சிவகார்த்திகேயன் பட நடிகைக்கு விரைவில் திருமணம்... மாப்பிள்ளை யார் தெரியுமா?
தற்போது சிவகார்த்திகேயன் பட நடிகைக்கு திருமணம் நடைபெற உள்ளது.
கொரோனா லாக்டவுன் முடிந்து அனைவரும் மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வரும் நிலையில், சின்னத்திரை, வெள்ளித்திரை பிரபலங்கள் பலருடைய திருமண அறிவிப்பு வெளியாகி வருகிறது. தற்போது சிவகார்த்திகேயன் பட நடிகைக்கு திருமணம் நடைபெற உள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த மனம் கொத்திப் பறவை படத்தில் அவருடன் நடித்தவர் ஆத்மியா. அதன் பின்னர் “போங்கடி நீங்களும் உங்க காதலும்”, தற்போது சமுத்திரகனியுடன் வெள்ளை யானை ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
தமிழில் பெரிதாக வாய்ப்புகள் கிடைக்காததால் மீண்டும் கேரளாவிற்கு திரும்பிய ஆத்மிகா. அமீபா, ஜோசப், விஜய் சேதுபதியுடன் மார்க்கோனி ஆகிய சில படங்களில் நடித்தார். அதோடு கொரோனா லாக்டவுன் காலத்தில் கால் சென்டரில் பணிபுரிந்து, மக்களுக்கு சேவை செய்ததற்காக பாராட்டுகளையும் பெற்றார்.
தற்போது ஆத்மியாவுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. கப்பலில் வேலை செய்யும் கேரள மாநிலம் கன்னூரைச் சேர்ந்த சனூப் என்பவரை கரம் பிடிக்கப்போகிறார்.
ஆத்மியா- சனூப் திருமணம் வரும் ஜனவரி 25ம் தேதி கன்னூரில் காலை 9.59 மணி முதல் 11.33 மணிக்குள் நடைபெற இருக்கிறது. பெற்றோர்கள் நிச்சயித்த இந்த திருமணத்தின் வரவேற்பு நிகழ்ச்சி, ஜனவரி 26-ம் தேதி அங்குள்ள நட்சத்திர ஓட்டலில் நடக்கிறது.