மதராஸி படத்தில் சிவகார்த்திகேயனுக்கு சம்பளமா? லாபத்தில் பங்கா? எத்தனை கோடி?
Sivakarthikeyan Madharaasi Movie Salary : சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள மதராஸி படம் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி திரைக்கு வரும் நிலையில் இந்தப் படத்திற்கு எத்தனை கோடி சம்பளம் வாங்கியிருக்கிறார் என்று பார்க்கலாம்..

Sivakarthikeyan Madharaasi Movie Salary : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இன்று உச்சம் தொட்டு நிற்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவருடைய நடிப்பில் கடந்த ஆண்டு திரைக்கு வந்த அமரன் படம் தான் சிவகார்த்திகேயனின் சினிமா வாழ்க்கையில் திருப்பு முனையை ஏற்படுத்தியது. இந்த படம் தான் ரூ.300 கோடிக்கும் அதிகமாக வசூல் குவித்து கொடுத்து சாதனை படமாக அமைந்தது. அதுவரையில் காமெடி ஹீரோவாக திகழ்ந்த சிவகார்த்திகேயன் இந்தப் படத்திற்கு பிறகு ஆக்ஷன் ஹீரோவாக அவதாரம் எடுத்தார்.
மேலும், கோலிவுட்டின் அடுத்த தளபதி என்றெல்லாம் அப்போது பேச்சு அடிபட்டது. இதற்கு முக்கிய காரணம் கோட் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்த சிவகார்த்திகேயனிடம் விஜய் துப்பாக்கியை கொடுப்பது தான். இதை வைத்து பல விதமான பேச்சு கோட் படம் வெளியான போது அடிபட்டது.
அமரன் படத்தின் சூப்பர் டூப்பர் ஹிட்டுக்கு பிறகு சிவகார்த்திகேயன் இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி படத்திலும், சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி படத்திலும் நடித்து வருகிறார். இதில் மதராஸி படம் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி திரைக்கு வரும் நிலையில் இந்தப் படத்திற்கு சிவகார்த்திகேயனுக்கு எத்தனை கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது என்பது பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
சிவகார்த்திகேயன் அயலான் படத்தின் போது ரூ.15 கோடி சம்பளம் பெற்றதோடு படத்தின் லாபத்தில் 40 சதவிகிதம் பங்கும் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதே போன்று கடந்த ஆண்டு திரைக்கு வந்த அமரன் படத்தில் அவருக்கு ரூ.30 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது படத்தின் பட்ஜெட்டில் 33 சதவிகிதம் ஆகும். மற்ற படங்களுக்கு ரூ.25 கோடி சம்பளம் பெற்று வந்த நிலையில் மதராஸி படத்திற்கு ரூ.40 கோடி சம்பளம் மட்டுமின்றி படத்தில் லாபத்திலும் பங்கு பெற இருப்பதாக கூறப்படுகிறது. எனினும் இது குறித்து எந்த அதிகாரப்பூர்வ தகவல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.