அக்கா..தந்தையுடன் தீபாவளி கொண்டாடிய சினேகா பிரசன்னாவின் தீபாவளி கொண்டாட்ட க்யூட் போட்டோஸ்
நட்சத்திர தம்பதிகளாக ஜொலித்து வரும் பிரசன்னா- சினேகா இருவரும் ஒவ்வொரு விழா கொண்டாட்டம் குறித்தான புகைப்படங்களையும் இன்ஸ்டாவில் பகிர்ந்து வருகின்றனர்.

sneha
சுகாஷினி என்னும் இயற்பெயருடன் சினிமாத்துறைக்கு அறிமுகமான சினேகா. தென்னிந்திய சினிமாவுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் சினேகா. மலையாள திரைப்படம் மூலம் அறிமுகமான இவர் என்னவளே மூலம் தமிழுக்கு என்ட்ரி கொடுத்தார். தொடர்ந்து ஆனந்தம், பார்த்தாலே பரவசம், பம்மல் கே சம்பந்தம், புன்னகை தேசம், உன்னை நினைத்து உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
sneha
பின்னர் வசீகரா, ஆட்டோகிராப், புதுப்பேட்டை, நான் அவன் இல்லை, பள்ளிக்கூடம் என பிரபல படங்கள் பலவற்றிலும் தோன்றி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து விட்டார்.
sneha
புன்னகை அரசியாக தனது அழகால் தொலைக்காட்சியில் நடுவராகவும் பங்கேற்று வருகிறார். தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து வந்தார். கடந்த 2011 ஆம் ஆண்டு நடிகர் பிரசன்னாவை காதல் திருமணம் செய்து கொண்டார். பெற்றோர்கள் சம்மதத்துடன் இவர்களது திருமணம் சென்னையில் நடைபெற்றது.
sneha
நட்சத்திர தம்பதிகளுக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். அச்சம் உண்டு படப்பிடிப்பின் போது இவர்களிடையே காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது. ஆனால் இது குறித்த செய்தியை முன்னர் மறுத்திருந்த இந்த ஜோடி பின்னர் தங்களது திருமணத்தை உறுதி செய்து அந்த கிசுகிசுவிற்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.
sneha
நட்சத்திர தம்பதிகளாக ஜொலித்து வரும் பிரசன்னா- சினேகா இருவரும் ஒவ்வொரு விழா கொண்டாட்டம் குறித்தான புகைப்படங்களையும் இன்ஸ்டாவில் பகிர்ந்து வருகின்றனர்.
sneha
முன்னதாக வரலட்சுமி, விநாயகர் சதுர்த்தி, பொங்கல் என அனைத்து புகைப்படங்களையும் வண்ண வண்ண உடைகள் அணிந்து கோலாகலமாக கொண்டாடிய வீடியோக்கள் மற்றும் போட்டோக்களை பகிர்ந்து வாழ்த்து பெற்றார்.
sneha
தற்போது தீபாவளி கொண்டாடிய புகைப்படங்களை பகிர்ந்துள்ளனர். தனது தந்தை மற்றும் அக்காவுடன் இருக்கும் புகைப்படத்தோடும் தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் கொண்டாட்ட போட்டோக்களையும் பகிர்ந்துள்ள இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.