- Home
- Cinema
- சினேகா - பிரசன்னா திருமணத்தில் வந்த பிரச்சனை; கல்யாணத்தை நடத்தி வெச்சதே இந்த பிரபலம் தானா?
சினேகா - பிரசன்னா திருமணத்தில் வந்த பிரச்சனை; கல்யாணத்தை நடத்தி வெச்சதே இந்த பிரபலம் தானா?
Sneha and Prasanna Marriage Faced a Big Problem: சினேகா மற்றும் பிரசன்னாவிற்கு திருமணம் நடக்க நானும் ஒரு முக்கிய காரணம் என பிரபல இயக்குனர் மற்றும் நடிகர் சேரன் தெரிவித்துள்ளார்.

ஆட்டோகிராப் ரீ-ரிலீஸ்:
இந்த வாரம், அதாவது வரும் நவம்பர் 14-ஆம் தேதி சேரன் நடித்து இயக்கி தேசிய விருதை பெற்ற 'ஆட்டோகிராப்' திரைப்படம் ரீ ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி, நடந்த நிலையில் இதில் சேரன் பேசிய தகவல்கள் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.
உதவி இயக்குனர்கள் பற்றி கூறிய சேரன்:
நிகழ்ச்சி மேடையில் பேசிய சேரன், 'என்னை பற்றி, என்னிடம் பணியாற்றிய உதவி இயக்குனர்களே நிறைய பேசினார்கள். என் வீட்டுக்கு உதவி இயக்குனர்கள் வந்தால் அவர்களை பட்டினியாக நானும் என் மனைவியும் அனுப்ப மாட்டோம். இருக்கும் உணவை அவர்களுக்கு போட்டுவிட்டு, நானும் என் மனைவியும் பட்டினியாக இருந்த நாட்கள் உள்ளன. அதே சமயம் அவர்கள் என்னை விமர்சிக்க எல்லா உரிமையையும் நான் கொடுத்து இருக்கிறேன்.
சினேகாவுடனான நட்பு:
அவர்களை என் மகன்கள் போல தான் நடத்துகிறேன். இப்போது மட்டும் அல்ல எப்போதும் அவர்கள் என்னை விமர்சிக்கலாம் என கூறினார். இதை தொடர்ந்து பேசும் போது, 'ஆட்டோகிராப்' திரைப்படத்தில் அழுத்தமான கதாபாத்திரத்தில், சேரனின் தோழியாக நடித்திருந்த நடிகை சினேகா பற்றியும் அவருடனான நட்பு பற்றியும் பேசினார்.
நம்பிக்கை கொடுத்த பாடல்:
எனக்கும் சினேகாவுக்குமான சுமார் 21 வருடங்கள் நட்பு உள்ளது. இந்த படத்தில் வரும் ஒவ்வொரு பூக்களுமே பாடல் எனக்கும் பலமுறை நம்பிக்கை கொடுத்து இருக்கிறது. சினேகா நிஜத்தில் அந்த பாடலை பாடி இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்பது என் விருப்பம். காரணம் இந்த பாடல் அவருக்கும் நம்பிக்கை கொடுத்து இருக்கும்.
சினேகா - பிரசன்னா திருமண சர்ச்சை:
ஒருவன் தோல்வி அடைந்துவிட்டால் அப்படியே கிடந்தது விட கூடாது, அதில் இருந்து மீண்டு எழுந்து நிற்க வேண்டும். அப்படி ஒரு உத்வேகத்தை கொடுக்க கூடிய படம் தான் 'ஆட்டோகிராப்' என்கிறார். தொடர்ந்து பேசும் போது... இதுவரை யாரும் தெரியாத ஒரு தகவலையும் கூறினார். அதாவது சினேகா, மற்றும் பிரசன்னா திருமணம் நடிக்க இவரும் ஒரு காரணமாக இருந்தாராம். இவர்கள் இருவரும் காதலித்தாலும், திருமணம் என வந்தபோது சில பிரச்சனைகள் தலைதூக்கி உள்ளது. அப்போது உங்களின் பிரச்சனைகளை பின்னர் பார்த்து கொள்ளலாம், முதலில் திருமணத்தை நடத்துவோம் என கூறி தைரியம் கொடுத்தாராம். சேரன் கூறிய இந்த தகவல் ரசிகர்களுக்கே ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.
மீண்டும் வெற்றிபெறுமா ஆட்டோகிராப்:
சேரன் இயக்கி, தயாரித்து, நடித்திருந்த இந்த படத்தில் சினேகா உட்பட கோபிகா, மல்லிகா, கனிகா என மொத்தம் 4 கதாநாயகிகள் நடித்திருந்தனர். 2004-ஆம் ஆண்டு வெளியான இந்த படம் சேரனுக்கு விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. பல்வேறு விருதுகளையும் பெற்று தந்தது குறிப்பிடத்தக்கது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடிய போது சேரன், ஆட்டோகிராப் படம் தான் தனக்கு கடைசி வெற்றி படம் என்றும், இந்த படத்திற்கு பின்னர் எடுத்த எந்த ஒரு படமும் ஓடவில்லை என கூறி இருந்தார். இந்த படம் ரீ ரிலீஸில் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.