- Home
- Cinema
- செல்ஃபி எடுக்க வந்தது குத்தமா? லைவ் ஷோவில் ரசிகைக்கு பச்சக்குனு லிப்கிஸ் அடித்த 70 வயது பாடகர்!
செல்ஃபி எடுக்க வந்தது குத்தமா? லைவ் ஷோவில் ரசிகைக்கு பச்சக்குனு லிப்கிஸ் அடித்த 70 வயது பாடகர்!
பிரபல முன்னணி பாடகர் ஒருவர், தன்னுடன் செல்ஃபி எடுக்க வந்த ரசிகரின் முகத்தை திருப்பி உதட்டில் முத்தம் கொடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுவரைக்கும் 2000-திற்கும் மேற்பட்ட பாடல்கள்
பிரபல பின்னணி பாடகரான உதித் நாராயண், நேபாளத்தை சேர்ந்தவர். பாலிவுட்டில் ஏராளமான பாடல்களை பாடி உள்ள இவர்... தமிழ், தெலுங்கு, கன்னடம், ஒடியா, நேபாளி, போஜ்புரி, பெங்காலி, உள்ளிட்ட பிற மொழிகளிலும் 2000-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். சிறந்த பாடகருக்கான தேசிய விருதை நான்கு முறை வென்றுள்ள உதித் நாராயண், ஐந்து முறை ஃபிலிம் பேர் விருதையும் வென்றுள்ளார்.
உதித் நாராயண் விருதுகள்
அதே போல், இவரின் கலை திறமைக்கு மகுடம் சூட்டும் விதத்தில், மத்திய அரசு பத்ம பூஷன், பத்மஸ்ரீ போன்ற விருதுகளையும் வழங்கி கௌரவித்துள்ளது. 1980ல் பாலிவுட்டில் பின்னணி பாடகராக தன்னை நிலைநிறுத்தி கொள்ள ஏராளமான போராட்டங்களை சந்தித்த இவர்பின்னர் யுனிக் பீஸ் திரைப்படத்தின் மூலம் பின்னணி பாடகர் ஆக அறிமுகமானார். இவரின் தனித்துவமான குரல் வலம் இவரை மிக குறுகிய காலத்தில் முன்னணி பாடகராக மாற்றியது.
2024 தமிழ் சினிமாவுக்கு மோசமான ஆண்டு; இத்தனை கோடி நஷ்டமா? ஷாக்கிங் ரிப்போர்ட்!
உதித் நாராயண் பாடிய தமிழ் பாடல்கள்
தமிழிலும் இவர் பாடிய பாடல்கள் அனைத்தும் பட்டையை கிளப்பின. தமிழில் இவரை பாடகராக அறிமுகப்படுத்திய பெருமை AR ரகுமானை தான் சேரும். காதலன் படத்தில், 'காதலிக்கும் பெண்ணின்' என் தொடங்கும் பாடலை SPB-யுடன் இணைந்து பாடி இருந்தார். இதை தொடர்ந்து, முத்து படத்தில் இடம்பெற்ற குலுவாலிலே, ரட்சகன் படத்தில் இடம்பெற்ற சோனியா சோனியா, என இவர் பாடிய பாடல்கள் தொடர்ந்து நல்ல வரவேற்பை பெற்றன. இதுவரை தமிழில் மட்டும் சுமார் 100-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.
உதித் நாராயண் முதல் மனைவி ரஞ்சனா
இவர் எந்த அளவுக்கு பிரபலமோ... அதே அளவுக்கு சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாத பிரபலமாகவும் பார்க்கப்படுகிறார். சொந்த வாழ்க்கையிலே சில பிரச்சனைகளை மேற்கொண்டார். 1985-ல் இவர் தீபா என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில், 2006-ல் ராஞ்சனா என்பவர் நான் தான் உதிதியின் முதல்மனைவி என கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். ஆரம்பத்தில் இதை மறுத்த உதித் நாராயணன் பின்னர் ஒப்புக்கொண்டார். 1984-ல் அவரிடம் இருந்து விவாகரத்து பெற்றதாக கூறிய நிலையில், பின்னர் அவரின் பராமரிப்பு செலவுகளை ஏற்பதாக தெரிவித்தார்.
சன் டிவி சீரியல் ஹீரோ அஸ்வின் கார்த்திக்கிற்கு குழந்தை பிறந்தது! குவியும் வாழ்த்து!
சொந்த வாழ்க்கையில் உதித் சந்தித்த பிரச்சனை
இவரை விவாகரத்து செய்த பின்னரே தீபாவை திருமணம் செய்தார். இவர்களுக்கு ஆதித்யா நாராயண் என்கிற மகன் உள்ள நிலையில், அவரும் பின்னணி பாடகராக உள்ளார். பிற மொழிகளில் 2000-திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ள, உதித் நாராயனுக்கு மிக பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது.
லைவ் ஷோவில் ரசிகைக்கு முத்தம்:
சில வருடங்களாக பின்னணி பாடகர் என்பதை தாண்டி, லைவ் ஷோ நிகழ்ச்சிகளிலும் அவரின் ஹிட் பட பாடல்களை பாடி வருகிறார். அந்த வகையில், அண்மையில் நடந்த லைவ் ஷோவில், உதித் நாராயணன் பாடி கொண்டிருக்கும் போது அவருடன் செல்ஃபி எடுக்க பல ரசிகர்கள் போட்டி போட்டனர். அப்போது, பெண் ரசிகர்களுக்கு செல்ஃபி போஸ் கொடுத்ததோடு மட்டும் இன்றி, முத்த மழையும் பொழிந்தார். ஒரு ரசிகை செல்ஃபி எடுத்த பின்னர், கன்னத்தில் முத்தமிட்ட நிலையில் அவரின் தலையை திருப்பு உதித் நாராயணன் உதட்டில் முத்தமிட்ட வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தி நாராயணனின் இந்த செயலுக்கு பலர் தங்களின் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.
காதலியை கரம்பிடித்தார் ரம்யா பாண்டியனின் சகோதரர் பரசு! வைரலாகும் போட்டோஸ்!