MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • அயலான் திரைப்படம் தாமதம் ஆவது ஏன்?... எப்பதான் ரிலீசாகும் - மனம்திறந்த சிவகார்த்திகேயன்

அயலான் திரைப்படம் தாமதம் ஆவது ஏன்?... எப்பதான் ரிலீசாகும் - மனம்திறந்த சிவகார்த்திகேயன்

பிரின்ஸ் படத்தின் புரமோஷனுக்காக பல்வேறு பேட்டிகளைக் கொடுத்து வரும் சிவகார்த்திகேயன், அயலான் படம் குறித்தும் மனம்திறந்து பேசி உள்ளார்.

2 Min read
Author : Ganesh A
Published : Oct 20 2022, 12:07 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

கோலிவுட்டில் பிசியான நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான டாக்டர் படமும், இந்த வருடம் வெளிவந்த டான் படமும் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதோடு ரூ.100 கோடிக்கு மேல் வசூலையும் வாரிக்குவித்தது. இதனால் இவர் நடிக்கும் படங்கள் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24

அந்த வகையில் தற்போது பிரின்ஸ் படத்தில் நடித்து முடித்துள்ளார் சிவகார்த்திகேயன். அனுதீப் இயக்கியுள்ள இப்படம் நாளை திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. கார்த்தியின் சர்தார் படத்துக்கு போட்டியாக இப்படம் ரிலீசாக உள்ளது. அதுமட்டுமின்றி சிவகார்த்திகேயன் நடித்த படம் தீபாவளிக்கு ரிலீசாவது இதுவே முதன்முறை.

34

இதுதவிர அயலான் படத்திலும் நடித்து முடித்துவிட்டார் சிவகார்த்திகேயன். கடந்த 2018-ம் ஆண்டே தொடங்கப்பட்ட இப்படத்தின் ஷூட்டிங், பல்வேறு தடைகளைக் கடந்து கடந்த ஆண்டு முடிக்கப்பட்டாலும், பின்னணி பணிகள் இன்னும் முடியாததால் ரிலீஸ் தாமதமாகி வருகிறது. பிரின்ஸ் படத்தின் புரமோஷனுக்காக பல்வேறு பேட்டிகளைக் கொடுத்து வரும் சிவகார்த்திகேயனிடம் அயலான் படம் குறித்தும் கேட்கப்பட்டது.

இதையும் படியுங்கள்... குடும்பத்தோடு பொன்னியின் செல்வன் படம் பார்த்த இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே - வைரலாகும் போட்டோஸ்

44

அப்போது பேசிய அவர், அயலான் படத்தில் கம்பியூட்டர் கிராபிக்ஸ் அதிகளவில் இருப்பதால் அதனை முடிக்க தாமதமாகி வருகிறது. தற்போது அந்த பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளதாகவும், படத்தை அடுத்த ஆண்டு கோடை விடுமுறை அல்லது ஜூலை மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.

அதுமட்டுமின்றி இப்படம் குறித்து மேலும் ஒரு சிறப்பம்சத்தை கூறிய சிவகார்த்திகேயன். இதன் கம்பியூட்டர் கிராபிக்ஸ் பணிகளை சென்னையை சேர்ந்த ஒரு நிறுவனம் தான் செய்து வருவதாகவும், படத்தில் பணியாற்றிய பெரும்பாலானோர் நம்ம தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் தான் என தெரிவித்துள்ளார். இன்று நேற்று நாளை படத்தின் இயக்குனர் ரவிக்குமார் தான் இப்படத்தையும் இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... AK 61 : நடிகர் அஜித் விரும்பாத செயல்! AK61 படத்தின் அப்டேட் கேட்டு கையில் பிளேடால் எழுதிக்கொண்ட ரசிகர்!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சிவகார்த்திகேயன்
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
(47.0 ov) 329 & 140/4
AUSAUS
429
Day 3
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
ஒரே ஒரு கையெழுத்தால் 100 கோடியை இழந்த அஜித் பட நடிகை... 1000 படங்களில் நடித்தவருக்கு இந்த நிலைமையா?
Recommended image2
ரத்தமும் சதையுமான மான்ஸ்டர் சேஸிங், திகில் விருந்து: ரூ.1,500 கோடி பாக்ஸ் ஆபீஸ் வசூல் வேட்டை; பாக்ஸ் ஆபிஸை புரட்டிப் போட்ட ஹோப்!
Recommended image3
Bigg Boss : டாஸ்குகளில் மைனிங் மாஃபியாஸை கதறவிட்ட கெள பாய்ஸ்... தன்யா - ஜேசன் இடையே வெடித்த மோதல்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved