உலகநாயகன் தலைமையில் நடிகை கன்னிகாவை கரம் பிடித்த கவிஞர் சினேகன்..! திருமண புகைப்படங்கள் இதோ..!
பிரபல கவிஞர் சினேகனுக்கும் நடிகை கன்னிகா ரவிக்கும் இன்று சென்னையில் உள்ள கிரீன் பார்க் ஹோட்டலில் மிக பிரமாண்டமாக உலகநாயகன் கமலஹாசன் தலைமையில் திருமணம் நடந்து முடிந்த நிலையில், இவர்களது திருமண புகைப்படங்கள் வெளியாகி வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
snehan marriage
தமிழ் திரையுலகில் இதுவரை 700க்கும் மேற்பட்ட படங்களில் 2 ஆயிரத்து 500க்கும் அதிகமான பாடல்களை எழுதியவர் கவிஞர் சினேகன். நடிப்பின் மீதான ஆர்வம் காரணமாக உயர்திரு 420, ராஜராஜ சோழனின் போர்வாள், பூமி வீரன் என சில படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
snehan marriage
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற தன் மூலமாக பட்டி, தொட்டி எல்லாம் பிரபலமான சினேகன், அதன் பின்னர் அந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய உலக நாயகன் கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார்.
snehan marriage
தற்போது தீவிர அரசியலில் இறங்கியுள்ள சினேகனுக்கும், பிரபல நடிகையான கன்னிகா ரவியுடன் இன்று சென்னை கிரீன் பார்க் ஓட்டலில் நடிகர் கமலஹாசன் தலைமையில் மிக பிரமாண்டமாக திருமணம் நடந்தது.
snehan marriage
இவரது திருமணத்தில், இயக்குனர் பாரதி ராஜா, இயக்குனர் அமீர், பழ கருப்பையா, உள்ளிட்ட திரைபிரபலங்கள் மற்றும் அரசியல் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.
snehan marriage
பாடலாசிரியர் சினேகனும், வெள்ளித்திரை, சின்னத்திரையில் கலக்கி வரும் நடிகை கன்னிகா ரவியும் கடந்த 8 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் இன்று திருமண வாழ்க்கையில் இணைந்துள்ளனர்.
snehan marriage
இவர்களது திருமணத்தில் குடும்பத்தினர், மற்றும் பிரபலங்கள் பலர் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.
snehan marriage
மணமக்களை வாழ்த்தி பேசிய பாரதி ராஜா
snehan marriage
கமல்ஹாசன் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெரும் மணமக்கள்
snehan marriage
மணமகன் சினேகன் மற்றும் கன்னிகாவுக்கு வாழ்த்து கூறிய கமல்
snehan marriage
திருமணத்திற்கு பரிசாக வந்த புத்தகங்கள்
snehan marriage
பிரபலங்கள் அனைவருடனும் சேர்ந்து மகிழ்ச்சியான தருணத்தை கொண்டாடிய சினேகன் - கன்னிகா தம்பதி
snehan marriage
பூரித்த புன்னகையோடு திருமணத்திற்கு வந்த கமல்
snehan marriage
மணமகள் கழுத்தில் தாலி கட்டிய சினேகன்
snehan marriage
நெற்றியில் திலகமிட்ட ஆனந்தமான தருணம்
snehan marriage
அனைவரின் ஆசீர்வாதத்தோடு நடந்து முடிந்த திருமணம்
snehan marriage
மனமக்களுடன் கமல், பாரதி ராஜா, அமீர் உள்ளிட்டோர் அமர்ந்திருப்பதை பார்க்கலாம்
snehan marriage
சினேகன் - கன்னிகா ஜோடி.. கண்ணே பட்டுடும்