MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Sivakarthikeyan : பேசியதைவிட டபுள் மடங்கு சம்பளமா? சிவகார்த்திகேயன் குறித்து அதிர வைக்கும் தகவல்

Sivakarthikeyan : பேசியதைவிட டபுள் மடங்கு சம்பளமா? சிவகார்த்திகேயன் குறித்து அதிர வைக்கும் தகவல்

Sivakarthikeyan Salary Controversy : நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது நடிக்க கமிட்டாகி உள்ள எஸ்.கே.27 படத்திற்காக தன்னுடைய சம்பளத்தை கிடுகிடுவென உயர்த்துவிட்டதாக தகவல் பரவி வருகிறது.

2 Min read
Author : Ganesh A
Published : Sep 29 2026, 02:00 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Sivakarthikeyan Salary
Image Credit : Facebook

Sivakarthikeyan Salary

விஜய் டிவியில் தொகுப்பாளராக தனது பயணத்தை தொடங்கி, பின்னர் சினிமாவில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து, ‘மெரினா’ திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் சிவகார்த்திகேயன். தொடர்ந்து ‘மனம் கொத்திப் பறவை’ உள்ளிட்ட படங்களில் நடித்த அவர், ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கினார்.

அதன் பின்னர் வெளியான ‘ரஜினி முருகன்’ திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து சிவகார்த்திகேயனின் மார்க்கெட் வேகமாக உயர்ந்ததாகக் கூறப்படுகிறது. முன்னணி நடிகர்களின் வரிசையில் இடம்பெற்ற அவர், குறுகிய காலத்திலேயே தனது சம்பளத்தையும் கணிசமாக உயர்த்தியதாக திரையுலகில் பேசப்பட்டது.

மகன்களோடு முதன்முறையாக ஃபாரின் ட்ரிப் சென்ற சிவகார்த்திகேயன் - வைரலாகும் வெகேஷன் போட்டோஸ்

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
சிவகார்த்திகேயன் மீது எழும் புகார்கள்
Image Credit : X

சிவகார்த்திகேயன் மீது எழும் புகார்கள்

அதேநேரத்தில், சிவகார்த்திகேயனின் படங்கள் மற்றும் சம்பளம் தொடர்பாக சில விமர்சனங்களும் அவ்வப்போது எழுந்துள்ளன. குறிப்பிட்ட படங்களில் நடிப்பதாக ஒப்புக்கொண்ட பிறகு படப்பிடிப்பு தொடங்குவதில் தாமதம் ஏற்படுவதாகவும், ஒரு தயாரிப்பாளரிடம் ஒப்புக்கொண்ட படத்திற்கு பதிலாக வேறு படங்களில் கவனம் செலுத்துவதாகவும் சில குற்றச்சாட்டுகள் இருப்பதாக கூறப்படுகிறது.

தற்போது சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் உருவாகும் ‘சேயோன்’ திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இதைத் தொடர்ந்து சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், ‘பார்க்கிங்’ பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கும் புதிய படத்தில் அவர் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சமீபத்தில் இந்த புதிய படத்திற்கான பூஜை நடைபெற்றதாக கூறப்படுகிறது. அதில் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த தியாகராஜனும் கலந்து கொண்டார். ஆனால், அந்த நிகழ்ச்சியில் அவரது முகத்தில் எதிர்பார்த்த அளவுக்கு உற்சாகம் காணப்படவில்லை. இதற்கு பின்னணியில் சிவகார்த்திகேயனின் சம்பளம் மற்றும் ஏற்கனவே நடந்ததாகக் கூறப்படும் சில விஷயங்கள் இருப்பதாக தற்போது கோலிவுட்டில் பேசப்படுகிறது.

34
ரூ.35 கோடியிலிருந்து ரூ.60 கோடியாக உயர்ந்த சம்பளம்?
Image Credit : X

ரூ.35 கோடியிலிருந்து ரூ.60 கோடியாக உயர்ந்த சம்பளம்?

