MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • விஜய் டிவியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் டாப் 5 பிக் பட்ஜெட் சீரியல்கள் பற்றி தெரியுமா?

விஜய் டிவியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் டாப் 5 பிக் பட்ஜெட் சீரியல்கள் பற்றி தெரியுமா?

Vijay Tv Top 5 High Budget Serials: ரசிகர்களின் மனம் கவர்ந்த சீரியல்களை ஒளிபரப்பி வரும், விஜய் டிவியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில், அதிக பட்ஜெட்டில் எடுக்கப்படும் டாப் 5 சீரியல்கள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

2 Min read
Rsiva kumar
Published : Nov 05 2025, 03:23 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
Image Credit : Vijay Television You Tube

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

இந்த லிஸ்டில் முதலிடத்தில் இருப்பது மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்களுடன் ஒளிபரப்பாகி வரும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' தொடர் தான். இந்த சீரியலின் முதல் பாகத்துக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, இரண்டாவது பாகம் கடந்த 2023-ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. இந்த தொடர் உறவு, காதல், கூட்டுக்குடும்பம் என ஜனரஞ்சகமான கதை களத்தில் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் ஸ்டாலின் முத்து கதையின் நாயகனாகவும், நிரோஷா அவருக்கு ஜோடியாகவும் நடித்து வருகிறார். 2 பெண் பிள்ளைகள் மற்றும் 3 ஆண் பிள்ளைகளை பெற்ற தாய் தந்தையின் அன்பின் அடையாளமாக இந்த தொடர் உள்ளது. அதே போல் இந்த சீரியலில் 3 மருமகள்களுக்கு மாமியாராக நடித்து வரும் நிரோஷாவை பார்த்து நமக்கு இப்படி ஒரு மாமியார் இல்லையே என கவலை படும் மருமகள்களும் உள்ளது. அந்த அளவுக்கு பலரின் மனதையும் இந்த தொடர் கவர்ந்துள்ளது. இந்த சீரியல் தான் விஜய் டிவியில் அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு வருகிறதாம்.

25
சிறகடிக்க ஆசை:
Image Credit : youtube/vijaytelevision

சிறகடிக்க ஆசை:

2-ஆவது இடத்தில் உள்ளது, 'சிறகடிக்க ஆசை'. வெற்றி வசந்த் ஹீரோவாக நடித்து வரும் இந்த சீரியலில் இவருக்கு ஜோடியாக கோமதி பிரியா நடித்து வருகிறார். மேலும் ஆர் சுந்தர் ராஜன், அனிலா குமார், சல்மா, உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். எந்த ஒரு சூழலிலும் கணவனுக்கு துணை நிற்கும் மனைவியாக நடிக்கும் கோமதி பிரியா பல ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகியாக மாறி விட்டார். இந்த 2023-ஆம் ஆண்டு துவங்கப்பட்ட நிலையில் தற்போது வரை வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. TRP-யிலும் ஒவ்வொரு வாரமும் கெத்து காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

35
சின்னமருமகள்:
Image Credit : X/vijaytelevision

சின்னமருமகள்:

கடந்த ஆண்டு துவங்கப்பட்ட முக்கிய சீரியல் தான் 'சின்னமருமகள்'. ஒரு டாக்டராக ஆசைப்படும் பெண்ணின் கனவை சிதைக்கும் விதமாக, அவரை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார் ஹீரோ. இந்த திருமணத்தை நிறுத்த அந்த பெண் போலீசாருக்கு போன் போட அதுவே அந்த பெண்ணின் திருமண வாழ்க்கைக்கு பிரச்சனையாக மாறுகிறது. பின்னர் அதில் இருந்து மீண்டு கணவருடன் ஒன்று சேர மீண்டும் அவர்கள் திருமண வாழ்க்கையில் விரிசல் விழுகிறது. எல்லாவற்றையும் கடந்து, குழந்தைக்கு தாயாகவும், தன்னுடைய மருத்துவ படிப்பையும் தமிழ் செல்வி முடிப்பாளா? என்பதே நோக்கி இந்த சீரியல் நகர்ந்து வருகிறது. இந்த தொடரும் அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு வருகிறதாம்.

45
தனம்:
Image Credit : Twitter

தனம்:

விஜய் டிவியில் இந்த ஆண்டு துவங்கப்பட்ட தொடர் தான் 'தனம்'. இந்த சீரியலில் சத்யா தியாகராஜன் ஹீரோயினாக நடிக்க, ஸ்ரீ ஹீரோவாக நடித்தார். இந்த தொடரின் கதைக்களத்தில், ஸ்ரீ இறந்தது போல் காட்டப்பட்டதால், ஒரு பெண் கணவர் இறந்த பின்னரும் கூட... கணவரின் கனவை நிறைவேற்ற ஆட்டோ ஓட்டி எப்படி குடும்பத்தை காப்பாற்றுகிறாள் என்பதே கதைக்களமாக உள்ளது. தனத்தின் இரண்டாவது திருமணத்தை நோக்கி தற்போது இந்த சீரியல் நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்த சீரியல் பெருபாலும் அவுட் டோரில் அதிகம் எடுக்கப்பட்டு வருவதால்... இதன் பட்ஜெட் அதிகம் என கூறப்படுகிறது.

55
சிந்து பைரவி:
Image Credit : hot star

சிந்து பைரவி:

5-ஆவது இடத்தில் இருப்பது 'சிந்து பைரவி' தொடர். இந்த ஆண்டு துவங்கப்பட்ட இந்த தொடரின் கதைக்களம் என்னவென்றால் அக்கா சிந்து, சிறு வயதில் இருந்தே நண்பராக பழகிய சிவாவை எப்படியும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என எண்ணி, பொய் சொல்லி திருமணம் செய்து கொள்கிறார். இதனால் சிவா தன்னுடைய காதலை இழக்க நேரிடுகிறது. பைரவி அக்காவுக்கு திருமணம் செய்ய இருந்த மாப்பிள்ளையை இஷ்டம் இல்லாமல் திருமணம் செய்ய நேர்கிறது. இவர்கள் எப்படி இணைந்து வாழ போகிறார்கள் என்பதை எதிர்பாராத திருப்பு முனையோடு ஒளிபரப்பாகி வருகிறது. இளம் ரசிகர்களின் மனம் கவர்ந்த தொடராகவும் சிந்து பைரவி உள்ளது குறிப்பிடத்தக்கது.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
விஜய் தொலைக்காட்சி
தமிழ் நடிகைகள்
தமிழ் சினிமா
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved