MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • அமரன் பிளாப் ஆகிடுமோனு பயந்தேன்; ரோல்மாடலாக இருந்த பாலா - நெகிழ்ந்த சிவகார்த்திகேயன்

அமரன் பிளாப் ஆகிடுமோனு பயந்தேன்; ரோல்மாடலாக இருந்த பாலா - நெகிழ்ந்த சிவகார்த்திகேயன்

பாலா இயக்கிய வணங்கான் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்ற நிலையில், அதில் சிறப்பு விருந்தினராக சிவகார்த்திகேயன் கலந்துகொண்டார்.

2 Min read
Author : Ganesh A
Published : Dec 19 2024, 07:50 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Arun Vijay, Sivakarthikeyan

Arun Vijay, Sivakarthikeyan

பாலா இயக்கத்தில் அருண் விஜய் ஹீரோவாக நடித்துள்ள படம் வணங்கான். இப்படத்தை சுரேஷ் காமாட்சியும், பாலாவின் பி ஸ்டூடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்து உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. வருகிற 2025-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வணங்கான் ரிலீஸ் ஆகிறது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது.

24
Vanangaan Audio Launch

Vanangaan Audio Launch

இந்த விழாவோடு இயக்குனர் பாலா திரையுலகில் அறிமுகமாகி 25 ஆண்டுகள் ஆனதை கொண்டாடினர். இதனால் இந்த விழாவுக்கு நடிகர் சூர்யா சிறப்பு விருந்தினராக வருகை தந்திருந்தார். அதுமட்டுமின்றி சிவக்குமார், சிவகார்த்திகேயன், மாரி செல்வராஜ், நிதிலன், இயக்குனர் மிஷ்கின், மணிரத்னம் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே வணங்கான் பட இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டது. இதில் பேசிய சிவகார்த்திகேயன் ஒரு சுவாரஸ்ய சம்பவத்தை பகிர்ந்துகொண்டார்.

இதையும் படியுங்கள்... அப்பாவுடன் சேர்ந்து பாலாவுக்கு தங்க சங்கிலியை பரிசளித்த சூர்யா!

34
sivakarthikeyan Speech

sivakarthikeyan Speech

அதன்படி அவர் பேசியதாவது : “தீபாவளிக்கு வெளியாகும் படங்களின் கிளைமாக்ஸ் நெகடிவ் ஆகவோ அல்லது சோகமாகவோ இருந்தால் படம் பிளாப் ஆகிவிடும் என்கிற பிம்பர் இங்கு இருக்கிறது. அதனாலேயே அமரன் பட கிளைமாக்ஸ் சோகமாக இருந்ததால் பயந்தேன். அதன்பின்னர் தான் பாலா சாரின் பிதாமகன் படம் சோகமான கிளைமாக்ஸ் உடன் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகி வெற்றி அடைந்ததை அறிந்து அது தனக்கு நம்பிக்கை தந்தது.

44
Sivakarthikeyan Praises Arun Vijay

Sivakarthikeyan Praises Arun Vijay

வருகிற பொங்கல் பண்டிகைக்கு அஜித் சாரின் விடாமுயற்சி, அருண் விஜய் நடித்த வணங்கான் ஆகிய படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆகிறது. இரண்டு படங்களுக்குமே முதல் எழுத்து V தான். Vனாலே Victory தான். இந்த இரண்டு படங்களும் மிகப்பெரிய வெற்றியடைந்து அடுத்த வருஷம் நன்றாக தொடங்க வாழ்த்துகிறேன். அருண் விஜய் அண்ணாவின் வெற்றிக்கு அவரின் கடும் உழைப்பு தான் காரணம். இந்த வணங்கான் படம் அவருக்கு ஒரு மைல்கல்லாக இருக்கும் என எதிர்பார்க்கிறேன்” என கூறினார்.

இதையும் படியுங்கள்...  சூர்யா முன்னாடி நான் சிகரெட் பிடிக்கவே மாட்டேன் – இயக்குநர் பாலா!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சிவகார்த்திகேயன்
Latest Videos
Recommended Stories
Recommended image1
சூர்யா - ஹெச். வினோத் மெகா கூட்டணி! புதிய படத்தின் அப்டேட்? ரசிகர்கள் குஷி!"
Recommended image2
கணவருக்கு காஸ்ட்லி பைக்; ரேவதியின் சர்ஃப்ரைஸ் கிஃப்ட்: காரணம் என்ன? கார்த்திகை தீபம் எபிசோடு அப்டேட்!
Recommended image3
Now Playing
AI-யையே மிஞ்சும் வேகம்! 45 நிமிடங்களில் 9 பாடல்களை செதுக்கிய இளையராஜா!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved