Sonia Agarwal : செல்வராகவன் உடனான பிரிவு ..முதல் முறையாக உண்மையை உடைத்த சோனியா அகர்வால்
Sonia Agarwal : தன்னை அறிமுகப்படுத்திய இயக்குனரை திருமணம் செய்து கொண்ட சோனியா அகர்வால் தனது காதல் திருமண முறிவு குறித்து மனம் திறந்துள்ளார்.

selvaragavan - sonia agarwal
பிரபல இயக்குனர் செல்வராகவனின் இயக்கத்தில் வெளியான காதல் கொண்டேன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் சோனியா அகர்வால். இவரது நிதானமான நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது. அதோடு முதல் படத்திலேயே சிறந்த நடிகைக்கான விருதையும் தட்டி சென்றார்.
selvaragavan - sonia agarwal
இதையடுத்து சோனியா அகர்வால் மீண்டும் செல்வராகவனின் ஹிட் படங்களான ரெயின்போ காலனி, புதுக்கோட்டை போன்ற படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். செல்வராகவனுடன் படங்களில் இணைந்திருந்த இவருக்கும் இயக்குனருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இதையடுத்து இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது.
selvaragavan - sonia agarwal
மிக பிரமாண்டமாக நடைபெற்ற இந்த திருமணத்தில் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். செல்வராகவன் வீட்டு சம்மந்தியான ரஜினிகாந்த் குடும்பத்துடன் வந்திருந்து தம்பதிகளை வாழ்த்தியிருந்தார்.
selvaragavan - sonia agarwal
பின்னர் மிகவும் மகிழ்ச்சியாக சில ஆண்டுகளை கழித்த இந்த தம்பதிகள் திடீர் பிரிவு முடிவு எடுத்தனர். விவகாரத்துக்கு பிறகு இருவரும் அவரவர் பாதையில் சென்று விட்டனர்.
மேலும் செய்திகளுக்கு... ஓடிடிக்கு வந்த சாணிக்காகிதம்.. தனுஷ் அண்ணன் பட ரிலீஸ் தேதி..
selvaragavan - sonia agarwal
அடுத்தடுத்து செல்வராகவன் பட இயக்கத்தில் மும்மரம் காட்டினார். ஆனால் சோனியா அகர்வாலுக்கு போதிய பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதையடுத்து கவர்ச்சி கேரட்டர்களில் நடிக்க ஆரம்பித்து விட்டார்.
selvaragavan - sonia agarwal
இதையடுத்து செல்வராகவன் அஞ்சலி என்பவரை மறுமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு 3 பிள்ளைகள் உள்ளனர். இவர்களுடன் ஹேப்பியாக செட்டில் ஆகிவிட்டார் இயக்குனர்.
selvaragavan - sonia agarwal
ஆனால் சோனியா அகர்வால் தனிமையில் தான் இருந்து வருகிறார். இவர் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பூவே பூச்சூடவா சீரியலில் சிறப்பு தோற்றத்தில் வரவுள்ளார்.இந்நிலையில் தங்களது விவாகரத்து குறித்து சமீபத்தில் மனம் திறந்துள்ளார் சோனியா அகர்வால்.
மேலும் செய்திகளுக்கு...Naane Varuven Movie : என்ன பொசுக்குனு அடிதடில இறங்கிட்டாங்க... தனுஷ் - செல்வராகவன் இடையே திடீரென வெடித்த மோதல்
selvaragavan - sonia agarwal
பேட்டியில் சோனியா அகர்வால் கூறியதாவது, வெற்றி படங்களில் செல்வராகவனுடன் இணைந்து பணியாற்றிய பொழுது அவரது ஹார்ட் வொர்க் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. பின்னர் மனம் ஒத்தால் திருமணம் செய்து கொண்டோம். அந்த நேரங்களில் இருவரும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தோம். அதேபோல பிரிவின் போது மிகுந்த மன வலியுடன் பிரிந்ததாக கூறியுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.