அஜித், விஜய் படங்களுக்கு நிகரான ஓப்பனிங்! பாக்ஸ் ஆபிஸில் பட்டைய கிளப்பும் டான் -முதல்நாள் வசூல் இத்தனை கோடியா?
DON BoxOffice Day 1 : அஜித்தின் வலிமை மற்றும் விஜய்யின் பீஸ்ட் படங்களுக்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டில் இந்த ஆண்டு வெளியான படங்களில் முதல் நாளில் அதிக வசூல் ஈட்டிய படம் என்கிற பெருமையை டான் பெற்றுள்ளது.
டாக்டர் படத்தின் வெற்றிக்கு பின்னர் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக வெளியாகி உள்ள படம் டான். நடிகர் சிவகார்த்திகேயன் கல்லூரி மாணவனாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். அறிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கி உள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் பால சரவணன், சிவாங்கி, மிர்ச்சி விஜய், முனீஸ்காந்த், எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரடக்ஷன்ஸ் நிறுவனமும், லைகா நிறுவனமும் இணைந்து தயாரித்திருந்த இப்படத்தை தமிழகம் முழுவதும் உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
விமர்சகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், இப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. நேற்று அதிகாலை 4 மணிக்கு இப்படத்தின் சிறப்பு காட்சி ஒளிபரப்பப்பட்டது. இதற்கு முன் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படம் 100 கோடிக்கு மேல் வசூலித்ததால் டான் படத்திற்கும் எதிர்பார்ப்பு அதிகரித்த வண்ணம் இருந்தது.
இந்நிலையில், டான் படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படம் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.11 கோடிக்கு மேல் வசூலித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஆண்டு வெளியான அஜித்தின் வலிமை மற்றும் விஜய்யின் பீஸ்ட் படங்களுக்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டில் முதல் நாளில் அதிக வசூல் ஈட்டிய படம் என்கிற பெருமையை டான் பெற்றுள்ளது.
இதையும் படியுங்கள்... Thamarai selvi :பிக்பாஸ் தாமரைச் செல்விக்கு புதுவீடு கட்டித்தரப்போவதாக அறிவித்த பிரபலம்.. குவியும் வாழ்த்துகள்