MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • நாக சைதன்யா - சோபிதா திருமண சடங்குகள் துவங்கியது! வெளியானது ஹல்தி போட்டோஸ்!

நாக சைதன்யா - சோபிதா திருமண சடங்குகள் துவங்கியது! வெளியானது ஹல்தி போட்டோஸ்!

நாக சைதன்யா மற்றும் சோபிதாவின் திருமண கொண்டாட்டங்கள் குடும்ப வழக்கத்தின் படி ஹல்தி நிகழ்ச்சியுடன் ஆரம்பமாகி உள்ளது. இதுகுறித்த போட்டோஸ் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. 

2 Min read
Author : manimegalai a
Published : Nov 29 2024, 01:08 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Samantha Ex Husband Chaitanya Wedding

Samantha Ex Husband Chaitanya Wedding

நாகர்ஜூனாவின் மூத்த மகனான நாக சைத்தாயா, நடிகை சமந்தாவை 2021-ஆம் ஆண்டு விவாகரத்து செய்த நிலையில், 2022-ஆம் ஆண்டு முதல் 'பொன்னியின் செல்வன்' பட நடிகை சோபிதா துலிபாலாவுடன் டேட்டிங் செய்து வந்தார். கடந்த இரண்டு வருடங்களாக இருவரும் காதலித்து வந்த நிலையில், இவர்களின் காதலுக்கு பெற்றோர் பச்சை கொடி காட்டியதை தொடர்ந்து,  இருவருக்கும் டிசம்பர் 5 ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது.
 

25
Naga Chaitanya Wedding on December 5th

Naga Chaitanya Wedding on December 5th

நாகசைதன்யா - சோபிதாவுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் எளிமையான முறையில் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. இவர்கள் இருவருமே திருமணத்தை மிகவும் பிரமாண்டமாக நடத்த விரும்பாத நிலையில், இது ஒரு பிரைவேட் நிகழ்வாகவே நடைபெற உள்ளது. மேலும் தங்களின் திருமண வேலைகள் அனைத்தையுமே சோபிதா மற்றும் நாக சைதன்யா தான் அதிகம் சிரத்தி எடுத்து செய்துள்ளனர். 

டீன் ஏஜ்ஜை கடந்தாச்சு! 20-ஆவது பிறந்தநாளை செம்ம Vibe உடன் கொண்டாடிய அனிகா சுரேந்திரன்!
 

35
Sobitha Photos

Sobitha Photos

இவர்களின் திருமண கொண்டாட்டங்கள் தற்போது ஹல்தி நிகழ்ச்சியுடன் துவங்கியுள்ளதை தொடர்ந்து இது குறித்த சில புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. குடும்ப உறுப்பினர்கள் சோபிதா, சைதன்யாவுக்கு மஞ்சள் தண்ணீர் ஊற்றி புதுமண தம்பதிகளின் இனிமையான வாழ்க்கை மங்களகரமாக அமைய வாழ்த்தியுள்ளனர்.  சோபிதா வெட்கத்துடன் மிகவும் மகிழ்ச்சியாகக் காணப்படுகிறார். 
 

45
Naga Chaitanya Wedding Preparations

Naga Chaitanya Wedding Preparations

ஹல்தி நிகழ்ச்சிக்கு பின்னர் சோபிதா நலங்கு நிகழ்ச்சிக்காக சிவப்பு நிற புடவையில் மிகவும் எளிமையாகவும், அழகாகவும் காணப்பட்டார். நாக சைதன்யா எளிமையாக குர்தா பைஜாமா அணிந்து காணப்பட்டார். இதன் பின்னர் குடும்ப உறுப்பினர்கள் பாரம்பரியப்படி மணமக்களுக்கு மங்கல ஸ்நானம் செய்தனர். குடும்ப உறுப்பினர்கள் இருவர் மீதும் மலர் மழை பொழிந்த காட்சிகள் வைரலாகி வருகின்றன. சைதன்யாவின் விருப்பப்படி திருமணம் எளிமையாக நடத்தப்படும் என்று நாகார்ஜுனா அறிவித்தார். ஆனால் பார்க்கும்போது திருமணம் எளிமையாக இல்லாமல் பிரம்மாண்டமாக இருக்கப் போகிறது என்பது தெரிகிறது.

30 ரூபாய்க்கு எச்சல் இலை எடுத்து கஷ்டப்பட்ட விஜய் டிவி புகழின் இன்றைய சொத்து மதிப்பு எத்தனை கோடி தெரியுமா?
 

55
Naga Chaitanya and Sobitha Haldi

Naga Chaitanya and Sobitha Haldi

சைதன்யா சோபிதா திருமணத்திற்கு குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், திரைப்பட மற்றும் அரசியல் பிரமுகர்கள் என மொத்தம் 300 பேர் மட்டுமே இவர்களின் திருமணத்தில் கலந்து கொள்ள உள்ளனர். சைதன்யாவுடனான திருமணத்திற்காக சோபிதாவின் முழுப் பெயரையும் லட்சுமி சோபிதா என்று மாற்றியதாகவும் தகவல்கள் வருகின்றன. நிச்சயதார்த்தத்திற்குப் பிறகு சோபிதா அக்கினேனி குடும்பத்தில் நன்றாகப் பழகிவிட்டார். ஒவ்வொரு நிகழ்விலும் குடும்ப உறுப்பினர்களுடன் காணப்படுகிறார். அக்கினேனி தேசிய விருதுகள் நிகழ்வில், ஐஎஃப்எஃப்ஐ நிகழ்வில் சோபிதா அக்கினேனி குடும்பத்துடன் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
நாக சைதன்யா
நாகார்ஜுனா

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
ஒரு திரைப்படம் மக்களிடத்தில் சென்றாலே அது Pan India தான் ! நடிகர் சிவகார்த்திகேயன் பேட்டி
Recommended image2
விஜய்க்கு 'அந்த' நடிகையுடன் தொடர்பு.. வெளிப்படையாக போட்டுடைத்த மனைவி சங்கீதா.. மனுவில் பரபரப்பு தகவல்!
Recommended image3
ஷாக்கிங் நியூஸ் - முடிவுக்கு வரும் 24 ஆண்டுகால திருமண வாழ்க்கை? சங்கீதா விஜய் விவாகரத்து மனு தாக்கல்! பிரிவுக்கான காரணம் என்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved