சிவகார்த்திகேயனின் SK20.. இன்று வெளியாகும் சூப்பர் அப்டேட்..
சிவகார்த்திகேயனின் SK20 ஃபர்ஸ்ட் லுக் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

SK 20
சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டான் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. கடந்த மே 13-ந் தேதி வெளியான இது படம் பாக்ஸ் ஆபிஸிலும் 100 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. முன்னதாக வெளியான டாக்டர் படமும் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்ததால் அவர் நடிக்கும் அடுத்த படங்கள் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் எஸ்.கே 20 குறித்த அப்டேட் வெளியாவது ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.
SK 20
எஸ்.கே 20 என் தாற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்குகிறார். இதில் நாயகியாக உக்ரைன் நாட்டு நடிகை மரியா நடித்து வருகிறார். இவர்களுடன் சத்யராஜ், பிரேம்ஜி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
SK 20
விஜய் 66 படத்தில் தமன் இசையமைக்கும் இப்படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். இறுதிக்கட்டத்தை எட்டி உள்ள எஸ்.கே.20 படத்தின் ரிலீஸ் தேதிவருகிற ஆகஸ்ட் 31-ந் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று ரிலீசாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
SK 20
இந்நிலையில் எஸ்.கே படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. முன்னதாக சிவகார்த்திகேயன் , நடிகை மரியா இருவரும் கலந்துகொண்ட படப்பிடிப்பு தள புகைப்படங்கள் வெளியாகி வைரலாகின. அந்த புகைப்படங்கள் பாண்டிசேரி சூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்டதாகும்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.