செம்மயா ஃபேன்ஸ் உடன் Vibe பண்ணும் சவுண்டு – பிக் பாஸ் 8க்கு பிறகு சௌந்தர்யா குத்தாட்டம்!
Soundariya Nanjundan Aaluma Doluma Dance Video : ரசிகர்களுடன் குத்தாட்டம் போட்டும் பிக் பாஸ் சௌந்தர்யாவின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Soundariya Nanjundan Aaluma Doluma Dance Video
Soundariya Nanjundan Aaluma Doluma Dance Video : பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியானது கடந்தாண்டு அக்டோபர் 6ஆம் தேதி வைல்டு கார்ட் உள்பட மொத்தமாக 24 போட்டியாளர்களுடன் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது. விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை முதல் முறையாக தொகுத்து வழங்கினார். ஆரம்பத்தில் அவர் மீது விமர்சனங்கள் எழுந்தாலும் நாளடைவில் அவர் தொகுத்து வழங்குவதை மக்கள் ரசிக்க ஆரம்பித்தனர். படங்களில் மட்டும் அவர் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தவில்லை. நிகழ்ச்சி தொகுத்து வழங்குவதிலும் யதார்த்தத்தை வெளிப்படுத்தினார்.
Soundariya Nanjundan Aaluma Doluma Dance Video
பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியானது 104 நாட்கள் வெற்றிகரமாக நடந்து கடைசியாக 105 ஆவது நாளில் இறுதிப் போட்டியை கொண்டாடியது. பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியின் இறுதிப் போட்டிக்கு ரயான், முத்துக்குமரன், விஷால், பவித்ரா மற்றும் சௌந்தர்யா மட்டும் செலக்ட் ஆனார்கள். பிக் பாஸ் 8 தமிழ் இறுதிப் போட்டி நாளன்று ரயான், பவித்ரா மற்றும் விஷால் என்று மூவரும் வெளியேற்றப்பட்டனர்.
Soundariya Nanjundan Dance Video
கடைசியாக சௌந்தர்யா மற்றும் முத்துக்குமரன் மட்டுமே இருந்தனர். இதில், அனைவரும் எதிர்பார்த்தபடி பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக முத்துக்குமரன் அறிவிக்கப்பட்டார். அவருக்கு பிக் பாஸ் டிராபி உள்பட 40 லட்சத்து 50 ஆயிரத்திற்கான பரிசுத் தொகையும் வழங்கப்பட்டது. முத்துக்குமரன் டைட்டில் வின்னராக அறிவிக்கப்படவே சௌந்தர்யா 2ஆவது இடம் பிடித்தார்.
Bigg Boss Tamil Season 8 Soundariya Nanjundan
இந்த நிலையில் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி முடிந்த பிறகு இப்போது ரசிகர்களுடன் இணைந்து ஆலுமா டோலுமா என்று அஜித் நடித்த வேதாளம் படத்தின் பாடலுக்கு செம்மயா வைப் பண்ணியுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.