பொருந்தவே இல்லை விமர்சனங்களுக்கு ஆளான SPB-யின் குரல்! யார் யாருக்கு தெரியுமா?
பின்னணி பாடகரான எஸ்பிபியின் குரலானது தெலுங்கு சினிமாவில் ஒரு சில நடிகர்களுக்கு சரியாக மேட்ச் ஆகாத நிலையில் அவர் விமர்சனத்திற்கு உள்ளான சம்பவம் தெலுங்கு திரையுலகில் நடந்துள்ளது.

எஸ் பி பாலசுப்பிரமணியம்:
தமிழ் சினிமாவில் எத்தனையோ பின்னணி பாடகர்கள் இருந்தாலும் மக்கள் மத்தியில் என்றும் நிலைத்து நின்றவர் எஸ் பி பாலசுப்பிரமணியம். இவரது குரலை கேட்டாலே மனதில் பட்டாம்பூச்சி பறக்கும் வகையில் அவ்வளவு இனிமையானதாக இருக்கும்.
SPB Live in Songs
பாடல்கள் மூலம் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்:
பாடல்களை கேட்கும் போது செவிகளுக்கு விருந்தாகவும் இருக்கும். இன்று அவர் இந்த பூலோகத்தில் இல்லை என்றாலும் கூட தன்னுடைய பாடல்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்.
SPB Singing Above 40,000 Songs
40,000க்கும் அதிகமான பாடல்கள் பாடியுள்ளார்:
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, உள்ளிட்ட சுமார் 14 மொழிகளில் கிட்டத்தட்ட 40,000க்கும் அதிகமான பாடல்கள் பாடியுள்ளார் SPB. சுமார் அரை நூற்றாண்டுக்கு மேலாக திரையுலகில் சாதித்துக் காட்டியவர். எஸ்.பி.பி பாடிய பாடல்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனவை. நமது மனதை வருடக்கூடியவை.
SPB Create Record:
12 மணி நேரத்தில் 21 பாடல்கள் பாடி சாதனை செய்தவர்:
இன்றும் பலரது செல்போன்களில் எஸ்.பி.பி பாடல்கள் தான் ரிங்டோன். நீண்ட காலமாக இந்தியாவின் முன்னணி பின்னணி பாடகராக இருந்தார். வெறும் 12 மணி நேரத்தில் 21 பாடல்கள் பாடி சாதனை செய்தவர். ஒரு சில நடிகருக்கு தனது குரலை மாற்றியும் பாடியிருக்கிறார். அப்படி அவர் தனது குரலை மாற்றி பாடும் போது இந்த நடிகர்களுக்கு சிரமப்பட்டிருக்கிறார்.
SPB Voice Criticised:
விமர்சனங்களால் கவலைப்பட்டார்:
குறிப்பாக தெலுங்கில் சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா, வெங்கடேஷ் போன்ற நடிகர்களுக்கு பாடும்போது எந்த சிக்கலும் இல்லை. ராஜபாபு, அல்லி ராமலிங்கையா போன்ற நகைச்சுவை நடிகர்களைப் பின்பற்றி பாட முயற்சித்திருக்கிறார். அதே போல மன்மதன் படத்தில் நாகார்ஜூனாவைப் போலவே சில இடங்களில் பாட வேண்டியிருந்தது. அப்படி பாடியிருந்தும் ஒரு சிலர் அது செட்டாகவில்லை என்று விமர்சித்திருக்கின்றனர். ஒரு சிலர் சரியான மேட்ச் என்று பாராட்டவும் செய்தார்களாம். எனினும் குரலை மாற்றி மிகவும் சிரமப்பட்டு... பல நாள் பயிற்சி எடுத்து பாடியபோதும் இவருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட விமர்சனங்களால் அப்போதைக்கு SPB மிகவும் கவலை உற்றதாக கூறப்படுகிறது.