MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Sivakarthikeyan : ஆர்த்திக்கு முத்தத்தை பரிசாக கொடுத்த சிவகார்த்திகேயன் - வைரலாகும் வெட்டிங் டே கிளிக்ஸ்

Sivakarthikeyan : ஆர்த்திக்கு முத்தத்தை பரிசாக கொடுத்த சிவகார்த்திகேயன் - வைரலாகும் வெட்டிங் டே கிளிக்ஸ்

Sivakarthikeyan - Aarthy Wedding Anniversary : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயனின் திருமண நாள் கொண்டாட்ட புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.

2 Min read
Author : Ganesh A
Published : Aug 27 2026, 03:02 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
சிவகார்த்திகேயன்   ஆர்த்தி ஜோடி
Image Credit : Instagram

சிவகார்த்திகேயன் - ஆர்த்தி ஜோடி

சிவகார்த்திகேயனும் ஆர்த்தியும் காதலித்து திருமணம் செய்துகொண்டவர்கள். உறவினர் வட்டாரத்தில் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் நெருக்கமான நட்பாகவும், பின்னர் காதலாகவும் மாறியுள்ளது. இருவரின் காதலுக்கும் குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்ததைத் தொடர்ந்து திருமணம் நடைபெற்றது. திரையுலகில் படிப்படியாக முன்னேறி இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராக சிவகார்த்திகேயன் வளர்ந்துள்ள நிலையில், இந்தப் பயணத்தில் தனது குடும்பத்தின் ஆதரவு மிகப்பெரிய பலமாக இருந்ததாக அவர் பல சந்தர்ப்பங்களில் தெரிவித்துள்ளார். தற்போது இந்தத் தம்பதிக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.

மகன்களோடு முதன்முறையாக ஃபாரின் ட்ரிப் சென்ற சிவகார்த்திகேயன் - வைரலாகும் வெகேஷன் போட்டோஸ்

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
திருமண நாள்
Image Credit : instagram/Aarthysivakarthikeyan

திருமண நாள்

படப்பிடிப்பு மற்றும் சினிமா பணிகளுக்கு இடையே கிடைக்கும் நேரத்தை குடும்பத்தினருடன் செலவிடுவதையும் சிவகார்த்திகேயன் முக்கியமாகக் கருதுகிறார். குடும்பத்துடன் இருக்கும் சில அழகான தருணங்களை அவ்வப்போது சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொள்வதும் உண்டு. பிரபலங்களின் தனிப்பட்ட வாழ்க்கையைச் சுற்றி அவ்வப்போது பல்வேறு தகவல்கள் மற்றும் வதந்திகள் பரவுவது வழக்கம். ஆனால், சிவகார்த்திகேயன் - ஆர்த்தி இருவரும் இதுபோன்ற விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் தங்களது குடும்ப வாழ்க்கையை அமைதியாக முன்னெடுத்து வருகின்றனர்.

தனுஷால் தொடங்கிய பயணம்.! விருது விழாவில் எமோஷ்னல் ஆன சிவகார்த்திகேயன்.!

34
வைரலாகும் போட்டோஸ்
Image Credit : instagram/Aarthysivakarthikeyan

வைரலாகும் போட்டோஸ்

சிவகார்த்திகேயனின் வெற்றிப் பயணத்தில் ஆர்த்தியின் பங்களிப்பும் ஆதரவும் முக்கியமானது. ஆர்த்தி இன்ஸ்டாவில் ஆக்டிவ் ஆக இல்லாவிட்டாலும், அவர் அதில் புகைப்படங்களை பதிவிடும்போதெல்லாம் அது டிரெண்டாகிவிடும். அந்தவகையில், இன்று சிவகார்த்திகேயனும், ஆர்த்தியும் தங்களது 16வது திருமண நாளை கொண்டாடுகிறார்கள். அதற்காக இருவரும் மாறி மாறி முத்தமிட்டு தங்கள் அன்பை பகிர்ந்துகொண்டபோது எடுத்த புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ஆர்த்தி, அந்த புகைப்படங்கள் தற்போது செம வைரலாகி வருகிறது.

மகன்களுக்கு மொட்டை போட்டு திருச்செந்தூரில் சாமி தரிசனம் செய்த சிவகார்த்திகேயன்...!

44
சிவகார்த்திகேயனின் சேயோன்
Image Credit : x/@ikamalhaasan

சிவகார்த்திகேயனின் சேயோன்

இதற்கிடையே, சிவகார்த்திகேயன் தனது அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். அவர் நடிப்பில் உருவாகி வரும் 'சேயோன்' திரைப்படத்தை 'தாய் கிழவி' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான சிவகுமார் முருகேசன் இயக்குகிறார். கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. கிராமத்து பின்னணியை மையமாகக் கொண்டு உருவாகும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

'அமரன்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்துடன் சிவகார்த்திகேயன் மீண்டும் இணைந்துள்ள திரைப்படம் என்பதால், 'சேயோன்' படத்தின் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு ஏற்கனவே அதிகரித்துள்ளது. புதிய கதைக்களம் மற்றும் கிராமத்து பின்னணியில் சிவகார்த்திகேயனை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

எனக்கு மூளை ரொம்பவே கம்மி தான்; போன கூட யூஸ் பண்ண தெரியாது: வெகுளியா பேசிய டான் சிவகார்த்திகேயன்!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சிவகார்த்திகேயன்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Bigg Boss கொடுத்த புதிய டாஸ்க்கால் வெடிக்கும் சண்டை! லட்சுமி பிரியாவை கதறவிட்ட முனியம்மாள்... செம நோஸ் கட் வாங்கிய முத்தழகி
Recommended image2
படம் பார்க்கும் முன்பே கதையை சொல்லிய தமிழ் பட போஸ்டர்கள்... இதையெல்லாம் கவனிக்காமல் விட்டுட்டோமே!
Recommended image3
Top 10 Theatres in Chennai : சென்னையில் உள்ள டாப் 10 பெஸ்ட் தியேட்டர்கள் என்னென்ன? ஏஜிஎஸ் முதல் சத்யம் வரை முழு லிஸ்ட் இதோ
Related Stories
Recommended image1
Now Playing
ஒரு திரைப்படம் மக்களிடத்தில் சென்றாலே அது Pan India தான் ! நடிகர் சிவகார்த்திகேயன் பேட்டி
Recommended image2
கோடிகளில் புரளும் ‘சிவகார்த்திகேயன்’ சொத்து மதிப்பு இத்தனை கோடியா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved