MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ‘மாஸ்டர்’ விஜய் லுக்கில் சிவகார்த்திகேயன்- வேறலெவல் போஸ்டருடன் பிரின்ஸ் பட ரிலீஸ் அப்டேட்டை வெளியிட்ட படக்குழு

‘மாஸ்டர்’ விஜய் லுக்கில் சிவகார்த்திகேயன்- வேறலெவல் போஸ்டருடன் பிரின்ஸ் பட ரிலீஸ் அப்டேட்டை வெளியிட்ட படக்குழு

Prince : அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சத்யராஜ், பிரேம்ஜி நடிப்பில் உருவாகி இருக்கும் பிரின்ஸ் படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

1 Min read
Author : Ganesh A
Published : Oct 01 2022, 02:00 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளிவந்த டாக்டர் மற்றும் டான் ஆகிய படங்கள் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து பிளாக்பஸ்டர் ஹிட் ஆகின. இதனால் அவர் நடிப்பில் தற்போது உருவாகி வரும் பிரின்ஸ் படத்துக்கும் அதிகளவில் எதிர்பார்ப்பு உள்ளது. பிரின்ஸ் படத்தை தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கி உள்ளார். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24

தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் இப்படம் தயாராகி உள்ளது. இப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக வெளிநாட்டு நடிகை மரியா நடித்துள்ளார். மேலும் பிரேம்ஜி, சத்யராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமன் இசையமைத்துள்ள இப்படத்தின் மூலம் சிவகார்த்திகேயன் தெலுங்கு திரையுலகில் அறிமுகமாக உள்ளார்.

இதையும் படியுங்கள்... 100 நாட்களை கடந்து வெள்ளி விழா கண்ட சிவாஜி கணேசனின் கிளாசிக் ஹிட் படங்களின் தொகுப்பு இதோ...

34

பிரின்ஸ் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் டூரிஸ்ட் கைடாக நடித்துள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. ஏற்கனவே இப்படத்தில் இருந்து பிம்பிலிகா பிலாபி என்கிற பாடல் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், விரைவில் இசை வெளியீட்டு விழாவும் பிரம்மாண்டமாக நடத்தப்பட உள்ளது.

44

இந்நிலையில், பிரின்ஸ் படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் மாஸ்டர் பட விஜய் போல் சிவகார்த்திகேயனின் தோற்றம் அமைந்துள்ளது. மேலும் அந்த போஸ்டரில் இப்படம் வருகிற தீபாவளி பண்டிகைக்கு ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன்மூலம் கார்த்தியின் சர்தார் படத்துடன் பிரின்ஸ் படம் மோத உள்ளது உறுதியாகி உள்ளது.

இதையும் படியுங்கள்... எட்டனா இருந்தா எட்டூரும் என் பாட்ட கேட்கும் - அதே பாடி லாங்குவேஜ் உடன் பாட்டுப்பாடி அசத்திய வடிவேலு

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சிவகார்த்திகேயன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Siragadikka Aasai : பதவி வெறியில் சிந்தாமணி போட்ட டீலிங்... தலைவி பதவியை தூக்கி எறிவாரா மீனா?
Recommended image2
Now Playing
சிகிச்சை பலனின்றி உயிரிழந்த மனைவி... வலி தாங்க முடியாமல் கதறி அழுத நடிகர் முத்துக்காளை !
Recommended image3
K Rajan: அடையாறு பாலத்தில் நடந்தது என்ன? கே.ராஜன் கார் டிரைவர் சொன்ன பகீர் தகவல்.! திடீர் முடிவுக்கு இதுதான் காரணமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved