வெளிவந்த முதல் நாளே சூர்யாவை பின்னுக்கு தள்ளிய டான்...மிரளவைக்கும் சிவகார்த்திகேயன்..
சிவகார்த்திகேயனின் டான் திரைப்படம் முதல் நாள் வசூல் சூர்யாவின் சமீபத்திய வெளியீடான எதற்கும் துணிந்தவன் வசூலை மிஞ்சியுள்ளதாக தகவல் பரவி வருகிறது.

don
அட்லீயின் உதவி இயக்குனராக இருந்து அறிமுக இயக்குனராகியுள்ள சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி உள்ள படம் டான். இப்படத்தில், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். அனிரூத் இசையமைப்பில் முன்னதாக வெளியான 3 பாடல்கள் வரவேற்பை பெற்றது.
don
சிவகார்த்திகேயனுடன் சிவாங்கி, மிர்ச்சி விஜய், முனீஸ்காந்த், எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி பால சரவணன், உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இந்த படத்தை சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரடக்ஷன்ஸ் நிறுவனமும், லைகா நிறுவனமும் இணைந்து தயாரித்திருந்தது. தமிழகம் முழுவதும் உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
don
இந்த திரைப்படம் கலவையான விமர்சங்களை பெற்று தந்தாலும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி இருந்த டாக்டர் மற்றும் டான் பிளாக் பாஸ்டர் அடித்திருப்பது எஸ்கே ரசிகர்களிடையே கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
don
கடந்த 13-ம் தேதி வெளியான இந்த படத்தின் வசூல் குறித்த விவரம் வெளியாகியுள்ளது. இந்த படம் முதல் நாளில் ரூ.9+ கோடிளவிலும், இரண்டாம் நாள் முடிவில் 20 கோடியையும் ,உலகம் முழுவதும் ரூ.35 கோடியையும் வசூலித்துள்ளதாம். முன்னதாக சூர்யா நடிப்பில் வெளியாகி இருந்த எதற்கும் துணிந்தவன் முதல் நாளில் ரூ. 7 கோடியை பெற்றிருந்த நிலையில், டான் ஓப்பனிங்கிலேயே 9 கோடியை தட்டி தூக்கி மாஸ் காட்டியுள்ளது.