அடுத்த பட இயக்குனரை மாற்றிவிட்டாரா சிவகார்த்திகேயன்? உருவாகும் புது கூட்டணி!
சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை வெங்கட் பிரபு அல்லது சிபி சக்கரவர்த்தி இயக்குவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அதில் அதிரடி மாற்றம் ஏற்பட்டுள்ளது.

Sivakarthikeyan next Movie Director : தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். அவர் நடிப்பில் தற்போது பராசக்தி, மதராஸி ஆகிய இரண்டு திரைப்படங்கள் உருவாகி வருகிறது. இதில் பராசக்தி திரைப்படத்தை சுதா கொங்கராவும், மதராஸி திரைப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸும் இயக்குகின்றனர். பராசக்தி திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கும், மதராஸி திரைப்படம் இந்த ஆண்டு செப்டம்பர் 5ந் தேதி திரைக்கு வர உள்ளன.
Actor Sivakarthikeyan
சிவகார்த்திகேயன் கைவசம் உள்ள படங்கள்
இதில் மதராஸி திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ருக்மணி வஸந்த் நடிக்கிறார். இப்படத்தில் வில்லனாக வித்யூத் ஜமால் நடித்துள்ளார். அதேபோல் பராசக்தி திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் உடன் ஸ்ரீலீலா நடிக்கிறார். இப்படத்தில் ரவி மோகன் வில்லனாக நடித்து வருகிறார். இப்படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பாக ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்து வருகிறார். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இது அவர் இசையமைக்கும் 100வது திரைப்படம் ஆகும். அதேபோல் மதராஸி படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
இதையும் படியுங்கள்... தளபதி விஜய்யிடமிருந்து துப்பாக்கியை கையில் வாங்கிய அதே நாள்! மதராஸி ரிலீஸ் தேதியை அறிவித்த SK!
Sivakarthikeyan Next Movie Director
SK-வின் அடுத்த பட இயக்குனர் யார்?
இந்த இரண்டு படங்களை முடித்துவிட்டு சிவகார்த்திகேயன் யாருடன் கூட்டணி அமைக்கப் போகிறார் என்பது தான் புரியாத புதிராக இருந்து வருகிறது. முன்னதாக சிபி சக்கரவர்த்தி சிவகார்த்திகேயனின் 24வது படத்தை இயக்க உள்ளார் என கூறப்பட்டது. ஆனால் அப்படம் தொடங்கும் முன்னரே கைவிடப்பட்டது. பின்னர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்பட்டது. பின்னர் அப்படமும் டேக் ஆஃப் ஆகவில்லை.
Karthik Subbaraj
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிக்கும் Sivakarthikeyan
இந்நிலையில் சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பை கார்த்திக் சுப்பராஜ் தட்டி தூக்கி உள்ளதாக கூறப்படுகிறது. ரஜினியை வைத்து பேட்ட, விக்ரமின் மகான், சூர்யா நடித்த ரெட்ரோ போன்ற படங்களை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ், சிவகார்த்திகேயனை சந்தித்து கதை ஒன்றை கூறி உள்ளாராம். அந்த கதை எஸ்.கே.வுக்கு பிடித்துப் போனதால் அவரும் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் எஸ்.கே.வின் அடுத்தபடத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படியுங்கள்... இலங்கையில் உருவான மதுரை ரயில் நிலையம்; பிரத்யேக செட்டில் பரபரக்கும் பராசக்தி ஷூட்டிங்!