட்டி. இப்போது இடுப்பை காட்டியவாறு வீடியோ ஒன்றை வெளியிட்டு இதை, பிரபல நடிகர் நானிக்கு டெடிகேட் செய்வதாக அறிவித்துள்ளார். இந்த வீடியோவை பார்த்து நெட்டிசன்கள் பலர் தொடர்ந்து விமர்சித்து வருகிறார்கள்.