- Home
- Cinema
- தூங்கிய எம்.எஸ்.வி… கோபத்தில் எம்ஜிஆருக்கு கண்ணதாசன் எழுதிய பாடல்.. பட்டிதொட்டியெங்கும் ஹிட்
தூங்கிய எம்.எஸ்.வி… கோபத்தில் எம்ஜிஆருக்கு கண்ணதாசன் எழுதிய பாடல்.. பட்டிதொட்டியெங்கும் ஹிட்
கவிஞர் கண்ணதாசனின் கோபம் மற்றும் இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனின் பதற்றத்தால் ஒரு பாடல் உருவானது. அந்தப் பாடல், ஒரு அவசரமான சூழலில் பிறந்து, காலத்தால் அழியாத சூப்பர் ஹிட்டாக மாறியது.

கண்ணதாசன் எம்.எஸ்.வி சம்பவம்
கோபம், பதற்றம், அவசரம்... இந்த மூன்றும் சேர்ந்து ஒரு காலத்தால் அழியாத பாடலை உருவாக்கிய கதை இது. தமிழ் சினிமாவில் பல பாடல்கள் ஹிட்டாகியுள்ளது. இதற்கு பின்னல் இருக்கும் கதை படத்தை விட சுவாரஸ்யமாக இருக்கும். அதுவும் சில பாடல்களின் பின்னணியில் இருக்கும் சம்பவங்கள், அந்தப் பாடலை விட சுவாரஸ்யமாக இருக்கும். அப்படிப்பட்ட ஒரு சம்பவம்தான், கவிஞர் கண்ணதாசன், இசையமைப்பாளர் எம். எஸ்.விஸ்வநாதன், நடிகர் எம்.ஜி.ஆர் ஆகியோர் இணைந்த ஒரு சூப்பர் ஹிட் பாடலின் பின்னணி.
எம்ஜிஆர் சூப்பர் ஹிட் பாடல் பின்னணி
1960-களில் வெளியான எம்.ஜி.ஆர், சிவாஜி படங்களின் பாடல்கள் இன்றும் மக்கள் மனதில் உயிரோடு இருக்கின்றன. அந்த உருவான பல பாடல்கள், இன்று “கிளாசிக்” என அழைக்கப்படுகின்றன. அந்த வரிசையில், பெரிய இடத்து பெண் படத்தில் இடம்பெற்ற ஒரு பாடல், ரசிகர்களால் மிகவும் கொண்டாடப்பட்டது. ஆனால் அந்தப் பாடல் உருவான விதம், யாரும் எதிர்பார்க்காத ஒரு சூழலில் நடந்தது என்பது பலருக்கும் தெரியாத உண்மை.
கண்ணதாசன் பாடல்
ஒரு நாள், எம்.எஸ்.விஸ்வநாதன் தொடர்ந்து மூன்று ரெக்கார்டிங்குகளை முடித்துவிட்டு, அதிகாலை 3 மணிக்குத்தான் ஓய்வெடுக்கச் சென்றிருக்கிறார். கடுமையான வேலை சோர்வால், அவர் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார். மறுநாள் காலையிலேயே பாடல் எழுதுவதற்காக கவிஞர் கண்ணதாசன் தயாராகிவிட்டார். வழக்கம்போல் எம்.எஸ்.வி-யிடம் பேசுவதற்காக அவர் வீட்டிற்கு தொலைபேசி செய்துள்ளார். ஆனால் போனை எடுத்த உதவியாளர், “ஐயா தூங்கிக் கொண்டிருக்கிறார்” என்று சொல்ல, கண்ணதாசனுக்கு கடும் கோபம் வந்தது.
எம்.எஸ்.விஸ்வநாதன் பேட்டி
ஒரு முறை அழைத்தால் சரி, மூன்று முறை அழைத்தும் அதே பதில் கிடைத்ததால், கவிஞர் கண்ணதாசன் பொறுமை இழந்தார். உடனே படத்தின் இயக்குநரிடம் பேசி, “எம்.எஸ்.விஸ்வநாதன் வந்தால், நான் எழுதிய பல்லவியை அவரிடம் கொடுத்து விடுங்கள். அவர் மெட்டு போடுவதற்கு, நான் வந்து அனுபல்லவி எழுதித் தருகிறேன்” என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார். இதை அறிந்த எம்.எஸ்.வி, தூக்கத்திலிருந்து பதறியபடி எழுந்து, குளிக்க கூட நேரமில்லாமல் நேராக இயக்குநரை சந்திக்க ஓடியதாக, பின்னர் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.
அவனுக்கென்ன தூங்கிவிட்டான் பாடல்
அந்த அவசரமான சூழ்நிலையில், கண்ணதாசன் எழுதிய பல்லவிக்கு எம்.எஸ்.வி மெட்டு போட்டார். அதுவே பின்னால், “அவனுக்கென்ன தூங்கிவிட்டான்… அகப்பட்டவன் நானல்லவா?” என்ற வரிகளுடன் தொடங்கும் பாடலாக மாறியது. எம்.ஜி.ஆர் நடித்த அந்தப் பாடல் வெளியாகியதும் சூப்பர் ஹிட்டானது. ஒரு கவிஞரின் கோபம், ஒரு இசையமைப்பாளரின் பதற்றம், ஒரு அதிகாலை ஓட்டம்... இவை எல்லாம் சேர்ந்துதான், இன்று வரை ரசிக்கப்படும் அந்த மறக்க முடியாத பாடல்கள் உருவானது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