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருந்ததாகவும், அந்த படத்திற்காக அவருக்கு சுமார் ரூ.35 கோடி சம்பளம் பேசப்பட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன. ஆனால், பின்னர் தனது தற்போதைய மார்க்கெட்டுக்கு ஏற்ப ரூ.60 கோடி சம்பளம் வேண்டும் என்று சிவகார்த்திகேயன் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாம். இதனால் தயாரிப்பு நிறுவனத்துக்கு கூடுதலாக சுமார் ரூ.25 கோடி செலவு ஏற்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், அந்த திட்டம் அறிவியல் புனைவு பின்னணியில் உருவாக இருந்ததாகவும், அதற்கான வி எஃப் எக்ஸ் மற்றும் தொழில்நுட்ப பணிகள் தொடர்பாக அமெரிக்கா உள்ளிட்ட இடங்களில் சில வேலைகள் நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது. இதற்காக தயாரிப்பாளர் தரப்பில் கணிசமான தொகை செலவிடப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

44
ஆரம்ப காலத்திலேயே சம்பளம் உயர்த்தினாரா?
Image Credit : X

ஆரம்ப காலத்திலேயே சம்பளம் உயர்த்தினாரா?

இந்நிலையில், வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாக இருந்த அந்த படம் பின்னர் வேறு பாதைக்கு சென்றதாக கூறப்படுகிறது. தற்போது ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் புதிய படம் உருவாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் மாற்றம் மற்றும் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் செலவுகள் தயாரிப்பாளர் தரப்பில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கலாம் என வலைபேச்சு சேனலில் சொல்லி இருக்கிறார்கள்.

சிவகார்த்திகேயன் தனது சம்பளத்தை படத்தின் தொடக்கத்தில் பேசப்பட்ட தொகையை விட பின்னர் உயர்த்தியதாக கூறப்படும் தகவல்கள் புதிதல்ல என்றும் சில திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ‘ரஜினி முருகன்’ படத்திற்காக ஆரம்பத்தில் சுமார் ரூ.1 கோடி சம்பளம் பேசப்பட்டதாகவும், படப்பிடிப்பு தொடங்கும் நேரத்தில் அந்த தொகை ரூ.5 கோடியாக உயர்ந்ததாகவும் தகவல்கள் உலா வந்தன.

அதேபோல் ‘மிஸ்டர் லோக்கல்’ படத்திற்காக முதலில் ரூ.1 கோடி அளவில் சம்பளம் பேசப்பட்டதாகவும், பின்னர் தனது மார்க்கெட் மாறிவிட்டதாகக் கூறி சுமார் ரூ.10 கோடி சம்பளம் பெற்றதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

Sivakarthikeyan : ஆர்த்திக்கு முத்தத்தை பரிசாக கொடுத்த சிவகார்த்திகேயன் - வைரலாகும் வெட்டிங் டே கிளிக்ஸ்

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சிவகார்த்திகேயன்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Bigg Boss : அஸ்மிதாவிடம் அடிதடியில் இறங்கிய சாவின்யா... குமரனுக்கு செம டோஸ் கொடுத்த லட்சுமி பிரியா - சூடுபிடிக்கும் பிக் பாஸ்
Recommended image2
Panaiyur : மினி கோடம்பாக்கமாக மாறிய பனையூர்... ஒரே ஏரியாவில் இத்தனை சினிமா பிரபலங்கள் வசிக்கிறார்களா?
Recommended image3
Attakathi Dinesh : அம்பலமான அட்டக்கத்தி தினேஷின் ரகசிய காதல்... அவர் காதலிக்கும் அந்த தொகுப்பாளினி யார்?
Related Stories
Recommended image1
தனுஷால் தொடங்கிய பயணம்.! விருது விழாவில் எமோஷ்னல் ஆன சிவகார்த்திகேயன்.!
Recommended image2
கோடிகளில் புரளும் ‘சிவகார்த்திகேயன்’ சொத்து மதிப்பு இத்தனை கோடியா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved