ஜோராக நடைபெற்ற டான் வியாபாரம்..ஓடிடி உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்..
சிவகார்த்திகேயன் நடித்துள்ள டான் படத்தின் ஓடிடி ரிலீஸ் உரிமையை கைப்பற்றியுள்ளது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

don
டாக்டர் படத்தை தொடர்ந்து தற்போது சிவகார்த்திகேயன் அட்லீயிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் நடித்து முடித்துள்ளார்.
don
இப்படத்தின் டாக்டர் நாயகி பிரியங்கா மோகன், சமுத்திரக்கனி, எஸ்.ஜே.சூர்யா, சிவாங்கி, பால சரவணன், சூரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
don
நடிகர் சிவகார்த்திகேயன் கல்லூரி மாணவனாக நடித்துள்ள இந்த படத்திலிருந்து முன்னதாக அனிரூத் இசையமைப்பில் 3 பாடல்கள் வெளியாகி வைரலாகின.
DON
படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. கடந்த மார்ச் மாதம் 24-ந் தேதி ரிலீஸ் செய்வதாக இருந்தனர். பின்னர் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டு மே 13-ந் தேதி இப்படத்தை வெளியிட உள்ளதாக அறிவித்தனர்.
don
சமீபத்தில் ட்ரைலர் வெளியாகி மாஸ் காட்டிய டான் படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது.
DON
இந்நிலையில் சிவகார்த்திகேயனின் டான் படத்தின் ஓடிடி உரிமையை பிரபல நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. படம் வெளியாகி 4 வாரங்களுக்கு பின் நெட்பிளிக்ஸில் டான் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.